பருப்புகீரை பொரியல்

தேதி: June 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.

 

பருப்பு கீரை - 2 (அ) 3 கட்டு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து, கடலை பருப்பு - கால் தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - ஒன்று
வேர்கடலை - 2 மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை மேசைக்கரண்டி


 

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். தேவையான மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கவும். பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வறுத்து பொடிக்க வேண்டிய பொருட்களை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து வைக்கவும்.
அதன் பின்னர் வறுத்து வைத்திருக்கும் பொருட்களை பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கி வைத்திருக்கும் கீரையை சேர்த்து வதக்கவும்.
கீரை பாதியளவு வதங்கியதும், உப்பு மற்றும் பொடித்த மசாலா சேர்த்து பிரட்டவும்.
மூடி போட்டு 2 நிமிடம் வேக வைத்து, எடுக்கவும். சுவையான பருப்பு கீரை பொரியல் தயார். இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், சாம்பார் ரசம் சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலோ வனிதா! பருப்புக்கிரைபொரியல் மிகவும் நல்ல ரேசப்பி, சத்தும் மிக்கது.நாம் இருக்கும் இடத்தில் பருப்புக்கீரை கிடைப்பது இல்லை. இதற்கு பதிலாக வேறு எந்த கீரை பாவிக்கலாம். நன்றி ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் வனிதா,எப்படி இருக்கீங்க?எப்போதும் பருப்பு கூட்டு,மசியல் என்று ஒரே மாதிரி செய்வதற்க்கு போரா இருக்கும்.இது எனக்கு புதுசா,வித்தியாசமா தெரியுதுங்க.முதல்ல இந்த கீரையை வாங்கி செய்து பார்த்திட வேண்டியதுதான். சுவைத்து பார்த்ததும் உடனே தெரிவிக்கின்றேன்.நன்றி.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கொஞ்ச நாள் கழித்து வனி உங்களை அடிக்கடி பார்ப்பது மகிழ்ச்சி.கீரையில் மிளகாய் வற்றல் ,வேர்க்கடலை,மிளகு,சீரகம் வறுத்து போடுவது புதிய முறையாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

குறிப்பை இத்தனை விரைவாக வெளியிட்ட அட்மினுக்கு எனது நன்றிகள். :)

ராணி... இதை முருங்கை கீரையில் செய்யலாம். அப்படி அது கிடைக்காதுன்னா ஒரு 2 நாள் குடுங்க, நான் பாலக்கிரையில் செய்து பார்த்துட்டு நல்லா வருதான்னு சொல்றேன். :)

அப்சரா... உங்களை மாதிரி நானும் ஒரே போல் செய்து போர் அடித்து தான் வேறு விதமாக செய்து பார்த்தேன், கணவருக்கு பிடித்து விட்டதால் அடிக்கடி செய்ய ஆரம்பிச்சிட்டேன். செய்து பார்த்து அவசியம் சொலுங்க. மிக்க நன்றி.

மிக்க நன்றி ஆசியா... உங்களை போல் அன்பான தோழிகளை வெகு நாட்கள் காணாமல் இருப்பது கடினாகவே இருக்கிறது. அதான் ஓடி வந்துட்டேன் மீண்டும். இது போல் அம்மா மிளகு இல்லாம முருங்கை கீரை செய்வாங்க.... இங்க இந்த கீரை தான் கிடைக்கும், அதான் அதுல முயற்சி பண்ணேன். செய்து பார்த்து உங்களுக்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீரை வனிதா:), நீண்ட நாள் ஓய்வின் பின்னர் வந்தாலும் கீரையோடுதான் வந்திருக்கிறீங்க. பார்க்கவே அழகாக இருக்கு. அதுசரி இந்தப் பருப்புக்கீரை என்று எதைச் சொல்றீங்க? கொடிப் பசளியையா? நான் இதைக் கேள்விப்பட்டதே இல்லை. நன்றாக இருக்கு, கரைந்து போகாமல் முழுசாக வந்திருப்பது பார்க்க நன்றாக இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கீரை வாங்கிட்டு வந்தேன் இப்போதான். நாளை செய்து பார்க்கிறேன். சுவை சூப்பரா இருக்கும் என நினைக்கிறேன்.

அதிரா குறிஞ்சா ப்ரச்சனை இப்போதான் ஓய்ந்து இருக்கு. அடுத்து பருப்பு கீரையில் ஆரம்பிச்சுட்டீங்க போல. வனி மாட்டுனீங்க அதிராகிட்ட. பசலை இல்ல அதிரா பருப்பு கீரை சிறு சிறு இலையாக இருக்கும். இதை சிறுகீரைனும் சொல்லுவாங்க எங்க ஊரில்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அதிரா.... இந்த வம்பு தானே வேனாம்'னு சொல்றது... எனக்கு ஒரு கீரையும் தெரியாது... எனக்கு சமையலே வெளி நாடு வந்து கத்துக்கிட்டது தான், தெரிஞ்சதெல்லம் பருப்பு கீரை, பாலக்கிரை தான். இந்த பருப்பு கீரையே போன வருஷம் ஊருக்கு போயிருந்தப்போ தர்செயலா பார்த்துட்டு அம்மா'ட காட்ட அம்மா தான் பேரை சொன்னாங்க. ;)

தனிஷா... செய்து பார்த்து சொல்லுங்கோ. கீரை சிறு சிறு இலையா இருக்கும் சரி தான், ஆனா இது இல்லை சிறு கீரை. அம்மா சிறு கீரை அரக்கீரை எப்பவும் செய்வாங்க, அது எல்லாமே தன்டு மெல்லிசா இருக்கும், இதுக்கு கொஞ்சம் தடிப்பா இருக்கும், இலையும் சன்னமா இல்லாம தடியா இருக்கும். நிறைய நீர் உள்ள இலை போல் இருக்கும் பார்க்க (Leaves will be small, soft and thick).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாகர்கோவில் பக்கம் நாங்க இதுபோல் எல்லாகீரையும் செய்வோம்..தேங்காய் நிறைய சேர்ப்போம்.காரத்திற்கு மிளகாய்த்தூள் மட்டும் சேர்ப்போம்.ஆனால் பாலக்கீரையில் எனக்கு தெரிந்து இதுபோல் பொரியல் செய்தால் அவ்வளவு சுவை வராது..என நினைக்கிறேன்.எதற்கும் ஒரு வேளை நீங்கள் முயற்சி செய்து பார்த்து நன்றாக
வந்தால் எனக்கு சொல்லுங்கள்..நீங்கள் dubaiyilla இருக்கிறீர்கள்...நானும் பக்கம்தான்..
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இன்று இந்த குறிப்பை பார்த்து முருங்கை கீரையில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது (different taste) கணவரிடம் இருந்து பாராட்டுகள் வேறு.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மிக்க நன்றி இளவரசி. எனக்கு இன்னும் ஸ்பினாச் கிடைக்கல... கிடைச்சா முயற்சி செய்து சொல்றேன். நான் சிரியா'வில் இருக்கேன்... துபாய் இல்லை.

ஸ்வர்ணா... மிக்க நன்றி. முருங்கை கீரை கிடைக்காம தான் நான் பருப்பு கீரையில் முயற்சித்தேன்... அதுவும் ஒரு முறை செய்து பாருங்க. எப்படியோ முருங்கை கீரை நியாபக படுத்திட்டீங்க. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... அட்மின்... ஏன் இப்படி?? ஏன் இவ்வளவு வேகமா எல்லா இடத்திலும் பேரை மாத்தினீங்க? நான் இனி அதை பயன் படுத்துங்கன்னு தானே சொன்னேன்.... :( எங்க அப்பா பேரு யாருக்கும் சரியா வராது, அதனால் நான் அதை பொதுவா சரி செய்ய மாட்டேன், ஏதோ சரி இந்த முறையாது இங்கயாவது சரியா போடலாம்'னு நினைச்சு சொன்னேன்... ஏன் கஷ்டப்பட்டு எல்லாதுலையும் மாத்தனும். எப்படியோ... உங்களை வேலை வாங்கிட்டேன்... மன்னிச்சுடுங்கோ. மிக்க நன்றி. :) 'எங்களுக்கு இருக்க வேலை போதாதுன்னு நீ வேற... உன் தொல்லை தாங்கல'னு அண்ணா திட்டுறது கேக்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யோகராணி... நான் ஸ்பினாச்சில் செய்து பார்த்து சொல்வதாக சொல்லி பல நாட்கள் ஆயிட்டுது... மன்னிக்கனும், இது வரை 2 முறை கடைக்கு போனப்பவும் கீரை கிடைக்கல... கிடைக்கும்போது நிச்சய்ம் செய்து பார்த்து சொல்றேன். தப்பா நினைக்காதிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்கள் பருப்புக்கீரை செய்தேன். நல்ல சுவையாக இருந்தது. நான் ஸ்பினாஜ் கீரையில்தான் செய்தேன், ஒரு வித்தியாசம் என்னவென்றால், உங்கள் கீரை கரையாமல் முழுசாக இருக்கு, ஸ்பினாஜ் கரைந்துதான் வந்தது ஆனால் நன்றாகவே இருந்தது, கிட்டத்தட்ட எனக்கு முன்பு சாப்பிட்ட தூதுவளைச் சம்பலின் சுவை கிடைத்தமாதிரி தெரிந்தது.

