நூடுல்ஸ் அடை

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நூடில்ஸ் - 200 கிராம்
முட்டை - 8
சில்லி ஷாஸ் - 2 தேக்கரண்டி
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் - ஒரு பீஸ்
எலுமிச்சை பழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டைக்கோஸ் - 100 கிராம்
காரட் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்


 

முதலில் கொதிக்க வைத்த தண்ணீரில் நூடில்ஸை ஒரு நிமிடம் போட்டு எடுத்து கொள்ளவும்.
முட்டைக்கோஸ், காரட், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த நூடில்ஸ்வுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
அத்துடன் முட்டை, சில்லி சாஸ், மிளகுத்தூள், சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் ஆகியவற்றைச் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேவையான உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் சாற்றையும் பிழிந்து கலந்து கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடை கல்லில் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்