உள்ளி தோரன்

தேதி: June 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - 1.5 கப்
சின்ன வெங்காயம் - 5
பச்சைமிளகாய் கீறியது - 3
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்


 

முதலில் தேங்காய் துருவலையும், சின்ன வெங்காயத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனன ஒரு வாணலியில் கொட்டி அதில் பச்சை மிளகாய், கசக்கிய கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து இளம் தீயில் இரண்டு நிமிடம் வதக்கி எடுக்கவும். இதனை வெறும் சாதத்துடன் சாப்பிடவும்.


கேரளா உணவாகிய இது பலருக்கும் விருப்பமானது. குழம்பு இல்லாத நேரங்களில் சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் வெங்காயத்தை அரைக்காமல் துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் சேர்த்து செய்யும் முறையும் உண்டு.

மேலும் சில குறிப்புகள்