கறி பன்

தேதி: June 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

பிரெட் மா(bread flour) - 750 கிராம்
ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
உருளைக் கிழங்கு - 500 கிராம்
லீக்ஸ் - 250 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
எலுமிச்சம் புளி - 2 தேக்கரண்டி


 

கறி பன் செய்ய தேவையானவற்றை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ப்ரெட் மாவுடன் ஈஸ்டை சேர்த்து சல்லடையில் போட்டு 2 முறை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வைத்த தண்ணீர், 2 தேக்கரண்டி உப்பு, சீனி, 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ரொட்டிப் பதமாக பிசைந்து அரை மணி வைக்கவும்.
உருளைக்கிழங்குடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக வைத்து தோல் உரித்து பிசைந்துக் கொள்ளவும். லீக்ஸை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி லீக்ஸை போட்டு வதக்கவும். அதில் மிளகாய் தூள், மீதமுள்ள உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கி வைத்து எலுமிச்சை புளி சேர்த்து பிரட்டி விடவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகளை ரொட்டியாக தட்டி மேலே கறியை வைக்கவும். (மாவை அதிகம் மெல்லியதாகவும் தட்ட வேண்டாம், அதிகம் தடிப்பாகவும் தட்ட வேண்டாம்). பின்னர் நான்காக மடிக்கவும். (மடித்த பகுதி தடிப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்)
இதை போல் மற்ற உருண்டைகளிலும் செய்து வைத்துக் கொள்ளவும். மடித்த பகுதி கீழே இருக்கும்படியாக வைத்து, இடைவெளிவிட்டு, ஒரு அவன் தட்டிலே அலுமினியப் பேப்பர் போட்டு, மீதமுள்ள எண்ணெயைத் தட்டில் நன்கு தடவி விட்டு, பன்களை அடுக்கவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் அவனை 400 F ல் வைத்து பன்களை 40 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பிரவுன் நிறமானதும்(பண் கலர்), அவனை ஓஃப் பண்ணவும்.
ஒரு தடவை எல்லா பன்களையும் பிரட்டி ஓஃப் பண்ணியுள்ள அவனில் வைத்து விடவும். (10 நிமிடங்களில் வெளியே எடுக்கவும்).
சுவையான கறி பன் ரெடி. இங்கு வைத்துள்ள இக்கறிக்கு பதில், சீனிச்சம்பல், மீன்சம்பல், இறைச்சிக்கறி போன்றவை எதுவேனும் பிரட்டலான கறிகள் செய்து வைத்து, சுற்றுலாக்களுக்கு எடுத்துச் செல்லலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா... சூப்பர். இன்னைக்கே எங்காள்'ட சொல்லி அந்த ப்ரெட் மா வாங்கி வந்து இந்த வார இறுதிக்குள் செய்து சொல்றேன். எனக்கும் அவருக்கும் இது போன்ற வகை ரொம்ப பிடிக்கும். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அதிரா
அசத்திட்டிங்க............... இது விட்டில இவளவு சுலபமா செய்யலாமா எனக்கு ரொம்ப பிடிக்கும் கறி பன்.குறிப்புக்கு நன்றி.
ஆற வைத்த தண்ணீர்,இது இழான்சுட்டு தண்ணிய?
400 F என்னுடைய அவுநில 1-8 இருக்குது இதில் எந்தனம்பரில் வைப்பது?காஷ் அவிநிலையும் செய்யலாம் தானே?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

கறி பன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் நன்றாய் பிடிக்கும். நான் இறைச்சி+உருளைகிழங்கு கறிபிரட்டல் வைத்து செய்வேன். லீர்ச் வைத்து செய்வது புது முறை, கட்டாயம் செய்து பார்த்து செல்லுகின்றேன். கேடைகாலத்திற்கேர்ற நல்ல குறிப்பு. நன்றி மீட்டும் வருவேன். இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது...செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் மேடம்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அதிரா நலமாக இருக்கிறீங்களா?.உங்க கறிபன் குறிப்பைப்பார்த்ததும் உடனேசெய்துவிட்டேன். எல்லாப்பொருட்களும்வீட்டில் இருந்தபடியால் உடனே செய்துவிட்டேன்.மிகவும் நன்றாகவும் டேஸ்டாகவும் இருந்தது. நன்றி. (நான் கூடுதலாக கரட், பனீர்துருவலும் சேர்த்துப்போட்டேன்.) உங்கள் சேவை அறுசுவைக்குத்தேவை) அன்புடன் அம்முலு....

