ஃப்ர் துணியை கொண்டு கிளி செய்வது எப்படி?

தேதி: June 8, 2009

5
Average: 4.5 (2 votes)

இந்த அழகிய கிளி செய்முறையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சுமதி அவர்கள்.

 

ஃபெல்ட் துணி - பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள்
பச்சை நிற லாங் ஃபர்
கண் - 2
கலர் பென்
கத்திரிக்கோல்
பெவிக்கால்
ஊசி
நூல் கண்டு
பஞ்சு

 

கிளியின் உடல் மற்றும் வால் செய்வதற்கு பச்சை நிற லாங் ஃபர் எடுத்துக் கொள்ளவும். சிவப்பு நிற பெல்ட் துணி மூக்கிற்கும், பச்சை நிற ஃபெல்ட் துணி தலைக்கும் எடுத்துக் கொள்ளவும். மற்றப்பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு சார்ட் பேப்பரில் படத்திலுள்ளது போல் கிளியின் மூக்கு, தலை, உடல் மற்றும் வால்பகுதி என்று தனித்தனியாக வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். (கிளி பெரியதாக செய்ய விரும்பினால் படத்திலுள்ள ஒவ்வொருப் பகுதியையும் உயரத்திலும், அளவிலும் மாற்றம் செய்து கொள்ளவும்.)
முதலில் சிவப்பு நிற பெல்ட் துணியை திருப்பி விரித்து போட்டு அதில் மூக்கு வடிவில் உள்ள சார்ட் பேப்பரை வைத்து கலர் பேனாவால் வரைந்து கத்திரிக்கோலால் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு பச்சை நிற பெல்ட் துணியை திருப்பி போட்டு தலை வடிவில் இருக்கும் சார்ட் பேப்பரை வைத்து கலர் பேனாவால் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு பச்சை நிற லாங் ஃபர்ரை திருப்பி போட்டு உடல் மற்றும் வால் பகுதி உள்ள சார்ட் பேப்பரை வைத்து கலர் பேனாவால் வரைந்துக் கொள்ளவும். லாங் ஃபர் என்பதால் வெட்டும் போது துணியை மட்டும் வெட்டவும். ஃபர்ரை வெட்ட வேண்டாம். (படத்தில் உள்ளது போல் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்).
கிளியின் மூக்குப்பகுதி செய்வதற்கு: வெட்டிய சிவப்பு நிற பெல்ட் துணியை உட்புறம் வெளியே தெரியும்படி இரண்டாக மடித்து, கூர்மையாக இருக்கும் பகுதியில் இரு முனைகளிலும் ஓரத்தில் கலர் பேனாவால் புள்ளி வைத்துக் கொண்டு அந்த இடத்தில் ஊசி நூலை வைத்து ஒரு முறை தைத்து மற்றொரு முறை அதே இடத்தில் விட்டு, ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அதைப் போல மற்றொரு புள்ளியிலும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். முடிச்சுப் போட்ட இரண்டு புள்ளிக்கு இடையில் உள்ள இடைவெளியை ஊசி நூல் வைத்து நெருக்கமாக தைத்துக் கொள்ளவும். முடிச்சிப்போடுவது போல் தைக்கவும்.
கிளியின் தலைப்பகுதி செய்வதற்கு: நறுக்கி வைத்திருக்கும் பச்சை நிற பெல்ட் துணியை இரண்டாக மடித்து வலைவாக உள்ள இரண்டு ஓரங்களிலும் புள்ளி வைத்து தைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். முடிச்சுப் போட்ட இரண்டு புள்ளிக்கும் இடையில் உள்ள பகுதியை ஊசி நூல் கொண்டு நெருக்கமாக தைத்துக் கொள்ளவும்.
