தோழிகளே!எல்லோரும் எனக்கு பதில் சொல்லுங்கள்...

எங்கள் மகனுக்கு 18 மாதமாகிறது.கடந்த வாரம் கடைவாய் பல் வந்தது போலும்,அப்பொழுது இருந்து சரியாக சாப்பிடுவதில்லை,காதில் தோடு போடும் பகுதியை மட்டும் பிடித்து இழுத்தல்,கீழ் உதட்டை இழுத்து மடக்கி கடித்துக்கொண்டும் இருக்கிறான்.இதில் உதடு கடித்தல் மட்டும் குறையவேயில்லை.நன்றாக இழுத்து மடக்கியிருப்பதால் நாங்கள் பல் எடுப்பாகிவிடுமோ என பயப்படுகிறோம்.இதை எப்படி நிறுத்தசெய்வது.

தோழிகள் குழந்தை விஷயத்தில் எனக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
உமா.

குழந்தை வளர்ப்பு பற்றி எனக்கு எதும் சரியாக தெரியவில்லை.இங்கே பலரின் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்பதுண்டு.இந்த விஷயம் எனக்கு புதுமையாக இருப்பதால் தோழிகள் தயவுசெய்து பதில் கொடுங்கள்.

நன்றி
உமா.

உமா,

அப்படி கடிக்கிற சமயம், அவன் கவனத்தை வேறு எதிலாவது திருப்புங்கள். கொஞ்சம் பொறுமையாகத்தான் மாற்ற வேண்டும்.

இதற்கு வேறு காரணம் உண்டா என்று மருத்துவரிடம் போனால் கேளுங்கள் அல்லது இணையத்தில் தேடிப்பாருங்கள்.

உமா, உங்களுக்கு பிறகு பதில் போடுகிறேன். இந்த த்ரெட் காணாமல் போகாமல் இருக்க ஒரு பதிவு போடுகிறேன். என் மகளுக்கு என்ன செய்தேன் என்று பிறகு எழுதுகிறேன்.
Arusuvai is very slow too. Teething problem is very normal and painful for the babies.
வாணி

உமா, நான் ஒரு நாள் சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன். அங்கு ஒரு குழந்தை (12- 18 months old)பேபி காரட் வைத்து ரொம்ப ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தது. நான் அதன் அம்மாவிடம் கேட்டேன் காரட்டை கொடுத்து இருக்கின்றீர்களே பயமில்லையா என்று. அதற்கு அவர் சொன்னார், எனது குழந்தையின் டாக்டர் சொன்ன அட்வைஸ் இது. teething problem இருக்கும் போது காரட்டை கொடுத்தால் அவர்களுக்கு பெரிதாக வலி தெரியாதாம். எனது மகளுக்கு நான் பேபி காரட், ஒரளவு பெரிய துண்டு ஆப்பிள்(தோல் நீக்கியது) கொடுத்தேன். என் மகனுக்கு நாங்கள் எதுவுமே கொடுக்கவில்லை(அப்போது இதைப் பற்றி தெரியாது). மிகவும் கஷ்டப் பட்டோம். இம்முறையில் முழுக்க வலிபோகாது என்றாலும் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால் organic கடையில் teething க்கு என்று பொருட்கள் விற்கின்றார்கள் அதையும் ட்ரை பண்ணி பாருங்கள். இது எனது டென்டிஸ்ட் சொன்ன அட்வைஸ். ஆனால் நான் ஆப்பிள், காரட் போன்ற பழங்களையே கொடுத்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஆப்பிள், காரட் போன்ற உணவுகள் சாப்பிடவும் பிடிக்கும்.

vaany

நன்றி ஹுசேனம்மா,

நான் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன்.கவனத்தை திசை திருப்ப பலனில்லை.அந்த சமயம் மட்டும் நீக்கிவிட்டு மறுபடியும் வைத்துக்கொண்டிருக்கிறான்.

வாணி நன்றி,

இவன் தான் எது கொடுத்தாலும் சாப்பிடுவதில்லையே,நான் ஆப்பிள் கொடுத்து பார்த்திருக்கிறேன் இன்னும் கேரட் ட்ரைப்பண்ணவில்லை. செய்து பார்க்கிறேன்.