அதிரா சூப்பர்.puff pastry எல்லாம் வாங்கி செய்வதை விட இது மிகவும் ஆரோக்கியமானது,நன்றி தோழி.bread flour என்று தனியாக கிடைக்கிறதா?அல்லது நம்ம ஆட்டா மாவு தானா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா எப்படி இருக்கீங்க?ரொம்ப நல்ல அயிட்டம் கொடுத்திருக்கீங்க.பார்க்கவே செய்யத் தோணுது.ஆல்-பர்பஸ் மாவுதானே நீங்க சொல்றது?நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு சொல்றேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என்னோட பேபரிட் நான் இது நாள் வரை ரெடிமேடா வாங்கி செய்துள்ளேன். அடுத்த முறை உங்க மெத்தேட் தான்.
அவசியம் நான் செய்துட்டு சொல்கிறேன்.
இங்கு ப்ரெட் ப்ளோர் கிடைக்கும் அதை இந்த வார இறுதியன்று போய் வாங்கி அவசியம் செய்கிறேன்
அருமையான் அயிட்டம், சூப்பர் அதிரா.

யாரும் சமைக்கலாமில் வெளுத்து வாங்கும் அன்பு அதிரா வாழ்க.உடனே செய்யத்தூண்டும் ரெஸிப்பி.செய்து விட்டு அவசியம் பின்னூட்டம் கொடுக்கிறேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

hi,
could u plez tell me where i find the peerkangai pachadi.i think few days back ila mentioned abt that i goes with chapati,ingre: peerkangai and .......i forgot that.i couldnt find that anywhere in arusuvai.
thanks in advance

அன்பு அதிரா

லீக்ஸ் என்பது கிரீன் / ஸ்ப்ரிங் ஆனியன் தானே.. நீங்க போட்டுள்ள படத்தை வைத்து சொல்கிறேன்..

புது வீட்டுக்கு (அவன் இருக்கும்) போனால் செய்து பாக்கனும்னு நிறைய அயிட்டம்ஸ் வைத்துள்ளேன்.. இப்போ இதுவும் சேர்ந்துகொண்டது... ரொம்ப தெளிவா இருக்கு.. நன்றி...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

http://www.arusuvai.com/tamil/node/1003

இதில் போய் பாருங்க.

thanks for ur reply viji,
but this is not the one im asking that is without coonut and tamarind.

வனிதா செய்து சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கோ மிக்க நன்றி.

சுகா இது இளஞ்சூட்டுத்தண்ணிதான். நீங்கள் ஹாஸ் மார்க்கை 4 இல் வையுங்கோ. எதற்கும் அவணைத் திறந்து பண் கலரை இடைக்கிடை கவனியுங்கோ. பிறவுண் ஆனதும் எடுங்கோ. எந்த அவணிலும் செய்யலாம். இப்போ எங்களிடம் இருப்பது ஹாஸ் அவண்தான்.

ராணி, இளவரசி மிக்க நன்றி.

அம்முலு செய்துவிட்டீங்களா? மிக்க நன்றி. /// உங்கள் சேவை அறுசுவைக்குத் தேவை ///, என்னைப்பொறுத்து அறுசுவைதான் எமக்கு மிகப் பெரிய சேவை செய்கிறது... அதனால்தானே நாம் வெளியுலகுக்கு அறிமுகமாகி, இத்தனை அன்புள்ளங்கள் கிடைத்துள்ளார்கள். "அறுசுவையின் சேவை, எமக்குத் தேவை" ... இது எப்படி இருக்கு:)?.

ஆசியா மிக்க நன்றி. ஓம் பிரெட் செய்யும் மா ரெடிமேட்டாகக் கிடைக்கிறது, அதில் செய்தால் soft ஆக வரும். இல்லாவிட்டாலும் பறவாயில்லை, கோதுமை மா(plain flour) விலும் செய்யலாம், நான் செய்திருக்கிறேன் நன்றாகவே வரும். கொஞ்சம் நன்கு அடித்துக் குழைக்க வேண்டும், அப்போதான் மென்மை கிடைக்கும்.

