விளக்கு விழுந்ததற்கு பரிகாரம்

அன்புத்தோழிகளே,
எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை நடந்த போது விளக்கு + சாமி படம் கிழே விழுந்து விட்டது. எனக்கு ரொம்ப பயமாய் இருக்கு. இதனால் எதாவது பாதிப்பு வருமா? இல்லை இனி நாம் நம் மனசாட்சிக்கு பயந்து, நல்லது மட்டும் பண்ணினால் போதுமா? அல்லது, பரிகாரம் கண்டிபாய் பண்ண வேண்டுமா? இதனால் என்னை சேர்த்தவர்களுக்கு எதாவது பாதிப்பு வந்துடும்னு பயமாய் இருக்கு. வழி சொல்லுங்கள். நான் வெளிநாட்ல இருக்கேன். பரிகாரம் பண்ணுவதை விட ( விரதம் இருப்பது, பூஜை செய்வது ) மற்றவர்க்கு உதவுவது or something like that செய்யலாமா?

பரிகாரம்
உங்கள் பெயர் கூடப் புரியவில்லை. நீங்கள் பதட்டமாக இருக்கிறீங்களென நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம், இது தற்செயலாக நடந்த சம்பவம்தானே அதனால் பயப்பட ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன். பழையபடி எல்லாவற்றையும் எடுத்துவைத்து விளக்கேற்றிக் கும்பிட்டால் நல்லதென்றே நினைக்கிறேன். இதுக்குமேல் எதுவும் எனக்குச் சொல்லத்தெரியவில்லை.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் விளக்கில் பிடித்து மெதுவாக ஒரு சுவாமிப்படம் பாதி எரிந்தபோது கண்டு அணைத்தோம்.. பயப்பட்டோம், பரிகாரம் எதுவும் செய்ததாக நினைவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
நான் ஜாஸ்மின். பதட்டமாகத்தான் இருக்கு. ஆறுதலா பதில் போட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ்.

மேலும் சில பதிவுகள்