அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்,
நான் இந்த தளத்திற்கு புதிது நான் இப்போது 12 வாரம் கர்ப்பமாக உள்ளேன் நான் தனியாக என் கணவருடன் உள்ளேன் எனக்கு ஒருசில நேரங்களில் வயிறு வலி வறுகிறது சிறுநீர் கழிக்கும் போது ஓருசில நேரங்கழில் வெள்ளை படுகிறது ஆனால் அடிவயிற்றில் வலி இல்லை
நான் இந்தியாவில் இருக்கும் போது எனக்கு 7வாரத்தில் ஸ்கேன் எடுத்து பார்த்தோம் குழந்தை நன்றாக உள்ளது ஆனால் உடனே கிளம்பி பெல்ஜியம் வந்தோம் இங்கு இன்னும் டாக்டரை பார்க்கவில்லை இந்த மாதம் 15ம் தேதி தான் போகனும் எனக்கு ஒரு சில நேரம் பயமாக உள்ளது எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே.
அன்புடன் சோமா
ஹாய் சோமா
ஹாய் சோமா
கர்பமானதும் முதல் சில வாரங்கள் மாதவிலக்கு சமயத்தில் வரும் வலி போல அடிவயிறு வலியும் பிறகு மெல்ல வயிறு முழுக்க வலியும் பெரும்பாலானவர்களுக்கு வரும்...ஆனால் பொறுத்துக் கொள்ளக் கூடிய வகையில் லேசான வலியாக தான் இருந்து கொண்டே இருக்கும் அடிக்கடி...அப்படியென்றால் பரவாயில்லை..வெள்ளைபடுதலும் சிலருக்கு இருக்கும் என்றாலும் சீக்கிரம் ஒரு மருத்துவரை கண்டு இரண்டையும் பேசி தெளிவிபடுத்தி கொள்ளுங்கள்.வழ்த்துக்கள்
வணக்கம் தோழி சோமா!!
வணக்கம் தோழி சோமா!!
இதில பயப்ப்பிட தேவையில்லை .... வெள்ளைப்படுவதும் நோர்மல் தான்.அடிவயிற்று வலியும் சிலருக்கு 3 மாதம் வரை இருக்கும் சிலருக்கு நீடிக்கும். தாலிகா சொன்னது போல் அந்த வலியை நம்மால் தாங்கி கொள்ள முடியும் . ரொம்ப கூடுதலான வலி என்றால் டாக்டர் கிட்ட போவது நல்லதுன்னு நினைக்கிறன்.
Iam also..
Hi Soma,
Congrats..
Iam also staying in Belgium only.. Where r u in Belgium? So that i can guide u...
எனக்கு
எனக்கு பதில் அளித்த தோழிகளுக்கு நன்றி. நான் பெல்ஜியத்தில் லூவனில் உள்ளேன். நீங்கள் எங்கு உள்ளீர்கள் தெரியப்படுத்தவும்
அன்புடன் சோமா
வாழ்த்துக்கள் சோமா....
முதல் மூன்று மாதங்களில் பயணத்தை தவிர்த்திருக்க வேண்டும். கிளம்பிடீங்க பரவாயில்லை......வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அதுவும் கற்ப காலத்தில் பயணம் செய்யும் முன் இன்சூரன்ஸ் மற்றும் விவரங்களை கவனித்து விட்டு தான் கிளம்பனும்.
கற்ப காலத்தில் வரும் வயிற்று வலி ரொம்ப சகஜம். வலி தாங்கமுடியாமல் இருந்தால், வலியுடன் இரத்த போக்கு, ஜுரம், குளிர் நடுக்கம், மயக்கம், சிறுநீர் கழிக்கும் போது அசொவகரியம், வலி சிறிது நேரத்தில் குறையாவிட்டால் மருத்தவரை அணுகவும்.
ஹார்மோன் சுரப்பு அதிகமான காரணத்தினால் வெள்ளை படும். அதுவும் சகஜமே.
சிக்கிரமே ஒரு நல்ல மருத்தவரை அணுகவும்.
போலிக் ஆசிட் மாதிரி எதுத்து கொள்ளுங்கள். மற்றும் மல்டிவிட்டமின் அல்லது இரும்பு மற்றும் கால்சியம் மாத்திரை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் கர்ப்பம் என்று உறுதி படுத்திய மருத்துவர் என்ன மாத்திரை தந்தாரோ அது எங்கு கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள்.
Ms. Moorthy
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
போலிக் அசிட்
அன்பு தோழிகளுக்கு வணக்கம்
நான் போலிக் அசிட் மாத்திரை மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரை எடுத்துக்கொண்டுள்ளேன். 7வது மாதம் இந்தியா செல்லலாம் என்று இருக்கேன். எனக்கு தங்களது ஆலோசனை தேவை.
ஆன்புடன் சோமா
Hi Soma Iam also in
Hi Soma
Iam also in leuven only... I delivered my daughter in helig hart hospital only... U may go to gasthuisberg also.. here the docters r very very very good.. not like in india.. they take very good care of u...
the name of the tablet wht u get here is omnibionta folic acid tablet... u may go to the docter and consult there...
need any help or any doubt u may ask me..
bye..
7வது மாதம் இந்தியா செல்ல உள்ளேன்
வணக்கம் தோழிகளே
நான் மருத்துவரை சந்தித்தேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தோம் குழ்ந்தை நன்றாக உள்ளது. டவுண் சின்ட்ரம் செய்து பார்த்தோம். பிரச்சனை எதுவும் இல்லை. நான் இப்பொழுது omnibionta மத்திரை எடுத்துக்கொள்கிரேன். எனக்கு இப்பொழுது 13வது வாரம் நடக்குது. நான் 7வது மாதம் இந்தியா செல்ல உள்ளேன்.எத்தனை வாரத்தில் விமான பயணம் செய்யலாம்.
அன்புடன்
சோமா
வாழ்த்துக்கள் சோமா
நீங்கள் தாராளமாய் 7 மாததில் பயணம் செய்யலாம்.நான் 7 மாததில் தான் சென்ரேன்.விமானத்தில் உட்கார்ந்தே இல்லாமல் நிரைய நடக்கவும்.மேலும் விவரம் வேனும் என்ட்ரால் தொடர்பு கொள்ளுன்க்ள்.
Anbe Sivam
Anbe Sivam
பதில் தாருங்கள்
வணக்கம் தோழி,
7வது மாத முடிவில் செல்லலாமா அல்லது 7வது மாதத் துவக்கத்திலேயே செல்ல வேண்டுமா? பதில் தாருங்கள்
அன்புடன்
சோமா