அப்சரா கனநாளைக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள் மிக்க நன்றி. இது bread section இல் கிடைக்கும் bread flour என்று. இல்லாவிட்டால் plain flour ஐப் பயன்படுத்துங்கள்.

விஜி மிக்க நன்றி. நானும் இடைக்கிடை இப்படி, உள்ளே பலமாதிரிக் கறிகளை வைத்துச் செய்வேன். பிள்ளைகளுக்கும் பிடிக்கும். முக்கியமாக எங்காவது தூர drive போகும்போது செய்துகொண்டுபோகலாம்.

ஆகா ஸாதிகா அக்கா நீங்களும் வந்திட்டீங்கள் மிக்க நன்றி.
///யாரும் சமைக்கலாமில் வெளுத்து வாங்கும் அன்பு அதிரா வாழ்க/// ஸாதிகா அக்கா, நான் எங்கே வெளுத்து வாங்குகிறேன்:) நான் பயத்தில் வெளிறிப்போய் இருக்கிறேன்:) கேள்விமேல் கேள்வி கேட்டு என்னையல்லவா வெளுத்து வாங்குகிறார்கள்:).

ஜெயந்து விரிவான தேடலில் தேடிப்பாருங்கள் அல்லது யாராவது பதில் தருவார்கள்.

சந்தனா... வாழ்த்துக்கள் புதுவீடுசெல்லவும் அவணில் சமைக்கவும். இல்லை சந்தனா அது spring onion, இது leeks. கிட்டத்தட்ட இரண்டும் ஒரே விதம், ஒரே குடும்பத்தாவரமாக இருக்கலாம் ஆனால் இது பெரிது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சந்தனா leeks-ன் இலை(??) கொஞ்சம் அகலமாக இருக்கும்.

http://www.foodsubs.com/Onionsgreen.html

Patience is the most beautiful prayer!!

அதிரா உத்ரா.. மிக்க நன்றி.. இப்போது தான் உத்ரா கொடுத்த லிங்கில் பார்த்தேன்.. ஆம்.. இது ரெண்டும் ஒரே குடும்பம் தான் போல.. ஆனால் வேறு.. ஒன்று சிறிய இலை..மற்றொன்று... பெரிய இலை..(சந்தனாவும் அதிராவும் போல, respectively) :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் அதிரா
உடன் பதில் தந்ததுக்கு நன்றி அதிரா இந்தா கிழமை கடைசியில் செய்துபத்திற்று பின்னுட்டம் அனுப்புகிறேன்.
நான் பயத்தில் வெளிறிப்போய் இருக்கிறேன்:) கேள்விமேல் கேள்வி கேட்டு என்னையல்லவா வெளுத்து வாங்குகிறார்கள்:).அவ்வளவு நல்ல ரெஸபி குடுத்திருக்கிரிர்கள் அதுதான்,
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

Jai

நீங்கள் தேடியது இதுதானா?

http://www.arusuvai.com/tamil/node/6564

நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS

அதிரா உங்க கறி பன் இப்ப தான் செய்து முடிச்சேன்.... ரொம்ப அருமை, நல்ல சுவை. இனி இதுவும் அடிக்கடி செய்வேன்.... நல்ல குறிப்பு குடுத்ததுக்கு மிக்க நன்றி. இந்த ஊர் ஸ்பெஷல் பன்னும் நீங்க சொன்ன மாதிரி முயற்சி பண்ணேன்.... சூப்பரா வந்தது. :)

முக்கியமான விஷயத்தை சொல்லாம போயிட்டனே... இரண்டு கையிலும் ஒவனில் சூடு வெச்சுகிட்டேன்.... :(( பாவம் வனி... எரியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாவம் வனி.....:)
அதிராவைத் திட்டிக்கொண்டு ஏதும் செய்யவில்லையே:)? கையிலே சூடுபட்டதென்றீங்கள் அதுதான் கேட்கிறேன்:) மிக்க நன்றி வனிதா.. பண் உள்ளே என்ன, சிக்கின் பிரட்டலா வைத்தீங்கள்?.

