எழுத்தில் ஆர்வமே இல்லை

எனது மூன்று வயது மூன்று மாதமான மகளுக்கு எழுத்தில் ஆர்வமே இல்லை..எப்படி எழுத்தில் ஆர்வம் கொண்டு வருவது??
தற்பொழுது நர்சரி போவதால் அங்கு எழுத்து இல்லை..அடுத்த வருடம் மொத்தமாக படிக்க வைப்பார்கள் அதனால் இப்பொழுதே சில வார்த்தைகள் எழுத பழக்கலாம் என்றால் முடிவதில்லை..
கிறுக்கோ கிறுக்கு என்று கிறுக்குகிறாள் நோட்டில் தவிற எழுதுவதில்லை..நான் கைய்யை பிடித்து தான் எழுத வைக்கிறேன் ஆனால் அவல் நினைத்த மாதிரி பலமாக கிறுக்கிவிடுவாள் என் கைய்யும் சேர்த்து
என் கணவருக்கு எழுத்தில் ஆர்வமே இல்லை அது போலவே மகளுக்கும் இல்லை...மற்றபடி மற்ற விஷயங்களை எளிதில் புரிந்து கொள்கிறாள்..
கலர்கலராக எழுத வைத்தும் கை பிடித்தும் பல பல பெரிய எழுத்துகள் வாங்கியும் ட்ரை பன்னிவிட்டேன்..என்னை தான் எழுது வரை என்று சொல்கிறாள் தவிற அவள் கிறுக்க தான் செய்கிறாள்..
எப்படி ஆர்வம் கொண்டுவருவது அல்லது இந்த வயதில் எழுத தெரியாதோ??

தளிகா,

இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க முயற்சி செய்யாதீங்க. பள்ளியில் டீச்சர் சொல்லித்தந்து, எல்லாரும் எழுதும்போது, தானே ஆர்வம் வரும். எழுதத் தொடங்கி விடுவாள். நீங்க இப்பவே எழுது, எழுதுன்னு சொன்னா அவளுக்கு அப்புறம் ஆர்வம் போயிடும்.

நிறைய பேர் வீட்டிலேயே லெட்டர்ஸ், நம்பர்ஸ் எல்லாம் எழுத சொல்லிக் கொடுத்து பின் பள்ளியில் சேர்க்கிறார்கள். ஏற்கனவே தெரிந்ததையே பள்ளியிலும் சொல்லித்தந்தால் பிள்ளைகளுக்கு வகுப்பில் கவனிக்கும் ஆர்வம் வராது. பள்ளி போகவும் இன்டெரஸ்ட் இருக்காது.

என் மூத்த மகனுக்கு இதே தவறு செய்தேன், ஆர்வக்கோளாறால். இளையவனுக்கு நான் எதுவுமே எழுதச் சொல்லிக்கொடுக்கவில்லை. அவன் தினமும் பள்ளி போய்வந்து "இன்று இது சொல்லிக் கொடுத்தார்கள். அது சொல்லிக் கொடுத்தார்கள்" என்று ஆர்வத்துடன் சொல்வான்.

ஆனால் வரையச் சொல்லுங்கள். எல்லா ஷேப்ஸ் (சர்க்கிள், சதுரம், முக்கோணம்), சின்னச் சின்ன மரம், வீடு, கார், கார்ட்டுன் போல் ஆட்கள், டி.வி., என்று தினமும் பார்க்கும் விஷயங்களை வரைந்து கலர் செய்யச் சொல்லுங்கள். எழுதும்போது திருத்தமாக எழுத உதவும்.

அதுபோல ஏ எழுதச் சொல்லிகொடுப்பதற்குப் பதில், ஆப்பிளை வரையச் சொல்லுங்கள். பின்னர் அதைக் குறிக்க ஏ எழுதச் சொல்லுங்கள்.

Mrs.hussain சொல்வது போல் இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க முயற்சி செய்யாதீங்க. பள்ளியில் டீச்சர் சொல்லித்தந்து, எல்லாரும் எழுதும்போது, தானே ஆர்வம் வரும். எழுதத் தொடங்கி விடுவாள். நீங்க இப்பவே எழுது, எழுதுன்னு சொன்னா அவளுக்கு அப்புறம் ஆர்வம் போயிடும்.மேலும் schoolல் முதலில் லைன்ஸ் சொல்லிக் கொடுத்து, பிறகு தான் letters சொல்லிக் கொடுப்பார்கள். அப்பொழுது அவளுக்கு தானாகவே easy ஆக வந்து விடும்.Don"t worry.leave her to learn with play.That is crate more interest to her.

கிறுக்குகிறாள் என்று கவலை வேண்டாம், அப்பொழுது தான் free hand ஆக எழுத வரும்.U tell her not to scribble always da like that. நிறைய கலரிங் பிக்கசர்ஸ் வாங்கிக் கொடுத்து முடிந்த வரை வெளியில் மட்டும் படாமல், கலர் பண்ண சொல்லுங்கள்.கலர் பண்ணுவதற்கு crayons கொடுக்கவும்.

Non-stick,safe & non-toxic clay வாங்கிக் கொடுங்கள். அதை வைத்து ஏதாவது simple ஆன (shapes,fruits)things செய்யத் தூண்டுங்கள்.இது தான் free hand muscular activity.

நன்றி ஹுசேன்&கீதா
பக்கத்து வீட்டு பிள்ளைகள் ஸ்கூள் விட்டு வந்து மணிக்கணக்காக ஹோம் வர்க்குக்காக படும்பாடு கண்டால் பாவமாக இருக்கும்..இப்பவே பழக்கிவிட்டால் பின்னாளில் சீக்கிரம் ஹோம் வர்க் முடித்து விடுவாள் என்று பேராசை பட்டு விட்டேன்:-D
நீங்கள் சொன்ன விஷயத்தை பற்றி நான் யோசிக்காமல் இருந்து விட்டேன் இனி நானும் அவள் போக்கில் விட்டு வரைய விடுகிறேன்...

தளிகா, நீங்கள் உங்கள் 3 வயது மகளிடம் நிறையவே எதிர்பார்கிறீர்கள். எனது மகன் 4 வயதில் தான் அழகாக எழுதவே தொடங்கினார். ரொம்பவும் push பண்ண வேண்டாம். அவர்கள் போக்கிலே விடவேண்டும்.
எனது ஒரு நெருங்கிய உறவினர் வந்தால் அவர் பேரனை பற்றி மிகவும் பெருமையடிப்பார். நானும் அவர் சொல்வதைப் பார்த்து எனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக எழுத்துகள், நம்பர்ஸ் என்று எல்லாம் சொல்லிக்கொடுத்தேன் ஆனால் ஒரு பயனும் இல்லை. எனது கணவர் என்னை திட்டுவார்.
இப்போது என் மகன் pre-k இல் எல்லா லெட்டர்ஸ், numbers எல்லாம் எழுதுவார். பழக வேண்டிய நேரத்தில் அவர்களாகவே பழகுவார்கள். நீங்கள் பக்கத்தில் இருந்து சும்மா விளையாட்டாக எழுதினால் உங்கள் மகளுக்கும் ஆர்வம் வரும்.

நான் ஒரு முறை Dentist க்கு போனேன். என் மகனும் கூடவே இருந்தார். என் பிள்ளைக்கு போர் அடிக்கும் என்று ஒரு பேப்பரும், கலர் பென்சிலும் எனது டாக்டர் குடுத்தார். எனது மகனுடன் பேச்சு கொடுத்த படியே எனது பற்களை கிளீன் பண்ணினார். அப்போது எனது மகனிடம் டாக்டர் கேட்டார் M எழுத தெரியுமா என்று, எனது மகனுக்கு அப்போது தான் 3 வயது, என் மகன் தெரியாது என்று சொல்ல, அவர் சொன்னார், " Draw a line up, then down, again up and down". It was very simple and sounded very funny to my son. He smiled and followed his instructions and drew his first "M".

. அதிலிருந்து எனது மகனுக்கு ஆர்வம் வந்து விட்டது. அதன் பிறகே எழுத்துக்கள் எழுத விருப்பம் வந்தது.

