வெங்காய சட்னி

தேதி: June 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 5
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக வதக்க வேண்டும்.
ஆறியபின் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவேண்டும். கடைசியாக தக்காளி சேர்த்து ஒரு சுத்து சுத்தவும்.
மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். இட்லி தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


காரத்திற்கு தகுந்தாற்போல் மிளகாயை கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம். பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாய் கூட சேர்த்து அரைக்கலாம். தேங்காய் சேர்க்காமலும் அரைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

லதா சொல்லிக் கொடுத்தது புளிபோட்ட வெங்காய சட்னி இது வித்தியாசமான சுவையோடு இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்த்து.

மிகவும் நன்றி.

அன்பு என்பது எந்த ஒன்றையும்
உடலாலோ மனதாலோ
இணைத்துப்பிடித்துக் கொண்டு இருப்பது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உங்களின் அன்பான பின்னூடத்திற்கு மிக்க நன்றி. வாசகங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Thanks

RAVI

RAVI

ரவி நீங்கள் எதற்கு நன்றி சொன்னீர்கள் என்று தெரியலை.....இருந்தாலும் என் குறிப்பை செய்து பார்த்து நன்றி சொன்னதாகவே எடுத்து கொள்கிறேன். உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. ரொம்பவே லேட் இருந்தாலும் நன்றி சொல்ல நேரம் காலம் இல்லை இல்லையா?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!