பாகற்காய் குழம்பு

தேதி: June 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (7 votes)

 

பாகற்காய் - ஒன்று
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
வதக்க:
பெரிய வெங்காயம் - 1
அல்லது சிறிய வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
தக்காளி - ஒன்று
புளி - 2 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 1/2 கப்


 

முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு அதனை சிப்ஸ்ஸாக நறுக்கவும். கசப்பு போக சிறிது மோரில் 30 நிமிடம் வைத்த பின் கழுகவும்.
எண்ணெயில் பாகற்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வரிசையாக வதக்க கொடுத்துள்ளவற்றை வதக்கவும். வதக்கி வைத்த பாகற்காய் சேர்த்து, புளிக்கரைசல் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
பாகற்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பாகற்காய் குழம்பு ரெடி.


பாகற்காய் குழம்பிற்கு சுவை சேர்ப்பது நல்லெண்ணெய் தான். குழம்பை காலையே சமைத்து வைத்தால் தான் மதியத்திற்கு சுவை கூடுதலாக இருக்கும் கசப்பும் குறையும். குழம்பிற்கு புளியை உறைப்பாக சேர்த்து தேங்காயை கம்மியாக சேர்க்கவும். சரியாக சமைக்க தெரிந்தால் பாகற்காய் குழம்பை சின்ன பிள்ளைகள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்