தெரிய வேண்டிய நாகரிகம்

சின்ன விஷயம் பேசுவோமா?! தோழிகள் எப்பவும் நல்ல விஷயங்களுக்கு "நோ" சொல்ல மாட்டீங்க. அந்த தைரியத்தில் இதை ஆரம்பிக்கறேன். நல்லா துணி உடுத்தி, டிப் டாப்பா இருந்தா நாகரிகமாயிடுமா??!! பழகும் விதம், மற்றவர் முன் நடந்து கொள்ளும் விதம்.... இவை கவனிக்க பட வேண்டாமா?!

நம்மில் பலர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள். விருந்தினருக்கு பஞ்சமே இருக்காது. நம்ம ஊருலயும் இப்போ இதெல்லாம் வழக்கமா தான் இருக்கு. ஆனா நம்மில் பலருக்கு, அல்லது சிலருக்கு, அல்லது நம் விட்டில் உள்ளவர்களுக்கு நம் வீட்டிற்கு யாராவது வந்தால் அல்லது நாம் யார் வீட்டுக்காவது போனால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது தெரிவதில்லை. இது போன்ற பல சம்பவங்கள் பல வீடுகளில் நடந்திருக்கும்.... "ச... இது கூடவா தெரியாது"னு நாமே பல நேரங்களில் பலரை பார்த்து வருத்தப்பட்டிருப்போம். அது போன்ற விஷயங்களை தெளிவாக காரணத்துடன் இங்கே பகிர்ந்து கொண்டால் படிக்கும் மற்ற தோழிகளுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் அனுபவத்தில் சில ஆண்களை கண்டதுண்டு. அவர்களது போக்கு மனதை காயப்படுத்தும். இதை நீங்களும் சில இடங்களில் கண்டிருக்க முடியும்.

1. விருந்தினர் முன் மனைவியை "டீ" போட்டு அழைப்பது.
2. விருந்தினர் முன் மனைவியிடம் கோபப்படுவது.

இது வெளி நாட்டு வாழ் மக்களிடம் குறைவு... ஆனால் நம்ம ஊரில் சாதாரணம். இது ஆண்களை சிறந்தவர்களாக காட்டுமா?! அப்படி நினைக்கிறார்களா?! உண்மையில் நான் இது போன்றவர்களை கண்டால் "ச.... என்ன மனுஷன்பா.... மத்தவங்க முன்னாடி மனைவியை எப்படி மறியாதையா நடத்தனும்'னு கூட தெரியல. இவங்களாம் என்ன படிச்சாங்க...."னு மனசுக்குள்ள திட்டி இருக்கேன்.

எப்போதும் யார் முன்னாலும் மனைவியோ, கணவனோ ஒருவரை ஒருவர் விட்டு குடுக்க கூடாது. அதுவே அவர்கள் குடும்பத்துக்கு சேர்க்கும் பெரிய மறியாதை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா...

இதை பற்றி நான் கொஞ்சம் கண்டிப்பாக பேசலாமென நினைக்கிறேன்.
சமீபத்தில் இது அறுசுவையிலேயே நடந்துள்ளது.இங்கே நான் அதை பற்றி பேசியே(எழுதியே)ஆக வேண்டும்.

இங்கே பலரும் பலவகையான உபயோகமான சமையல் குறிப்புகள் தகவல்கள்,
கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.இதை அவமதிக்கும் வண்ணம் சம்மந்தமில்லாத வேறெங்காவது...
கிண்டலும்கேலியும் செய்வோர்,சம்மந்தப்பட்டோர் மனது புண்படாமல் நடந்து கொள்ளலாமென நான் நினைக்கிறேன்.

என்னை பொருத்தவரையில் முகம் தெரியாத இடத்திலும் நாகரிகம் கண்டிப்பான,மிக,மிக,அவசியம் என கருதுகிறேன்.
இக்காலக்கட்டத்தில் எதிலுமேற்படக்கூடிய நாகரிகம்,பழக்க வழக்கங்களை(நமது நாட்டிற்கு கலாச்சாரத்திகென்றுள்ள)மாற்றாமலிருத்தல் நன்றாக இருக்கும்...

அன்புடன்
உமா.

அடுத்து விருந்துக்கு வரும் விருந்தினர்கள்....