சுகா நான் சொன்னது இங்கே கேள்வி கேட்பதை அல்ல:).
எங்கட ரெயினில ஏறி நல்ல வடிவா இருந்துகொண்டு...
யூஸ் இருக்கோ:), ஏசி இருக்கோ:), ஏன் ஸ்லோவா இருக்கு:), என்ன கூட்டமே இல்லை:), ஏன் புகை வருகுது:), இப்போ புதுஷா பிளேனும் வருகுது வேவு பார்க்க:) அந்தக் கேள்விகளைப்பற்றித்தான் சொன்னேன் நகைச்சுவைக்காக:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்க சொன்ன உருளை கறியும், இந்த ஊர் ஸ்பெஷல் (தேங்காய் துருவல் + சீனி + நட்ஸ் நொறுக்கியது) கலந்து வைத்தும் செய்தேன். ஒரே வகையா செய்யாம இதையும் இப்பவே முயற்சி செய்யலாம்'னு தான் செய்தேன். அதிராவை திட்டுவேனா??? இல்லவே இல்லை, அதிரா தான் நல்ல பிள்ளை ஆச்சே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பதில் தந்ததற்க்கு நன்றி அதிரா.மற்றொரு சந்தேகம்.தாங்கள் சொன்ன லீஃப்க்கு பதிலாக ஸ்ப்ரிங் ஆனியன் யூஸ் பண்ணி பார்க்கலாம் என நினைக்கிறேன்.செய்யலாம் தானே?
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஓஒ.........அதுவா அதுதான் உங்களுடைய வெற்றியே உங்கள் நகை சுவைக்கு நான் ரசிகை அதிரா உங்களுடைய சமையலுக்கும் தான் இந்த கிழமை நிறைய உங்களுடைய சமையல் தான் விட்டில உங்களுடைய பால்கறி எல்லாம் சூப்பர் தொடரட்டும் உங்களுடைய சேவை நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

இன்று சனிக்கழமை, நல்ல வெதர். எனவே மூன்று குடும்பம் சேர்ந்து கப்பல் ரூர் பேனோம். அப்போது அதிரா மடத்தின் கறி பன் செய்து எடுத்திட்டு போனேன்.கப்பலில் இருந்து சாப்பிடும்பேது நன்றாக இருந்தது.எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.வெளியில் எடுத்துச்சென்று சுலபமாக சாப்பிடக்குடிய ஓர் சிறந்த ரேசப்பி. நன்றி அதிரா.இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

///அதிராவை திட்டுவேனா??? இல்லவே இல்லை, அதிரா தான் நல்ல பிள்ளை ஆச்சே.///
வனிதா இப்பத்தான் நீங்கள் குட் கேள்:).

அப்சரா, நான் ஸ்பிறிங் அனியன் பெரும்பாலும் பாவிப்பதில்லை எதற்கும். ஏனெனில் அதில் ஒருவித வழுவழுப்புத்தன்மை இருப்பதால் எனக்கது பிடிப்பதில்லை. இங்கு கட்டாயம் லீக்ஸ்தான் பாவிக்கவேணுமென்றில்லை, நீங்கள் கிழங்கின் அளவைக்குட்டி, ஸ்பிறிங் அனியனில் கொஞ்சமாக சேர்த்துச் செய்யுங்கள். ஸ்பிறிங் அனியன் என்றால் அதிகம் வதக்கத் தேவையில்லை. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

அப்படியா சுகா மிக்க நன்றி. கேட்க சந்தோஷமாக இருக்கு.

