ஈசி முந்திரி பர்பி

தேதி: May 31, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

முந்திரிபருப்பு -1கப்
சர்க்கரை -1கப்
நெய் -1/4கப்


 

முந்திரிபருப்பை தண்ணீர் சிறிது சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் 1/4கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.பாகு கம்பிபதம் வந்தவுடன் முந்திரிவிழுது சேர்த்து கட்டிவிழாமல் கிண்டவும்.
நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறி திரண்டுவரும்பொழுது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் வில்லைகளாக போட்டு வேறுதட்டில் எடுத்துவைக்கவும்.


விரும்பினால் கலர் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்