இரட்டைசதம் அடித்த நம்ம வனிதாவை வாழ்த்தலாம் வாங்க!

வனிதா சுவையான 200குறிப்புகள் குடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் இதுபோல் பல100குறிப்புகள் குடுக்க வாழ்த்துகிறேன்.

வாழ்த்துகள் பல இன்னும் பல சதங்கள் அடிக்க்வும், சிரிவாவை தொடரவும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஆஹா செல்வி... நானே கவனிக்கல, நீங்க கவனிச்சு இழை துடங்கி இருக்கீங்க. இன்னைக்குதான் இதை தங்கை சொன்னான்னு செய்து பார்த்தேன், சரி சேர்ப்போம்'னு வந்தேன். 200 ஆயிடுச்சுன்னு உங்க பதிவை பார்த்த பின் தான் தெரியுது. நான் ஒழுங்கா அறுசுவை பக்கம் வரலன்னாலும் என்னை மறக்காம இருக்க அறுசுவை குடும்பத்தின் அன்பு மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி செல்வி. குழந்தை நலமா? வீட்டு பாடம் அவளே செய்கிறாளா?

அன்பு சகோதரர் திரு ஹைஷ்... மிக்க நன்றி. சிரியாவை பற்றி விரைவில் தொடர வேண்டும், விரைவில் முடிக்கவும் வேண்டும். :) பார்ப்போம் நேரம் அமையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்,அதற்குள் செல்வி முந்திவிட்டார்கள்,யார் தொடங்கினால் என்ன?அருமையான குறிப்புக்கள் கொடுத்து அசத்திய சிரியா வனிக்கு பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா. :) நான் சிரியா விட்டு போனா கூட சிரியா என் பேரை விட்டு போகாது போலும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா... நானும் உங்களை வாழ்த்த வந்திருக்கிறேன்.. (வாழ்த்த மட்டுந்தான், வம்பிழுக்க இல்லை... )... உங்க குறிப்புகள் செய்வதற்கு எளிமையாக இருக்கின்றன... நன்றி... உங்க பகுதி சமைத்து அசத்தலாம் வரும் போது நிறைய செஞ்சு பாக்கணும்ன்னு இருக்கேன்... இன்னும் நிறைய குடுங்க (குறிப்பு தான்) :-)..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வாழ்த்துக்கள் வனிதா. நீண்ட நாற்களாச்சு உங்க சிரியா பற்றிய பதிவைப் பார்த்து.

பிருந்தா

ஹாய் வனிதா,
உங்கள் இரண்டு சதத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து, பல சதங்களைத்தொட வாழ்த்துக்கள்.

இன்றுதான் உங்க பிறந்தநாள் த்ரெட்டை பார்த்தேன் வனிதா! மீண்டும் ஒருமுறை இங்கேயும் என் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி சுஹைனா. எங்கே சில காலமாக அறுசுவை பக்கம் காணோம்? நலமா?

பிருந்தா மிக்க நன்றி. :) சிரியா பதிவுகள் எங்கே போனதுன்னு நானும் இனி தான் தேடனும்.

சுஸ்ரீ மிக்க நன்றி. பிறந்த நாள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அங்கேயே சொல்லி இருப்பேன், ஆனால் மீண்டும் அத்தலைப்பு மேலே வந்து விடும், புதிய தலைப்புகள் உள்ளே போய்விடும், அதான் இங்கேயே சொல்கிறேன். :)

மிசஸ் சேகர் என்ற சந்தனா.... நலமா? நானும் குழந்தையும் நலம். நேராக வந்து வம்பிழுக்கும் திருமதி ஹுசைன் ரொம்ப நல்லவங்க.... ;) சிலர் நான் நல்லவங்கன்னு சொல்லி தெரிஞ்சும் தெரியாத மாதிரி வம்பிழுக்கிறது ரொம்ப அநியாயம் இல்ல??!!! ச... இத உங்க கிட்ட சொல்றனே... நீங்க தான் ரொம்ப ரொம்ப நல்லவங்க ஆச்சே.... ;) அப்படி தானே சந்தனா??!! மிக்க நன்றி சந்தனா.... உங்களுக்காக அதிரா கிட்ட சொல்லி சீக்கிரமே என் குறிப்புகள் சமைத்து அசத்தலாம் பகுதியில் வர ஏற்பாடு செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆசியா அவங்க 'சிரியா' வனி இல்லை, சிரிக்கிற வனி.
உங்களுக்கு நன்றி சொல்லிச் சிரிச்சிருக்கிறாங்க, பதிவைப் பாருங்க. :-)

இருநூறு குறிப்புக்கள் கொடுத்ததையிட்டு என் வாழ்த்துக்கள் வனிதா. :)

இன்று உங்கள் சமீபத்திய பதிவுகள் சில படித்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. (ஆனால் ஏதோ புரிகிறது.)
பார்த்துவிட்டுப் பார்க்காததுபோல் இருக்க முடியவில்லை. உங்கள் நலனுக்காக என் பிரார்த்தனைகள். எப்பொழுதும் சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருங்கள். எதுவானாலும் எல்லாம் நலமாகும்.

மிகுந்த அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

வனிதா இரண்டு சதத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

மேலும் சில பதிவுகள்