மற்ற தோழியர் வந்து என்ன செய்யலாம்,இதன் காரணமென்ன,உங்கள் குழந்தைகள் எப்படியெல்லாம் செய்தார்கள் என கொஞ்சம் கூறுங்களேன்.

நன்றி
உமா.

தோழிகள் பலர் முன்வந்து பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
உமா.

உமா, பாவம் ரோஹித் கஷ்டப் படுகிறாரா? பல் வரும் இடத்தில் உங்கள் விரலால் லேசாக மசாஜ் செய்வது போல் தடவி விடுங்கள். சாப்பிட ஆப்பிள் சாஸ், நசுக்கிய வாழை பழம் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சற்று ஜில்லென்று குடுத்து பாருங்கள். வாய்க்கு ஏதாவது கடிக்க குடுங்கள். ஜில்லென்ற கேரட், teething rings இது போல. என் ஞாபகத்தில் இவைதான் இருக்கு. இன்னும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன். டேக் கேர்.

உங்கள் குழந்தைக்கு Ear Infection என்று பாருங்கள். சில நேரங்களில் பல் முளைக்கும் போது அதுவும் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. பல் வலி குறையலாம் அனால் காது வலி அதிகரிக்கும். காது வலியால் ஜுரம் இருந்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

அவர்களுக்கு குளிர்ந்த ஆப்பிள் சாஸ், புட்டிங், குளிர்ந்த நசுக்கிய வாழைப்பழம், குளிர்ந்த காரட், pacifier பழக்கம் இருந்தால் chilled pacifier கொடுக்கவும். பிரட் ச்டிக்க்ஸ் (bread sticks), teething rings (organic), இரமான துணி குளிர்சாதன பெட்டியில் வைத்தது, terrycloth பொம்மை கூட கொடுக்கலாம்.

you can try Pain reliever such as acetaminophen or ibuprofen or teething gels, such as Baby Orajel Nighttime Formula, Little Teethers Oral Pain Relief Gel, Baby Orajel Fast Teething Pain Relief, Baby Anbesol Oral Anesthetic Gel (but with the doctor's consent)

அவர்களின் ஈறை (gums) சுத்தமான விரல் கொண்டு மிருதுவாக தேய்த்து விடவும்.

உங்கள் குழந்தையாவது பரவாயில்லை, என் குழந்தை என்னை அல்லது என் கணவரை கடிப்பாள்.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி வானதி, வாயில் விரலை வைத்தாலே நன்றாக கடுத்துவிடுகிறான்,வாயை மூடிக்கொள்கிறான்.வாழைப்பழம் பிடிக்கவே பிடிக்காது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நன்றி லாவண்யா,
அவனுக்கு காதில் இன்ஃபெக்ஷன் ஏதுமில்லை.தற்போதைய பிரச்சனை சரியாக சாப்பாடு இல்லை,கீழ் உதடு கடித்தல் தான்.
கடைவாய்பற்கள் வெளியே வந்துவிட்டது,ஆனால் கொஞ்சம் க்ரான்க்கியாகவே தான் இருக்கிறான்.

ஐஸ்கிரீம் கொடுக்கலாமா? நான் கொடுத்து பார்த்தேன்,ஆனால் சாப்பிடவேயில்லை.சில்லுன்னு எதுவுமே பிடிக்கல.

உங்கள் அனைவரின் ஆலோசனைக்கும் நன்றி நான் மென்மேலும் முயற்சித்து பார்க்கிறேன்.

நன்றி
உமா.

நமக்கே பல் வலி என்றால் (அது என்னவென்று தெரியும்) சாப்பிட முடியாது......குழந்தைக்கு தனக்கு என்ன நடகிரதேன்றே தெரியாது.....ஆகையால் அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதை கொடுத்து பாருங்கள்.....எதை காட்டினாலும் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.....சில நாட்கள் மட்டும் தான் பிறகு சரியாகிவிடும்.

ஐஸ் கிரீம் வேண்டாம்.....ஐஸ் cubes ட்ரை பண்ணி பாருங்க.....இல்லைஎன்றால் கிராம்பு எண்ணெய் தடவுங்க.....

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்