பாசிப்பருப்பு முறுக்கு-2

தேதி: June 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி- 2 கப்
வறுத்து பொடித்துச் சலித்த பாசிப்பருப்பு மாவு- 2 கப்
பொட்டுக்கடலை மாவு- 1 கப்
வெண்ணெய்-2 மேசைக்கரண்டி
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
வறுக்கத் தேவையான எண்ணெய்


 

அரிசியை போதுமான நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் நிழலில் உலர வைத்து, இடித்து, பின் நன்கு சலித்துக்கொள்ளவும்.
அத்துடன் மற்ற பொருள்களைக் கலந்து போதுமான நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கிங்க? இதே மாதிரி தான் நான் மனுகுபூலு என்று சொல்லும் முறுக்கை அடிக்கடி செய்வேன். என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் கடையில் கிடைக்கும் பச்சரிசி மாவில் தான் செய்கிறேன். ரொம்ப டேஸ்டியக இருக்கும். இதை பார்த்ததும் உடனே பதிவு போட தோன்றியது.

உங்களின் கருத்தைப்படித்து மகிழ்வாக இருந்தது. அடிக்கடி அறுசுவை கிடைக்காமல் இருப்பதால் எதற்கும் உடனே பதில் எழுத முடியவில்லை. இது என் அம்மாவின் நோட்டைப்பார்த்து செய்தது. அதில் 'மணுகுப்பூ' என்றுதான் எழுதியிருந்தார்கள். இது பழங்காலப்பெயர். இன்னும் 'நுரை மணுகுப்பூ', 'தேங்காய் மணுகுப்பூ' என்றெலாம் இருக்கின்றன. எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு என் மகிழ்வும் நன்றியும்!!