தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் கேவலமா?அம்மா அப்பாவை ஒருமையில் அழைத்தால் தான் பெருமையா?.மேலும்

ஹாய் தோழீகளே,

அனைவரும் நலமா?எனக்கு ரொம்ப நாட்களாக சில சந்தேகங்கள்..அதான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்..
நான் சுத்தமான தமிழச்சி.
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது எனக்கு இரண்டு மூன்று தோழிகள் மட்டும் தான் உண்டு..ஏன் என்றால் எனக்கு தமிழ் தெரிந்து கொண்டே தமிழ் தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் சரியான கோவம் வந்து விடும்..அதை அவர்களிடம் கேட்டால் பட்டிக்காடு என்று கிண்டல் செய்வார்கள்..இதை தவறென்று அவர்களுக்கு புரிய வைக்க போராடி தோற்றது தான் அதிகம்..
அதே போல் என் உறவினர் பையன் ஒருத்தன் இருக்கான்..இப்பொழுது வயது ஆறு.இரண்டு வயது இருக்கும் பொழுது அனைவரையும் பெயர் சொல்லி அழைக்க ஆரமித்தான்..அவன் தாய் தந்தையர் பெருமைப்பட்டார்கள்...மூன்று வயதில் அனைவரையும் நாயே,பேயே மேலும் சில வார்த்தைகள் உபயோகித்து பேசினான்..அதுக்கும் தன் குழந்தையாக இருக்கக்கொண்டு இவளவு அழகாக பேசுகிறது என்று கொஞ்சினார்கள்..இப்பொழுது ஆறு வயது என் உறவினர்களை மட்டும் அல்லாது போற வர வங்கள் எல்லாரையும் வாடி நாயே,போடி நாயே என்று பேசுகிறான்..பார்க்கவே சகிக்கலை..நாம் எவ்ளவு சொனாலும் திருத்த முடியலை..கொஞ்சம் அழுத்தமாக சொன்னால் "புர்ர்ர்ர்ர்ர்.....புர்ர்ர்ர்....புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரென்று வாயில் சவுண்ட் கொடுப்பான்.நாலு அறை விடலாம் போல் இருக்கும் எனக்கு...
இப்படி மிஸ்பிகேவ் பண்ணினால் அதை பார்த்து சில பெற்றோர்கள் கண்டிக்காமல் ரசிக்கிறார்கள்...
இவன் மட்டும் அல்ல மேலும் சில குழந்தைகளை பார்த்திருக்கிறேன் தெருக்களில்..சில சமயம் சின்ன குழந்தைகள் இப்டி பேசுவதையே பார்க்க கஷ்டமாக இருக்கும் பொழுது ஆறு ஏழு வயது பையன்கள் எல்லாம் எப்டி பேசினால் கோவம் வருது எனக்கு..
இது பற்றி உங்கள் அனைவரின் கருத்துக்களையும்,இதுபோன்ற அனுபவங்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்..

மீண்டும் வரேன்..
அன்பு தோழி,
அம்மு.

என்ன அம்மு... கோவக்கார அம்முவா நீங்க????.. ஹி ஹி...

உங்கள் கோவம் நியாயமானது... சரி என்ன பண்ண???

தமிழ் நாடு என்று இல்லை.. நீங்க எந்த நாட்டுக்கு போனாலும் தமிழில் பேசினா ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க நம்ம ஆளுங்களே...

நம்ம இருக்கிற இடத்துல தமிழ் அமைப்புகள் இருக்கே... அங்க போனா என்ன-னு போனா... அங்க ஒருத்தர் மேடை-ல.... "dear brothers and sisters.... நம்ம எல்லோரும் heartful-ஆ try பண்ணினா தமிழ் மொழியை நல்ல வளர்ச்சி அடைய வைக்க முடியும்..." என்று சொல்றார்... இதை எங்கே போய் சொல்ல???

