வாழை பழ அப்பம்

தேதி: June 7, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைப்பழம் - ஒன்று (பெரிதாக)
மைதா - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலக்காய் - 2
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

ஒரு சிறிய பாத்திரத்தில் தூள் வெல்லத்தை போட்டு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் நன்கு கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, சோடா உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து கொள்ளவும்.
ஏலக்காயை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.
வாழைப்பழத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் வெல்ல பாகையும் வடிக்கட்டி ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கட்டித் தட்டாமல் கலந்துக்கொள்ளவும்.
இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், ஒரு ஸ்பூன் நிறைய மாவு எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றவும்.
இதேப்போல் நான்கு, ஐந்து ஊற்றி விடவும். அடி சிவந்து மேலெழும்பும் போது திருப்பி போட்டு நன்கு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வாழைப்பழ அப்பம் செய்தேன் ..சிறிது நேரத்தில் எல்லாம்
தீர்ந்துவிட்டது ..டேஸ்ட் சூப்பர் .(((படங்களுடன் அனுப்பி இருக்கிறேன்)))
வாழ்த்துக்கள் அப்சரா நல்ல ரெசிப்பிகளை தந்தர்க்கு..

வாழு, வாழவிடு..

சலாம் ருக்சானா.., தங்கள் செய்முறையை பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ருக்சானா..

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.