ஸ்பினாஜ் என்பதால், வதக்கியபோது நெருப்பை நன்கு கூட்டிவைத்து அப்படியே விட்டேன், அக் கீரையில் இருந்து நிறையத்தண்ணி வந்து எல்லாம் வற்றியதும் இத் தூளைக்கொட்டிப்பிரட்டினேன், சில துளி தேசிக்காயும் விட்டேன்.

ஓ சுவர்ணா.... முருங்கையிலையில் செய்தீங்களோ, அதுவும் நன்றாகத்தான் இருக்கும், எனக்குக் கிடைக்காது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா,உங்க கீரை பொரியல் சூப்பர்.நானும் ஸ்பினாச்(பாலக்)ல் தான் செய்தேன்.இங்கே பருப்பு கீரை கிடைக்கல.எனக்கு பொதுவா கீரை வகைகள் எல்லாமே ரொம்ப பிடிக்கும்.

எனக்கும் அதிரா கூறியது போல் கொஞ்சம் குழைந்துவிட்டது.ஆனால் டேஸ்ட் சூப்பர்.நான் இதே மாதிரி பொடி மற்ற காய் பொரியலுக்கு சேர்ப்பதுண்டு ஆனா கீரைக்கு இது தான் முதல் முறை.
இது போல் நிறைய‌ சிம்பிள் ரெஸிப்பிஸ் கொடுங்க‌.

மிக‌வும் ந‌ன்றி
உமா.

மிக்க நன்றி அதிரா, உமா... :) பருப்பு கீரை கூட சற்று கவனிக்காமல் விட்டால் குழைந்து விடும். யோகராணி 2 பேர் பாலக்கீரையில் செய்து சொல்லிட்டாங்க.... நீங்களும் செய்யுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனிதா கட்டாயம் செய்துவிட்டு பின்னுட்டம் தருவேன்.இன்று பாலைக்கிரை வாங்கி வேய்த்துள்ளேன்.நேரம்மின்மையால் சமைக்கமுடியவில்லை. நாளை சமைத்துவிட்டு மீண்டும் வருவேன்.நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த பருப்புக்கீரைப் பொரியலின் படம்

<img src="files/pictures/aa293.jpg" alt="picture" />

மிக்க நன்றி அட்மின். :)

அதிரா... படம் அனுப்பினதாக சொல்லவே இல்லையே... ;) ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பார்க்க. மிக்க நன்றி அதிரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா! பருப்புக்கீரை பொரியல் செய்து சுவைத்தேன்.நல்ல சுவை ஆனால் கீரை கரைந்து கொஞ்சம் குமையலாக பொரியல் வந்தது.உங்களுடைய மாதிரி தனித்தனியாக வரவில்லை. அதிரா நன்றாக செய்து காட்டியுள்ளா. நான் வேறு கீரையில் முயற்சிக்கின்றேன்.நன்றி இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி... செய்து பார்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி. :) கீரை செய்யும்போது கவனமா பார்க்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு... பருப்பு கீரை தண்ணி விட்டதுமே நீங்க அரைச்ச பொடியை சேர்த்துடலாம். இது நீரை இழுத்துடும். அதன் பின் 2 - 3 நிமிஷம் நீங்க மூடி வெச்சாலே போதும் வெந்துடும். அரைச்ச விஷயம் எல்லாமே வறுத்து அரைச்சது, அதனால் அதை போட்டு ரொம்ப நேரம் வைக்க வேண்டியதில்லை. இதன்படி ஒரு முறை செய்து பாருங்க, வருதான்னு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா! நீங்கள் சொல்வது மிக சரி. அரைத்த பொடியை கீரையுடன் சேர்த்து அவித்தால், தண்ணிரை இழுத்து விடும். கீரையும் குமையாது. இனிமேல் நீங்கள் சொன்ன முறைப்படி செய்வேன். நிச்சயம் நன்றாக வரும்.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்த முறையில் கீரை செய்தேன் வித்தியாசமா ரொம்ப நல்லா இருந்தது ஆனா நான் செய்த கீரை கத்திமாதிரி நீல நீளமா இருந்தது பருப்பு கீரயானு தெரியல

செய்திங்களா அதன் பின் இந்த முறையில்? இப்போ தான் இந்த பதிவை பார்க்குறேன்... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த வகை பருப்பு கீரை நம்ம ஊரில் கிடைக்கும், ஸ்ரீயாவிலும் கிடைச்சுது... அனா பெங்களூரில் எனக்கு பருப்பு கீரை என கிடைப்பது வித்தியாசமா இருக்கு. இது போல செய்ததில்லை அதில். அது நிங்க சொல்வது போல நீட்டமா ட்ரையாங்கில் ஷேபில் இருக்கு. எப்படி இருந்தது நீங்க செய்தது? மிக்க நன்றி நஸ்ரீன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sorry vani naan unga pathivai pakkave illa naan seithathu romba nalla irunthathu