கிளியின் உடல் பகுதி செய்வதற்கு: நறுக்கிய பச்சைநிற லாங் ஃபர்ரை இரண்டாக மடக்கி, மடக்கிய இரண்டு ஒரங்களிலும் பேனாவால் புள்ளி வைத்து தைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். முடிச்சுப் போட்ட இரண்டு புள்ளிக்கு இடையில் உள்ள இடைவெளியை ஊசி நூல் வைத்து நெருக்கமாக தைத்துக் கொள்ளவும்.
வால் பகுதியை தைக்க தேவையில்லை. (படத்தில் உள்ளது போல் அனைத்தையும் தயார்செய்து வைத்து கொள்ளவும்).
கிளியின் மூக்கு மற்றும் தலைப்பகுதியை இணைப்பது: தைத்து வைத்திருக்கும் கிளியின் தலைப்பகுதியில் உள்ள ஓட்டையில், தைத்து வைத்திருக்கும் கிளியின் மூக்குப்பகுதியை திருப்பி நல்ல பக்கம் வெளியில் தெரிவது போல் வைத்து கூர்மையான பகுதியை உள்ளே நுழைத்து தையல் போட்டிருக்கும் இடத்திலிருந்து ஊசியை வைத்து சுற்றிலும் தைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு தலைப்பகுதி இணைத்தப் பகுதியை திருப்பிக் கொள்ளவும்.
கிளியின் உடலும் தலையும் இணைப்பது: திருப்பி வைத்திருக்கும் தலையை உடல் பகுதியில் உள்ளே நுழைத்து தையல் போட்டிருக்கும் இடத்திலிருந்து ஊசியை வைத்து சுற்றிலும் தைத்துக் கொள்ளவும்.
பின்னர் தலையுடன் உடல் சேர்த்தப் பகுதியை திருப்பிக் கொள்ளவும்.
கிளியின் அடிப்பகுதி வழியாக தேவையான அளவு பஞ்சை எடுத்து முதலில் மூக்குப்பகுதியில் வைத்து நிரப்பவும். அதன் பிறகு தலைப்பகுதியில் வைத்து நிரப்பவும். பின்னர் உடல் முழுவதும் வைக்கவும்.
கிளியின் உடலுடன் வால் பகுதியை இணைப்பது: வால் பகுதி சதுரமான வடிவில் இருக்கும், இரண்டு எதிர் எதிர் முனைகளை இணைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். மற்றொரு முனையை உடலின் அடிப்பகுதியில் தையல் போட்டிருக்கும் இடத்தில் வைத்து தைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
கிளியின் கண்ணில் பெவிக்காலை தடவி தலையின் மேல்பகுதியிலிருந்து அரை இன்ச் இறக்கி இருப்புறமும் ஒட்டவும்.
ஃப்ர்ரை கொண்டு செய்யும் அழகிய கிளி தயார். விரும்பியவர்கள் ஸ்பீக்கரை உடல் பகுதியின் பின்னால் வைத்து பெவிக்காலை சுற்றிலும் தடவி ஸ்பீக்கரை ஒட்டவும். மேலே கனமான நூலை வைத்து கட்டி தொங்க விடலாம். இந்த நூலை ஆட்டும் போது கிளி கத்துவது போல் ஓசை வரும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

woww... பச்சக்கிளி ரொம்ப நல்லாஇருக்கு சுமதி.செய்முறையும் தெளிவா இருக்கு.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சுமதி,
இரண்டு கிளிகளும் கொள்ளை அழகு. செய்முறையும் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கிறது.
அன்புடன் இமா

பி.கு
இதைப் பார்க்க செபாவின் ஜூலி ஞாபகம் வருகிறார். :))

‍- இமா க்றிஸ்

சுமதி,
பச்சைக் கிளி மிக அழகு. படங்கள் அழகாகவும் விளக்கம் மிகமிகத் தெளிவாகவும் உள்ளன. பாராட்டுக்கள்.
அன்புடன்,
செபா.

படங்களும்,விளக்கமும் அருமை.பாராட்டுக்கள்,நம் கையால் எதை செய்தாலும் அது தனி அழகுதான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta