பிரெஷ் ப்ரூட் கஸ்டர்டு

தேதி: June 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - மூன்று கப்
எலாச்சி பவுடர் - ஒரு பின்ச்
தேன் - ஒரு டீஸ்பூன்
சுகர் ப்ரீ - இரண்டு டீஸ்பூன்
பழ வகைகள் - ஒரு கப்
(கருப்பு திராட்சை, கொய்யாப்பழம், மாதுளைப்பழம், நவ்வாப்பழம், பெரிய நெல்லிக்காய், ஆப்பிள்)


 

கொய்யாப்பழத்தையும், ஆப்பிள்ளையும் க்யூப்ஸ் மாறி கட் பண்ணி கொள்ளவும்.
நெல்லிக்காயில் இருந்து கொட்டையை எடுத்து விட்டு வெளிப்பாகத்தை கட் பண்ணிக்கவும்.
பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு மூன்று டம்ளர் பால் ஒரு டம்ளர் ஆகும் வரை காய்ச்சவும்.
காய்ந்ததும் எலாச்சி பவுடர் சேர்த்து சுகர் ப்ரீ சேர்த்து நன்கு கொதி வந்ததும் ஒரு பவுளில் கொட்டவும்.
அனைத்து பழ வகைகளையும் பால் கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும். ப்ரூட் கலவையில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்