1. குழந்தைகளை அடுத்தவர் வீட்டில் விட்டு விட்டு எப்படி தான் அப்படி ஒரு நிம்மதியாய் கதைப்பார்களோ....!!! ஒரு முறை என் வீட்டுகு வந்த ஒரு விருந்தினர் குழந்தை என் புதிய வாஷிங் மிஷினை கையில் வைத்திருந்த ஒரு பொருளால் அடித்து விளையாடியது. அம்மா அருகே இருந்தும் செய்யாதே என்று சொல்லவில்லை. என்னால் சொல்லவும் முடியவில்லை, அதை பார்க்கவும் தாங்கவில்லை. ஏன் இப்படி?! சில குழந்தைகள் வீட்டின் எல்லா அரைக்கும் ஓடி விளையாடுகின்றது. நாம் விருந்தினர் இருக்கும் அரையை அவர்களுக்கு ஏதுவாக வைத்திருப்போம்... மற்ற அரைகளில் சில பொருள்கள் போட்டது போட்டபடி இருக்கும். பெற்றோம் குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டாம், ஆனால் மற்றவர் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கலாமே.

2. அது சரி.... நமக்கு தெரிஞ்சா தானே குழந்தைக்கு சொல்லி குடுக்க!!! நம்மில் பலர் வீடுகளில் வேலைக்கு ஆள் இருக்காது. விருந்தினர் வருபவர் பயன்படுத்தும் டிஷு பேப்பர்களை (வெளிநாட்டில் இது தான் கர்சீப்) அடுத்தவர் வீட்டில் உட்கார போடும் சேர், சோபா போன்ற இடங்களில் வைத்து விட்டு அப்படியே போவது. அவர்கள் போன பிறகு அதை சுத்தப்படுத்தபோவது அந்த வீட்டு அம்மா தான். பாவம். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மை உமா... நீங்கள் எதை பார்த்துவிட்டு சொல்கிறீர்கள் என்றூ எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான மன்றத்தில் அது போன்ற விஷயங்கள் நடந்தால் அதுவும் நாகரீக குறைவே. சிலர் தெரியாமல் செய்கிறார்கள், சிலர் தெரிந்தே செய்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நல்ல தலைப்பு எடுத்து இருக்கிங்க. உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.....

இது என்னேட தனிப்பட்ட அபிப்பிராயம். ( யார் மனசையும் நேகடிக்கா இல்லை).

1. அடுத்தவங்கல கிண்டல் பன்னரதா நினைச்சு அவங்க மனசை நேகடிக்கா கூடாது.

2. விருந்தாளிகள் வந்தாக்கூட ஒருசிலர் கண்டுக்க மாட்டாங்க. நம்பல உக்கார வேச்சுட்டு அப்பதான் வேலை செய்யரா மாதிரி காம்பிச்சுக்குவாங்க.

3. நம்ப வந்ததெ அவங்கலுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்குரது.

4. திடிர்ன்னு சர்பிரைஸ் தரன்னு அவங்கலுக்கு முன் அறிவிப்பு இல்லாமா போரது. ( அவங்க வெளிய போக வேர பிலான் பன்னி இருப்பாங்க அது நம்மலாலா தடைபடரது தப்புன்னு நான் நினைகிரேன்)

5. நம்பலுக்கு தான் எல்லம் தெரியும் அடுத்தவங்லுக்கு எதுவும் தெரியாத மாதிரி நினைச்சுக்கிட்டு பேசி தீக்கிரது.

இதெல்லம் தவறுன்னு நான் நினிக்கிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நாகரீகம்! எது!!
இப்படி ஒரு தலைப்பில பேசுவதுக்கு முன்னாடி.... என் அனுபவம்!!!
எனக்கு சிலரின் பழக்கங்கள் பிடிக்கலைன்னா சொல்லி பார்ப்பேன் அது யாரானாலும் சரி. மூன்று முறை தெரியாதவங்களுக்கு மன்னிப்பு.. 7 முறை கொஞ்சம் நெருக்கமானவர்களுக்கு.. அப்புறம் நான் தான் என்னை மாத்திபேன்... சிலருக்கு சாதரணமாக தோன்றுவது சிலருக்கு அனாகரீகமாக தோன்றும். சமீபத்தில அப்படி ஒரு மனக்சப்பான விஷ்யம். இப்படி படிச்சிருந்துமா இப்படின்னு தோனும். அதிலும் ரொம்ப சாதரணமாக இதுதானேன்னு சொல்வாங்களே அப்பதான் மனசுக்கு கஷ்டமா இருக்கும். சொன்னா பொல்லாப்பு சொல்லைன்னா நமக்கு தான் மன உறுத்தல். நம்ம எதிர்பார்ப்பை சொல்லாம எப்படி அவங்க கிட்ட ஒரு பழக்கத்தை எதிர்பார்க்க முடியும் :)) சிந்திக்க....

வனி! என் வீட்டுக்கு வந்த 7 வயசு குழந்தை ... சரியான சளி .. டிஷ்யு கொடுத்தேன் மூக்கை சிந்திவிட்டு என்னிடமே கொடுத்தது... டிஷ்யூவை :) "ட்ராஷில போடும்மா இல்லைன்னா ஆன்டிக்கும் சளி பிடிக்கும்ன்னு சொன்னேன்" குழந்தையின் அம்மா ஒன்னுமே சொல்லலை.. அப்புறம் சொன்னேன்.. எப்பவும் சளி சிந்தினா ட்ராஷில டிஷ்யூ போடனும் ஓகேவான்னு... சமத்தா கேட்டுகிச்சு...

உமா!!! இங்க அருசுவைல எப்பவாவது கிண்டல் செய்தா கோச்சுகாதீங்க... நானும் என் எல்லைக்கு தாண்டி யாரயும் நோகப்பண்ணியதில்லைன்னு நினக்கிறேன்... என் ஸ்டையில் தெரிஞ்சவங்ககிட்ட மட்டும் உரிமை எடுத்துப்பேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,உங்களுக்கு மட்டுமில்லை நான் அனைத்து தோழிகளுக்கும் சொல்கிறேன்...

சாதாரண கிண்டலும்...கேலியும் இருப்பது தான் வாழ்க்கை,இங்கே தோழிகளுக்குள் நடந்து கொள்வதை நான் சுட்டிக்காட்டவில்லை,
ஃபிரண்ட்ஸ்ஸுக்குள்ள இதுக்கூட இல்லாம அப்புறம் என்னங்க‌ தோழிகள்!அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம்.
அது வேறு சம்மந்தமில்லாத இடத்தில் நடந்தது...இது நான் அறிந்தது.

என்னைப்பற்றி அரட்டையில் பார்க்கவில்லயா?(டீ கடை) நானும் ஒரு ஜாலியான...பேர்வழிதாங்க...(என் வேலைகள் என்னை கொடூரமானவன்னு காட்டுதோ!!!)
ச‌ரி ச‌ரி...வீட்டு நாக‌ரிக‌ம்,நாட்டு நாக‌ரிக‌ம்...போல‌ நான் சொன்ன‌து ம‌ன்ற‌ நாக‌ரிக‌ம்...பொதுவாக இது ப‌ற்றி நிறைய‌ எழுத‌லாம்,இப்போ நேர‌மில்லையாத‌லால் விடைபெறுகிறேன்...

ந‌ன்றி
உமா.

மிக்க நன்றி பிரபா, இலா. நீங்க 2 பேர் சொன்னதும் 100% உண்மை. ஆனால் இலா, நீங்க சொன்ன மாதிரி நம்ம ஊரில் நான் உறவினர் மகளிடம் சொல்லி அவர் அதை வேறு விதமாக பார்த்து விட்டார். :( ஏதோ நான் குழந்தையை அருவருப்பாக பார்ப்பது போல் நடந்து கொண்டார். என் முன் குழந்தையை அடித்து இழுத்து சென்று இன்னும் வேதனை படுத்தினார். இப்படியும் சிலர். ;)

நாகரீகம்... எது? நல்ல கேள்வி இலா. ;) ஒரு ஜோக் நினைவுக்கு வருது. ஒரு வீட்டில் மாமியார் மருமகளிடம் சண்டை போடுகிறார்... "உன் குடும்பத்துக்கு நாகரிகம்னா என்னனே தெரியாதுடி. உன் வீட்டுல பொண்ணு எடுக்க வேணாம்'னு என் சொந்தகாரங்க எல்லாம் சொன்னாங்க.... உன்ன போய் கட்டி வெச்சம்பாரு என் பிள்ளைக்கு..." தாம் தூம்'னு காதில் கேட்க முடியாத வார்த்தைகளாய் தெருவில் இருக்கும் 10 வீட்டுக்கும் கேட்கும் படி திட்டும் மாமியார். அமைதியாய் இருந்த மருமகள். யார் நாகரிகம் இல்லாத குடும்பம் இங்கு?!! ஹஹஹா....

இன்னும் சில விஷயங்கள்:

1. விருந்தினர் இருக்கும் அரையிலோ, அல்லது அவர் கண்ணில் படும் இடங்களில் இருக்கும் அரையிலோ அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது விளக்குகளை அனைப்பது. வந்தவருக்கு எப்படி இருக்கும்??!! "நேரம் ஆச்சுடா... கிளம்பு"னு சொல்ற மாதிரி இருக்கும்.

2. சிலர் சில இடங்களுக்கு போனால் கிளம்புவனான்னு அடம் பிடிச்சிகிட்டு உட்கார்ந்து கதை அடிக்கிறது. கேக்கறவங்க தலை எழுத்துன்னு உட்கார்ந்திருக்காங்களா, இல்லை உண்மையில் நம்மோடு பேசுவதை மகிழ்ச்சியாக நினைச்சு உட்கார்ந்திருக்காங்களான்னு கூட புரிஞ்சிக்கிறது இல்லை.

3. கணவன் மனைவி ஜோடியா வந்தா தயவு செய்து ஆண்கள் யாரும் மற்றவர் மனைவியை பார்த்து "எடை குறைஞ்சுடீங்க, இந்த உடை நல்லா இருக்கு உங்களுக்கு" போன்ற பேச்சுகளை தவிருங்க. சத்தியமா தமிழ் கணவர்கள் இதை விரும்பவே மாட்டாங்க. அவன் யாரு உன்னை பார்த்து இப்படி சொல்லன்னு நீங்க இல்லாதப்போ மனைவி கிட்ட கோவப்படுவாங்க. ;)

4. மேலே சொன்னது ஆணுக்கு மட்டும் இல்லைங்கோ.... பெண்ணுக்கும் பொருந்தும். யாருடைய கணவரை பற்றியும் இது போன்ற கமன்ட்டுகள் வேண்டாம். இவ யாரு என் புருஷனை பற்றி இதெல்லாம் சொல்லன்னு தான் தோனும். (இது பொதுவா கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பொஸசிவ்னஸ். இதை வெளி ஆட்கள் புரிஞ்சி நடந்துக்கிறது தேவை இல்லாம உங்களால் ஒரு தம்பதிக்கு இடையே சண்டை வராம இருக்க உதவும்)

5. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களை நேரம் கெட்ட நேரத்தில் அவர்கள் அனுமதி இன்றி அழைத்து செல்ல வேண்டாம். வயதானவர்கள் சிலர் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வந்தவர் முன் ஏதும் சொல்லி விட்டால் பின் வருத்தபடபோவது நீங்களும் நண்பரும் தான்.

6. உங்கள் தோழியாக இருந்தாலும் மற்ற பெண்களின் உருவத்தை பார்த்து கமன்ட் வேண்டாம். நீங்க ஏன் லிப்ச்டிக் போடுறதில்ல, ஏன் முடியை வெட்டிக்கிறதில்லன்னு.... அதெல்லாம் அவங்க விருப்பம், இதில் எல்லாம் தலையை விட்டால் பின் தோழிங்கிறது காணாம போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல தலைப்பு... ஒன்னொன்னா ஞாபகப்படுத்தி எழுதறேன்...

உங்களுக்கெல்லாம் ஹாய் சொல்லி உங்களை பார்க்க வர்ற நண்பர்கள் தான் திடீர்ன்னு வராங்களா?? எங்க வீட்டுக்கு பல மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் வந்தார்... சில நாட்கள் தங்கி போகலாம் என்ற எண்ணத்தோடு இவர் எங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லி எங்களுக்கு கொடுத்த டைம் - 45 நிமிடங்கள்... :-(... எங்கள் வீட்டில் எக்ஸ்ட்ரா பெட் கிடையாது, sofa கூட கிடையாது... இரண்டு அல்லது மூன்று நாட்கள் என்று சொல்லி ஒரு வாரம் வரை தங்கி இருந்தார்.... என்னவென்று சொல்வது??? நல்லவர் தான்... இருந்தாலும் இவ்வளவு நாள் வரலாம் என்னும் போது இன்னும் முன்னாடியே சொல்லியிருக்கலாம்... சரி அவர் நிலைமை அப்படி என்று விட்டு விட்டோம்....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்