Hi! vanakkam.. enakku tirumanamaagi 3 maatham aagirathu.. naan en kanavarukku chicken kulambhu vaitthu asatthalam endru ninaikkiren..pls yaaravathu suvaiyaana chicken kulambhu recipe taarungal.. pls!pls!pls!...
nandri,
indrasuresh..
Hi! vanakkam.. enakku tirumanamaagi 3 maatham aagirathu.. naan en kanavarukku chicken kulambhu vaitthu asatthalam endru ninaikkiren..pls yaaravathu suvaiyaana chicken kulambhu recipe taarungal.. pls!pls!pls!...
nandri,
indrasuresh..
ஹாய்
ஹாய் இந்திராசுரேஷ்/உமா
சிக்கன் குழம்பு என்று அறுசுவை தேடுக பகுதியில் போட்டு தேடி பாருங்க அப்பிடி தேடி பார்த்தா பல குறிப்புகள் கிடைக்கும்.
அதில் ஒன்று இதோ
http://www.arusuvai.com/tamil/node/12792
தேடுக லிங்க் http://www.arusuvai.com/tamil/trip_search
அல்லது
அறுசுவையில் அசைவம் என்று ஒரு தனிபிரிவு இருக்கு அதில பாருங்க
இது தங்களுக்கு உதவும் என்று நினைக்கிறன்
நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS
இந்திரா
அவ்வளவு தானே இந்திரா இந்தாங்க ரெசிபி
சிக்கன் - 900 கிராம்
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 இனுக்கு
இஞ்சி& பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தக்காளி - 1 பெரியது
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
ஜீரகப் பொடி - 1/4 ஸ்பூன்
சோம்பு பொடி - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணை 3 மேஜைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் நன்னமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..இளம் பொந்நிறமாக வந்ததும் இஞ்சி& பூண்டு சேர்த்து மிதமான தீயில் பச்சை வாடை போகும் வரை வதக்கவோ தீயை சுத்தமாக குறைத்து மூடி போட்டு மற்ற வேலைகளை 5 நிமிடத்திற்கு கவனிக்கவோ செய்யலாம்.
பின் தக்காளி மற்றும் மற்ற எல்லா பொடிகளும் சேர்த்து சிக்கனும் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கிளறி பின் மூடியிட்டு 30 நிமிடம் வேகவைக்கவும்..தேவைப்பட்டால் வற்ற வைத்து இறக்கலாம்
இஞ்சி பூண்டு ஓரளவு புதியதாக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.