இது போதாது என்று எந்த டிவி நிகழ்ச்சி பார்த்தாலும் பாட்டு பாடுறவனும் சரி... டான்ஸ் ஆடுற பொண்ணும் சரி... பேசுறதுல ஒண்ணு ரெண்டு தவிர எல்லாமே english தான்...

சாட்-ல தமிழில் பேசினா கூட இங்கிலீஷ் தெரியாதா??? தமிழில் வேண்டாம்-னு சொல்ற ஆளுங்க தான் இங்க ஜாஸ்தி...

இதுங்களை எல்லாம் திருத்த 100 valluvars வந்தாலும் முடியாது... நானும் அந்த லிஸ்ட்-ல ஒருத்தன் தானே... எல்லாரும் அப்படி ஆகி விட்டமோ??? கால கொடுமை என்றால் இது தானா????.... ம்ம்ம்ம்...

அப்பா அம்மா மரியாதை... அந்த விதத்தில் நான் கொடுத்து வச்சவன்....

இப்போ இருக்கிற சுட்டி பசங்க நீங்க சொல்ற மாதிரி இருக்காங்க... அது அவங்க தப்பு இல்லையே... நம்ம எப்படி பேசுறோமோ அவங்க அப்படி பேசுவாங்க..... பெத்தவங்க சரியா இருந்தா பிள்ளைங்க சரியா இருப்பாங்க... அதுவும் குறிப்பிட்ட வயது வரை தானே...

போதும் மொக்கை என்று நினைக்கிறேன்... நல்லது... மீண்டும் பாக்கலாம்...

அம்மு என்ற உடன்... டிவி-ல வரும் அம்மு அறுசுவை-ல வந்து விட்டாங்க என்று நினைச்சு விட்டேன்.. ஹி ஹி...(தோழீகளே என்று ஆரம்பிச்சு இருக்கீங்க.... யாரும் பதில் போடதாதால் நான் புகுந்து விட்டேன்...ம்ம்ம்ம்...)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

ஹாய் அம்மு உங்க கோபம் நியாமானது தான். இந்த மாதிரி நிரைய பேர் இருக்காங்கப்பா..... அதனால நாமும் அவங்க கூடாதான் இருக்கனும்.

அருண் நலமா? உங்கலை பார்த்து ரொம்ப நாள் ஆகுது. நீங்க செல்ரதும் நிஜமதான்.

சிங்கப்பூரில் இருக்கும் தமிழ் ஆட்கள் ( இந்தியாவில் இருந்து வந்தவர்) ஆங்கிலம் போசுகின்ரனர். ஆனால் சிங்கை இந்தியர்கள் சுத்த தமிழில் போசுகின்ரனர். ஒரு வார்த்தைக் கூட ஆங்கிலம் கலக்காமல் போசுவார்கள்.

டீவியிலும் நாடகம், தொகுத்து வாழ்ங்குவது இப்படி......

உண்மையில் எனக்கு ஆச்சிர்யமாக இருக்கும். அவர்லைப் போல் நம்மால் பேச முடியவில்லையே என்று.

நாம் தமிழில் போசினாலும் நம்மை மாட்டாமாக நினைப்பவர்கள் அதிகம். அதனால் ஆங்கிலம் சரலமாக வருகிரது. ( இப்படி பட்டவர்கலை என்ன செல்லா.......) இப்படி என் தோழி செல்கிரால்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அம்மு,அருண்,ப்ரபாதாமு நலமா?ஆங்கிலம் கலக்காமல் தமிழ் நம்ம மக்களை பேச வைப்பது சிரமம்தான்,ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் நம் நாட்டில் முன்பு இருந்ததாலோ என்னவோ ஆங்கிலத்தை நம்மை விட்டு பிரிக்க முடியலைன்னு நினைக்கிறேன்.
குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டிக்க தவறினால் நஷ்டவாதிகள் வளர்த்தவர்கள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்