சன்னா பூரி குருமா

தேதி: June 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

வெங்காயம் - 3
தக்காளி - 3
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 6
கசகசா - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
முந்திரி - 6
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துருவல் - அரை கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
கொண்டைக்கடலை - 200 கிராம்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
இலை - பாதி
சோம்பு - அரை தேக்கரண்டி
அன்னாசிப் பூ சிறியது - ஒன்று
ஏலக்காய் - ஒன்று


 

வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை இரண்டையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, முந்திரி, கசகசா, தேங்காய் துருவல், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கசகசாவிற்கு பதிலாக பொட்டுக்கடலை சேர்த்தும் அரைக்கலாம்.
வாணலியில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒன்றரை மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, இலை, சோம்பு, அன்னாசிப் பூ, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
அதில் கறிவேப்பிலையை போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு 1/4 தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கி 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் மூடியை திறந்து அரைத்த விழுதை சேர்த்து மிக்ஸியில் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி மூடி வைக்கவும்.
2 நிமிடம் கழித்து திறந்து அதில் தக்காளியை போட்டு நன்கு கிளறி விடவும்.
பிறகு அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். 6 நிமிடம் கழித்து மூடியை திறந்து மசித்த உருளைக்கிழங்கை போடவும்.
உருளைக்கிழங்கை போட்ட பிறகு கரண்டியால் கிளறி விட்டு மேலே கொத்தமல்லித் தழையை தூவி ஒரு தட்டை வைத்து மூடி விடவும்.
2 நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்கு வாசனை வந்ததும் ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும். சுவையான சன்னா பூரி குருமா ரெடி.
இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாந்தி முத்துராமலிங்கம் </b> அவர்கள். சிறு வயதிலிருந்தே சமையலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், பழங்கால சமையல், இக்கால நவீன சமையல் என்று அனைத்திலும் திறன் படைத்தவர். வகை வகையான உணவுகளை வித்தியாசமாக மட்டுமல்லாது, சுவைப்பட தயாரிக்கக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரெசிப்பி
பார்க்கவே தெரிகிறது சூப்பராகவே இருக்கும். கொஞ்சம் கஸ்டப்பட்டுச் செய்யவேண்டும், செய்துமுடித்தால் அருமையான கறியாகவே இருக்குமென்று தெரிகிறது.கஸ்டப்பட்டாலும் செய்துபார்க்கப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

திருமதி சாந்தி
இன்று உங்க சன்னா பூரி குருமாசெய்தென் மிகவும் நன்றாக இருந்தது