குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுவது

குழந்தைகளை தலைக்கு மேல் போட்டு தூக்கி போட்டு
விளையாடுவது மற்றும் அதிகமாய் போட்டு குலுக்குவது..ரெண்டுமே
குழந்தைகளை குஷி படுத்தும் விசயமாய் நினைத்து செய்வதுண்டு
அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்
விசயம் ...என்று ஒரு பத்திரிக்கையில் மருத்துவர் சொன்னதை
படித்தேன்...
அதைபற்றி விளக்கமாக மருத்துவத்துறை சம்பந்த்பட்டவர்கள்
விளக்கம் கொடுத்தால் மற்றவர்களுக்கு உபயோகமாக
இருக்குமல்லவா?கொடுப்பீர்களா?

ஹாய் இளவரசி டாக்டர் சன்நியூஸில் மூளை மற்றும் நரம்பியல் டாக்டர் 1 முதல் 1/2 வயது குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடிக்க கூடாது என்று கூறினார். ஏனெனில் குழந்தைகளோட ப்ரைன் அப்போது ரொம்ப மென்மையாகத்தான் இருக்கும். நாம் தூக்கி போட்டு பிடிக்கும் போது சிரிக்கும். அதன் பிறகு தூங்கினால் திரும்ப எந்திரிக்கவே செய்யாது என்று கூறினார். ரொம்ப அதிரிச்சியா இருந்தது அவர் சொல்லும் போது. நாம் தூக்கி போடும் போது மூளையில் ஏதோ மாற்றம் ஏற்படுமாம். பொதுவாக எந்த வயது குழந்தையானாலும் தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுவது நல்லதல்ல என்றும் கூறினார்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நான் விகடன் பத்திரிக்கையில் அதுபற்றி படித்தேன்..
விவரமாக..ஒருவருடைய குழந்தை அப்படி செய்தபோது இறந்துவிட்டதாக.....நாம் அதுபோல் செய்யாவிட்டாலும் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதுபோல் நம் குழந்தையையோ இல்லை அவர்கள் குழந்தையோ அப்படி செய்யும்போது தர்மசங்கடமாக இருக்கிறது...
போன வாரம் ஒரு பார்ட்டிக்கு போயிருந்தபோது அதிகம் பழகாத ஒரு அறிமுக நண்பர்...என் ரெண்டு வயது மகனை தலைக்கு மேலே உயர தூக்கி போட்டு பிடித்து கொண்டிருந்தார்.சொல்வதற்கு சங்கடமாய் இருந்தாலும்..அப்படி செய்யவேண்டாமென சொல்லிவிட்டேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி,

குழந்தைகளைக் குலுக்குவது, அதிகமாக கிச்சு கிச்சு மூட்டுவது, தூக்கிப் போட்டுப் பிடிப்பது,தொட்டிலைக் குலுக்கி ஆட்டுவது, போன்ற எல்லாமே ஆபத்தானவை.

பெரியவர்களுமே ரோலர்‍கோஸ்டர், ராட்டினம், தலைகீழாகச் சுற்றும் விளையாட்டுகள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

நானும் இதேதான் சொல்கிறேன்.நமக்கு தெரிந்த இந்த விசயம் பலருக்கு தெரிவதும் இல்லை...சொன்னால் அவர்கள் ஏதோ குழந்தையை கீழே போட்டு விடுவோமென்ற பயத்தில் சொல்வதாக எண்ணி சொல்பவர்களை முட்டாளைப்போல் பார்க்கிறார்கள்
அதனால் தான் எல்லாருக்கும் நம்மால் புரிய வைக்க முடியாது...அட்லீஸ்ட் ஒரு சிலருக்காவது புரிய வைக்கலாமே....
அதற்கான மருத்துவ விளக்கத்தை அறுசுவை மெம்பராக இருக்கும்டாக்டர் அருணா போன்றவர்கள் சொன்னால் மற்றவ்ர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்றுதான் இதில் இந்த பதிவை போட்டேன்.
சில நேரங்களில் சிலர் சில விசயங்களை சொல்பவர்களை பொருத்து ஏற்று கொள்கிறார்கள்
அதனால்தான்
நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

குழந்தைகளை தூக்கி போட்டு பிடிப்பதும் இந்த category-ல் வரலாம். எப்படியாயிருப்பினும், இந்த லின்கில் சில உபயோகமான தகவல்கள் உள்ளது:

http://www.medicinenet.com/shaken_baby_syndrome/article.htm

மேலும் சில பதிவுகள்