ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு லெட்டர் ஸ்டாண்டு செய்வது எப்படி?

தேதி: June 1, 2009

5
Average: 4.3 (6 votes)

இந்த அழகிய ஐஸ்க்ரீம் குச்சி லெட்டர் ஸ்டாண்டின் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

ஐஸ்க்ரீம் குச்சி
சின்ன ரோஸ்
ஃபேப்பரிக் பெயிண்ட் நிறங்கள் - பச்சை, நீலம்
விதவிதமான நிறத்திலும், அளவிலும் உள்ள கற்கள்
ப்ரெஷ்
பெவிக்கால்

 

லெட்டர் ஸ்டாண்டு செய்வதற்கு குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் மூன்று ஐஸ்க்ரீம் குச்சிகளை எடுத்து சமமான இடைவெளி வைத்து அடுக்கிக் கொள்ளவும். அதன் மேல் மற்றொரு இரண்டு குச்சிகளை எடுத்து இருமுனைகளிலும் பெவிக்கால் வைத்து ஒட்டிக் கொள்ளவும். பிறகு நடுவில் ஒரு குச்சியை வைத்து ஒட்டும்பொழுது சமமான இடைவெளிவிட்டு ஒட்டவும்.
இதேப் போல் மூன்று செட் ஐஸ்க்ரீம் குச்சிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு குச்சியை வைத்து அதன் இரண்டு முனைகளிலும் ஒரு குச்சியை சற்று சாய்வாக படத்தில் காட்டியுள்ளது போல் வைத்து ஒட்டவும். முதல் வரிசை வைத்தப்பிறகு அதன் மேல் பெவிக்கால் தடவி மற்றொரு குச்சிகளை வைத்து இதேப் போல் ஒட்டிக் கொள்ளவும்.
இதைப் போல் அடுத்தடுத்து குச்சிகளைக் கொண்டு 12 வரிசைகள் வரும்படி வைத்து ஒட்டிக் கொள்ளவும்
12 வரிசைகள் வைத்து ஒட்டியதும் செய்திருக்கும் ஐஸ்க்ரீம் குச்சியின் முன்பக்கத்தில் மூன்று ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து ஒரு இன்ச் அளவு இடைவெளி விட்டு ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு இதனை திருப்பி வைத்து வரிசையாக நான்கு குச்சிகளை இடைவெளி இல்லாமல் ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது லெட்டர் ஸ்டாண்டின் அடிப்பாகம் தயார்.
முன்பே செய்து வைத்திருக்கும் மூன்று செட் ஐஸ்க்ரீம் குச்சிகளில் ஒன்றை நடுவில் வைக்கவும். அதன் மையப் பகுதியில் மற்ற இரண்டு செட் ஐஸ்க்ரீம் குச்சிகளை மேலொன்றும், கீழ்லொன்றுமாக வைத்து ஒட்டி காய விடவும்.
இவை காய்ந்தப் பின்னர் செய்து வைத்திருக்கும் லெட்டர் ஸ்டாண்டின் அடிப்பாகத்தினை எடுத்து நான்கு குச்சிகள் இடைவெளியில்லாமல் ஒட்டிய பகுதியினை பின்புறம் வரும்படி வைத்து பெவிக்கால் தடவிக் ஒட்டிக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளது போல் இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளை எடுத்து முன்பக்கத்தில் பெருக்கல் குறியீடுப் போல் ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு அவரவர் விருப்பப்படி பலநிறங்களில் உள்ள கற்களையும், சின்ன ரோஸையும் வைத்து ஒட்டி லெட்டர் ஸ்டாண்டை அலங்கரித்துக் கொள்ளவும்
ஸ்டோன் ஒட்டிய இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெவ்வேறான நிறங்களைக் கொண்டு விரும்பிய டிசைன்கள், பூ, இலைகள் வரைந்துக் கொள்ளலாம்.
அழகிய ஐஸ்க்ரீம் குச்சி லெட்டர் ஸ்டாண்டு ரெடி. விருப்பமுள்ளவர்கள் லெட்டர் ஸ்டாண்டு முழுவதும் பெயிண்ட் செய்து காயவிடவும். பிறகு வேண்டிய டிசைகள், பூக்கள் மற்றும் இலைகள் வரைந்து அலங்கரிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

உங்கள் கைவேலைகள் எல்லாமே அழகு கவிப்ரியா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta