கடலைமாவு முறுக்கு

தேதி: June 9, 2009

பரிமாறும் அளவு: (5 - 10) நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கடலை மாவு (அரித்தது) - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமாவு (மைதாமாவு) - 2 சுண்டு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தண்ணீர் - தேவையான அளவு


 

கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக அரைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அவித்த கோதுமைமாவு(மைதாமா), உப்பு, சீரகம், எள், இஞ்சி விழுது, உள்ளி(பூண்டு) விழுது, அரைத்த செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறிவேப்பிலை துண்டுகள், பட்டர் ஆகியவற்றை நன்றாக கொதித்த தண்ணீர் சேர்த்து பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா பதத்தில்).
பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன் பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும். சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்) எண்ணெய் விட்டு சூடாக்கவும் .
எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில் முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).
பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு தயாராகி விடும். அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.
முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து பரிமாறவும்.


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள் உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு கடலைமாவு முறுக்கு ஆகும். எச்சரிக்கை - இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்கவேண்டிய விசயங்கள்- பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக சிறிய துண்டுகளாக அரைக்கவும். மாற்று முறை - கொதித்த தண்ணீருக்கு பதிலாக சிறிதளவு பாலை சூடாக்கி அதனை கலந்தமாவில் விட்டு குழைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் முறைப்படி முறுக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது . மிகவும் நன்றி