பசங்க படம்......ப்ற்றி

இப்போது வரும் படங்களில் நல்ல கருத்துக்களை தேட வேண்டியிருக்கிறது.பாடல்கள்கூட அந்த நேர முணுமுணுப்புக்கு மட்டும் நன்றாக இருக்கிறது. எவெர் க்ரீன் songs என்று சொல்லமுடியாது.
படம் எடுப்பவர்கள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு நமக்கு இது பிடிக்கும் அது பிடிக்குமென யோசித்து எடுத்தாலும் நாம் எல்லாவற்றையும் ரசித்து குடும்பத்தோடு பார்க்கமுடிவதில்லை,,,
இந்தமாதிரி சூழ்நிலையில் ,அப்பாவும் அம்மாவும் எப்படி குழந்தைகள் முன்பு நாகரீகமாக நடந்து கொள்ளவேண்டுமென இயல்பாய் சொல்லியிருக்கும் விதம் அருமை

மேலும் குழந்தைகளுக்கு எப்படி உற்சாகம் கொடுத்துவளர்க்க வேண்டுமென்பதையும் அதுதான்
குழந்தைகளுக்கு டானிக் மாதிரி என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது.

என்ன ஒரு தெளிவாக சிந்திக்கும் ஆசிரியர் தன் மகனை மட்டும் கசங்கிய சட்டையில் பள்ளிக்கு வந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இடிக்கிறது.
மேலும் ஹீரோ,ஹீரோயினுக்கு காதலிப்பது மட்டுமே முக்கிய வேலையாய் காட்டுவதும்
சலிப்பு தட்ட வைக்கிறது

அப்துல் கலாம் கனவுப்படி குழந்தைகள் கையில் கார்ஓட்டுவதும்,பேருக்குப்பின்
IAS,MBBS எனபோட்டுக்கொள்வதும் ரசிக்க வைக்கிறது.

ஆசிரியர்கள் பாரபட்சமின்றி எப்படி நடந்து கொள்ளவேண்டுமென இயல்பாய் சொல்லியிருக்கிறார்கள்

மொத்ததில் பசங்க...சிகரம் நோக்கிய பயணம்
hats off to mr.pandiyaraj for providing a excellent movie ..

ஹாய் இளவரசி,
நலமா? பசங்க படம் எனக்கும் மிகவும் பிடித்தது.நானும் என் கணவரும் ரசித்து பார்த்தோம். குழந்தைகளோட சேட்டைகள், கனவுகள், பிடிவாதம், விட்டு கொடுத்தல், ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாத்தையும் அழகா சொல்லியிருக்கிற இயக்குநரை பாராட்டியே ஆகனும்.இரு குடும்பங்கள், பள்ளிகூடம் இவற்றை மட்டும் வைத்து போரடிக்காம மிகவும் எதார்த்தமா ரசிக்கும்படி திரைகதை போகுது. மாணவனை புரிந்து நன்மை செய்யும் நல்ல ஆசிரியர். வசனங்களும் நல்லா இருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மொழி, பூ படத்திற்கு பிறகு ரொம்ப ரசித்து பார்த்த படம் இந்த பசங்க படம் தான். 80's ல அஞ்சலி படம் இப்போ உள்ள generation க்கு பசங்க படம்னு சொல்லலாம். குழந்தைங்க எந்த ஒரு விஷயம் நல்லா செய்தாலும் கை தட்டி என்கரேஜ் பண்றது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அழகா வலியுறுத்தி இருக்காரு பாண்டிராஜ். அதுப் போக கனவுக் காணுங்கள்னு அப்துல் கலாம் சொன்ன மெசேஜையும் அழகா கையாண்டு இருக்காரு. எல்லாத்த விட நம்ம ஸ்கூல் டேஸ நியாபகப்படுத்திறது போல இந்த அடிய மறந்துடாதன்னு சொல்லி அடிச்சுட்டு போறது, அப்பறம் ஸ்டிக்கர்ஸ் எல்லாம் சேர்த்து நோட்டுல ஒட்டி வைக்கிறது.(இது எல்லாம் நானும் செய்து இருக்கேன்) விட்டுக் கொடுத்து போறது தான் வாழ்க்கைன்னு சொல்லி அன்புகரசு அப்பா அம்மாவும் மாறிடுறது, பசங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருக்கும் போது மனோன்மணி போய் தேசிய கீதத்த போட்டு சண்டைய நிறுத்துறது அப்போ போகும் போது ஒரு வாத்தியார் சொல்லிட்டு போவாரு இதெல்லாம் சட்ட சபையில பண்ண வேண்டியதுன்னு(highlight). இப்படி நிறைய சீன் ரொம்ப நல்லா கையாண்டு இருப்பாரு டைரக்டர். ஹீரோ, ஹீரோயின் பண்ணது லவ் மாதிரி தெரியல ரொம்ப காமெடியா தான் இருந்துச்சு, இப்படியே சொல்லிகிட்டு போனா நான் முழு படத்தையும் சொல்லிடுவேன். நல்ல ஒரு படம் பார்த்தது போல ஒரு உணர்வு. அப்பறம் இன்னொரு விஷயம் நாங்க படத்துக்கு போனது ஒரு பெரிய குட்டிஸ் பட்டாளத்தோட அந்த கடைசி சீனுக்கு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுந்திருந்து அன்புன்னு பசங்க கைத்தட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

thanks for sharing ur similar views...sometimes my tamil font not working...at present i am not able to type in tamil...later i write u more...
just now seeing ur comments and feel to reply u now that's y thanks

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

u have written the comments in a beautiful way...that too when u say that u went with kutties means I am able to visualise how nice u might been enjoyed the movie...sorry..
later I write u....in tamil
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இப்போ தான் பார்த்து முடிச்சேன்... என்னை பாக்க வச்சது இந்த இழை தான்... என்னோட பதிவுல வரதுக்காக இப்போ இதை எழுதிட்டு போறேன்... நாளை எழுதறேன் விரிவான என்னோட பார்வையை !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் இளவரசி மேடம் ,

நானும் பேப்பரில் வந்த விமர்சனத்தை படித்ததாலும்இந்த இழையின் தாக்கத்தாலும் கடந்த சனிகிழமை இந்த நல்ல படத்தை பார்க்க தூண்டிய உங்களுக்கு என்னுடிய மனமார்ந்த நன்றிகள் நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS

romba nalla iruku pasanga padam. nanum en husbandum romba virumbi parthom. eppothumey araikurai dress potitu oru varthai kooda puriyama sila padam araicha maavayey araichitu irukum. ana pasanga padam romba alaga ella katchiyaum romba rasika vaichittu. santhosama irunthichu.

உங்களின் ஒத்த ரசனைக்கு மகிழ்ச்சி...பதிவுக்கு நன்றி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களின் ஒத்த ரசனைக்கு மகிழ்ச்சி...பதிவுக்கு நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இப்போது தான் பசங்க படம் பார்க்க முடிந்தது பார்க்க தூண்டிய அனைவர்க்கும் நன்றிகள் பல நாளை விமர்சனம் & நன்றிகள் தொடரும்.

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மேலும் சில பதிவுகள்