வாணி

ஹாய் வாணி

நீங்க சொல்ல தான் எனக்கு புரியுது..நீங்க வேற நான் ஏ மட்டும் தான் நான் எழுதி அத மேல் கைபிடித்து எழுத சொல்லி கொடுத்திருக்கேன்..அதுவும் கிறுக்கி விடுவாள்..நீங்க சொன்னமாதிரி அக்கம்பக்கத்தில் சிலர் 3 வயதில் பிள்ளைகள் பயங்கரமா எழுதுது எஙிறார்கள் நான் கூட பயந்து விட்டேன் ப்லே க்ரூப் போகும் பிள்ளையே அப்படி எழுதுதாம் நர்சரி போகும் பிள்ளை அப்ப எழுத தெரியாமல் இருக்கே என்று|:-D...இப்ப தான் சமாதானமா இருக்கு

என் அம்மா இன்னமும் சொல்லி காட்டுவாங்க.......எனக்கு எழுதுவதென்றால் வேபங்காயா கசக்குமாம். படிகறதேல்லாம் தலைகீழ் மனபாடம். வீடு தரையில் போஸ்டர் தானாம். ஆனால் இப்பொழுது முத்து முத்தாக எழுதுவேன். எதை பார்த்தாலும் வரைவேன்.

ஆகையால் குழந்தையை அவள் போக்கிற்கே விட்டு விடுங்கள். கட்டாயம் நன்றாக எழுதுவாள்......அவள் கிறுகல்களை சேகரித்து ஆல்பம் செய்யுங்கள். அதை அவள் 12 பிறந்தநாளுக்கு பரிசாக கொடுங்கள்.

அவளின் கிறுக்கலை பாராட்டுங்கள். ரொம்ப நல்ல வரையறீங்க நீங்க வரைந்ததையே அம்மா இப்போ வரைந்து காட்டடும்மா என்று சரியாக எப்படி வரைவது என்று சொல்லி கொடுங்க.

முதலில் standing line, sleeping line, sliding to left, sliding to right, curved line இதெல்லாம் சொல்லி கொடுங்க. square, rectangle, circle, triangle அதெல்லாம் வரைந்து கொடுத்து கலர் பண்ண சொல்லவும். அதையும் சேர்த்து வைங்க. முதலில் அவங்க பேனா பென்சில் பிடித்து பழகட்டும்.

நிறைய வெப்சைட்ஸ் இருக்கு......உங்களுக்கு உதவ.....

http://www.dltk-teach.com/alphabuddies/index.html
http://www.scribd.com/doc/2932660/WORKSHEET
http://www.printactivities.com/TracingLetters/Tracing_CapLetters.html
http://www.tlsbooks.com/primarycolorshapes.pdf
http://www.printactivities.com/Tracing.html

உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

ஒரு கேள்வி......எப்படி நீங்க எவ்ளோ பொறுமையா இவ்ளோ டைப் பண்றீங்க.....ரொம்ப பொறுமைதான் உங்களுக்கு.....

Ms. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தளிகா எப்படி இருகீங்க?... உங்க உடல் நலம் இப்போ எப்படி இருக்கு?...காலையிலே இதற்க்கு பதில் போடனும்னு நினைத்தேன் அதற்குள் ஸ்குலுக்கு லேட்... ஆனா உங்க பதிவை தான் இன்னைக்கு இனைச்சுட்டே இருந்தேன்... எல்லாம் ஒரு அனுபவம் தான்!!!போன வருடம் நானும் இப்படிதான் புழம்பிட்டு இருந்தேன்

போன வருடம் விடுமுறைக்கு இந்திய போய் பார்த்தால் இவ வயது குழந்தைகள் எல்லாம் எழுதுறாங்க... அப்புறம் நானும் என் மகளுக்கு 3 வருடம் 6 மாதம் ஆனாதும் எழுத பழக்கலாம்னு ஆரம்பித்தேன் ... இங்கு பிளே ஸ்குலுக்கு போய்யிட்டு இருந்தா... ஆனா இங்கு எலுத எல்லாம் செல்லி கொடுக்க மாட்டாங்க... தினமும் 10 பக்கம் படம் வரைஞ்சுட்டு வருவா!!!

வீட்டுக்கு வரும் எல்லாரும் உனக்கு உன் பெயர் எலுத தெரியுமான்னு தான் முதல்லே அவகிட்டே கேப்பாங்க...சரின்னு நானும் எழுத பழக்க உக்காந்தால் அவ A எழுதுவற்க்குள் எனக்கு பொருமை 4 மூட்டை வாங்க வேண்டியதா போச்சு :-( ....அப்புறம் நானும் அவைளே எலுத சொல்லவே இல்லை ஆனா வீட்டில் அவளுக்கு கண்படும் இடத்தில் ABCD போஸ்டரா ஒட்டினேன் அவளும் அதில் இருக்கும் படம் எல்லாம் வரைய ஆரம்பிச்சா ஆனா அவ எப்ப எலுத ஆரம்பிச்சான்னு தெரியலை முதல் ஒரு எலுத்துக்கு மட்டும் ரொம்ப நாள் எடுக்கும் அப்புறம் அவங்களுக்கே தானா ஆர்வம் வந்துடும்...கட்டாய படுத்த வேண்டாம் ஆனா நிறைய வரைய குடுக்கவும்.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் மிஸ் மூர்த்தி
எவ்வளவு நல்லதா போச்சு நான் இந்த த்ரெட் போட்டது கொஞ்சம் குழம்பி போயிருந்தேன் ஏன் இப்படி கிறுக்கறான்னு.என் கணவர் வேற அய்யோ என் பொண்ணு என்னை போலவே ஆகிடுமோ என்று புலம்புவார்..அவருக்கு இப்பவும் எழுதவே வராது..நல்லா எக்சாமுக்கு படிப்பாராம் 2 கேள்விக்கு பதில் எழுதுறதுக்குள் பெல் அடிச்சுடுமாம் அப்படியே தட்டிமுட்டி பாஸ் பன்னி இந்த நிலமைக்கு வந்தாச்சு இந்த காலத்துல அதெல்லாம் நடக்குமாம்பார்.
கடந்த 1 வருடமாக செம்மையா கிறுக்கிகிட்டு தான் இருக்காள்..நானும் சூப்பரா இருக்கு பார் என்று பாராட்டிகிட்டே இருப்பேன்...பிறகு ஏ சொல்லி கொடுக்க ஆர்ம்பித்தேன் 2 மாதமாக நான் அதிகம் ட்ரை பன்னவில்லை சில முறை கைபிடித்து பார்த்தேன் ஏ எல்லாம் எனக்கு போடவேண்டாம் என்று எழுந்து ஓடி விடுவாள்.
இனி நீங்கள் சொன்னபடியே குழந்தையின் போக்கில் விட்டு பிடித்து மெல்ல வேறெதையாவது பழக்குகிறேன்.
எனக்கா எழுத பொறுமைன்னு சொன்னீங்க?நான் நேரம் அமைவதில்லையேன்னு இருக்கேன்..இல்லாமலும் எனக்கு பொறுமையின் சிகரம்னு பேருண்டு;-)

ஹாய் ஹாஷினி நான் நல்லா இருக்கேன்
எனக்கின்னமும் உங்களை ஹர்ஷினியாதான் கற்பனை பன்ன தோனுது:-D
மற்ற அம்மாக்கள்ட பேசுறப்ப தான் நிம்மதியா இருக்கு..சிலர் விடும் ரீலுக்கு நான் பயந்து போயிடறேன்.
உங்க மகள் இப்ப நல்லா எழுதுறாங்களா?ரொம்ப சந்தோஷம் நானும் லைன் போட்டு பழக்கியிருக்கனும் தொடக்கமே ஏ போட பழக்க அவளுக்கு வெறுப்பாகிவிட்டது..அம்மா நான் பட்டர்ஃப்லை வரைந்தேன் பிஜியன் வரைந்தேன் என்பாள் பார்த்தால் கோழி கிறுக்கு தான் இருந்தாலும் சூப்பர் பட்டர்ஃப்லை வரஞ்சிருக்கே என்பேன்:-D

-blank-

With Best Wishes,
Thahira Banu.

மேலும் சில பதிவுகள்