10 1/2 மாத குழந்தை Teething மற்றும் தூக்கம்

என் 10 1/2 மாத பையனுக்கு பல் முளைத்து இருப்பதால் போன வாரம் mild fever இருந்தது. வாயில் முன் இரு பற்கள் முளைக்க தொடங்கி இருக்கு...அவன் தூக்கம் கடந்த 3 நாட்களாக கொஞ்சம் அதிகமா ஆகிடுச்சு ...இரவு 9 to 5.30 or 6 தூங்குகிறான்..பகலில் எப்பொழுதும் 2 தரம் தூங்குவான்..காலை 9 or 10 & மதியம் 2.30 போல தூங்குவான். காலை தூக்கம் 40 நிமிடம் மதியம் 1.30 to 2 ஹவர்ஸ் தூங்குவான்.ஆனால் இன்னைக்கு மதியம் 3 நேரம் தூங்கினான் ..12.30 to 3.40 ..இப்பொழுது 7 மணிக்கே தூங்க ஆரம்பித்து இருக்கான்...இது நோர்மலா ..சொல்லுங்க தோழிகளே..முழிச்சு இருக்கிறப்ப விளயடரன் அதிலே எந்த மாற்றமும் இல்லை..10 நாளாவே சாப்பாடு ஒழுங்காக சாப்பிடுவது இல்லை ..இன்னும் 10 நாள்ல இந்தியா போறோம் ..எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு..

குழந்தைகள் சாப்பிடாம இருக்கிறது, நிறைய தூங்குறது சகஜம். கவலை தேவை இல்லை. ஆனா கூடவே காய்ச்சல் இருக்குன்னா டாக்டரிடம் காட்டவும். பல் முலைச்சதால் தான் காய்ச்சல்'னு அவரு சொல்லிட்டா நீங்க கவலை இல்லாம இருக்கலாமில்லையா. அதுக்கு தான் சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி மேடம். உடனே பதில் போட முடியலை. கம்ப்யூட்டர் ப்ரோப்லேம்...அவனுக்கு பிவேர் ஏதும் இல்லை..ஆனால் மதியம் சற்று அதிகம் தூங்க விரும்பறான். இரவிலும் நன்றாக தூங்கறான்.

எனக்கு நியாபகம் இருக்கு என் மகளுக்கும் காய்ச்சலும்,சளியும் இருந்தது பல் முளைக்கும்பொழுது..தூக்கமும் அதிகமாக இருந்தது

ஒ ...ரொம்ப நன்றி தளிகா ...இப்பொழுது என் பயம் போய்டுச்சு ...குழந்தைங்க விஷயத்தில கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லையா ...தனியாக இருப்ப்பதலா இன்னும் கவனமா இருக்க வேண்டி இருக்கு...வாழ்க அறுசுவை...

மேலும் சில பதிவுகள்