பஞ்சகல்யாணி தோசை

தேதி: June 8, 2009

பரிமாறும் அளவு: (5 - 7) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

உளுத்தம்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
மைசூர்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
கடலைப்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
துவரம்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
பயத்தம்பருப்பு(பாசிப்பயறு) - 4 மேசைகரண்டி (நிரப்பி)
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைத்தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைத் தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
முட்டை - ஒன்று (விரும்பினால்)
சிறிய உருளைக்கிழங்கு - ஒன்று (விரும்பினால்)
நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
ஒரளவு கொதித்த தண்ணீர் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு


 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, மைசூர்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு(பாசிப்பயறு), துவரம் பருப்பு, ஒரளவு கொதித்ததண்ணீர் ஆகியவற்றை கலந்து அரை மணித்தியாலம் ஊறவைக்கவும்.
மற்றைய பாத்திரத்தில் வெந்தயம், அரிசி, ஒரளவு கொதித்த தண்ணீர் ஆகியவற்றை கலந்து அரை மணித்தியாலம் ஊறவைக்கவும்.
கிரைண்டரில் (மிக்ஸியில்)ஊறிய வெந்தயம், ஊறிய அரிசி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்)ஊறிய உளுத்தம் பருப்பு, மைசூர்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில் (மிக்ஸியில்)போட்டு பொங்க பொங்க அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).
அரைத்த பின்பு அதை எடுத்து அரிசி, வெந்தயம் ஆகியவை அரைத்து வைத்து உள்ள பாத்திரத்தில் போடவும்.
பின்பு கோதுமைமா(மைதாமா), தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நன்றாக கலக்கவும்(கட்டியில்லாமல்).
கலந்த பின்பு அதை அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு(பாசிப்பயறு), துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, மைசூர்பருப்பு அரைத்து வைத்து உள்ள பாத்திரத்தில் கலந்த கோதுமைமாவையும்(மைதாமாவையும்), மஞ்சள்தூள் ஆகியவற்றையும் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.
அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு போட்டு கலக்கவும். பின்பு முட்டையை உடைத்து அதன் கோதை அகற்றிய பின்பு அதனை அப்படியே தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும்(தோசை சுவையாகவும் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லிருந்து எடுக்கும் போது இலகுவாக வந்து விடும்).
பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணெயை ஊற்றி வைக்கவும். அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.
முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி உருளைக்கிழங்கை குத்தி (முள்ளு உள்ள பகுதியில் மாட்டி) வைக்கவும்.
அல்லது ஒரு அளவான துணியினை எடுத்து பொட்டனம் கட்டி வைக்கவும்.
இதனை நல்லெண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்(கிழங்கு எண்ணெயில் படும்படி).
பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடாக்கிய எண்ணெயில் கடுகைபோட்டு வெடிக்கவிட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஓரளவு பொரியவிடவும்.
ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.
தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில் குத்திய கிழங்கினால்(கிழங்கினை எண்ணெயில் நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து அதை தோசைக்கல்லில் தடவும்.
தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய மாவை)தோசையை வேகவிடவும்.
தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி போட்டு வேகவிடவும். தோசை நன்றாக வெந்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இதே போல மற்றைய தோசைகளையும் சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்.
அதன்பின்பு ஒருதட்டில் தோசைகளை வைத்து அதனுடன் சம்பல் (துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்கறி (கிழங்கு, கத்தரிக்காய், பீன்ஸ்) ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.


பஞ்சகல்யாணி தோசை சுவையானதும் கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின், மினரல் போன்ற பலசத்துக்கள் உடையதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண கூடியதும் ஆகும். ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - உளுத்தம்பருப்பு, மைசூர்பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு(பாசிப்பயறு), கடலைப்பருப்பு ஆகியவற்றில் அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - தோசை குளிர்மையானது . மாற்று முறை - அரிசி (பச்சையரிசி, குத்தரிசி இட்லி அரிசி, சம்பா, புழுங்கல்)எல்லா அரிசிகளையும் பாவிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்