பாம்பே சட்னி

தேதி: June 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். கடலைமாவை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
பின்பு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து சிறிது கெட்டியானதும் இறக்கவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hi..:):)
iniku dinner indha chutney thanga...:)supera vandhurukku... thnku so much.. hey na dhosaiku senjane.. dhosaiku supera irukku...:):)

உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. ரொம்பவே லேட் இருந்தாலும் நன்றி சொல்ல நேரம் காலம் இல்லை இல்லையா?

தமிழில் எழுதிருந்தால் இன்னும் சந்தோஷ பட்டிருப்பேன் :(

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!