ராணி, மட்டின் கறியில் பன் செய்தீங்களோ? பிறகென்ன சுவை சொல்லத்தேவையில்லை. மிக்க நன்றி ராணி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, நேற்று மகனுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி இருந்தது. அதற்கு உங்கள் கறிபன் செய்து கொண்டு போனேன். சூப்பர் சுவையாக இருந்தது.அங்கு வேறு ஒரு தமிழ் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். அவர்களும் சாப்பிட்டார்கள், சுவை நன்றாக இருக்குது என்று சொன்னார்கள்.உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஆ... வத்சலா
நீங்களும் செய்துவிட்டீங்களோ மிக்க நன்றி. இன்று கொஞ்சம் அறுசுவை கஸ்டம்கொடுக்கிறதே..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ராணி..ராணி
எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கு. நான் எப்பவும் இப்படித்தான்:), அவசரமாக வாசித்துப் பதில் அனுப்பிவிடுவேன்:), நீங்கள் அதிரா "மடத்தின் கறி பண்" எனப்போட்டதை நான் மட்டின் கறிபன் என வாசித்துவிட்டேன். நீங்கள் சொல்லித்தான் புரிந்துகொண்டேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா
இன்று தான் உங்களுடைய கறி பன் செய்தேன் ரொம்ப நல்லை வந்தது.குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுகா மிக்க நன்றி. அடாது மழை பெய்தாலும், விடாது தரும் உங்கள் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நலமா?

சூப்பரா கலக்கி கொண்டு இருக்கீங்க ஒரு பக்கம் உங்கள் சமயல், மறுபக்கம் தோழிகளின் சமையல் ம்ம் பார்க்கவே நல்ல இருக்கு/

Jaleelakamal

ஜலீலாக்கா,

உங்களை மீண்டும் அடிக்கது காண்பதில் மகிழ்ச்சியே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிர

சிறப்பு சமையல்களில் மீதிக்கு இப்போதான் ஒவ்வொன்றாகப் பின்னூட்டம் கொடுத்துக் கொண்டு வருகிறேன்.

உங்கல் கறிபண் இங்கு படத்தில் இருப்பது போலவே நன்றாக வந்தது. மூத்தவர் விருப்பமாகச் சாப்பிட்டார்.

ஒன்றே ஒன்று அதிராவுக்காக ஸ்பெஷலாக தயாரித்து எடுத்து வைத்தேன். அட்மினுக்கு அனுப்பினேன், நான் இங்கு பின்னூட்டம் கொடுக்காமல் அவர்கள் எப்படிப் போடுவார்கள். பொறுத்திருங்கள், வரும்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. இமா அவர்கள் தயாரித்த கறி பன்னின் படம்

<img src="files/pictures/aa320.jpg" alt="picture" />

அதிரா, உங்கள் குறிப்பிலிருந்து இமா செய்து உங்களுக்கு அனுப்பவிருந்த கறிபண், நாங்கள் தான் சாப்பிட்டோம். மிகச்சுவையாக இருந்தது.
அன்புடன்
செபா

அதிராவுக்கு நான் அனுப்பிய பரிசைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க நன்றி அட்மின். :)

பூனைக்குப் பொருத்தமான பரிசுதானே அதிரா!! பரிசு பிடித்திருக்கிறதா?

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பூனைக்கான பரிசு மிகவும் அழகு இங்கும் உங்கள் கைவண்ணத்தை காட்டி உள்ளீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது :))
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இம////... பூனை பாய்ந்ததில் கொம்பியூட்டர் கீழே விழுந்துவிட்டது..... உண்மையில் கொள்ளை அழகு.. உங்கள் கற்பனையில் உதித்தது அதைவிட அழகு. மிக்க நன்றி இமா. இருந்தாலும் பூனைக்குக் கொடுக்காமல் செபா ஆன்ரிக்கு கொடுத்தது பூனையாருக்குப் பிடிக்கவில்லை:)..

செபா ஆன்ரி உங்களுக்கும் மிக்க நன்றி, எனக்காக சாப்பிட்டமைக்கு.

இம/// உங்கள் பேக்கிங் நல்ல கலராக வந்திருக்கு.. எனக்கே இப்படிக் கலர் வரவில்லை... அதுசரி இது என்ன சாதி எலி இமா? வெள்ளெலியோ? சுண்டெலியோ? பூனையார் கண்டதையும் சாப்பிடமாட்டார்... அவருக்கு அலர்ஜியும் இருக்காம்..

///ஹாய் அதிர/// இமா இது என்ன அதிர.. கதிர... என்றெல்லாம் கூப்பிடுறீங்கள்? நீங்கள்தான் எல்லோரும் காலை எடுக்கினம் என ஒருக்கால் சொன்னதிலிருந்து நான் வலு கவனம்.. கால் எடுக்காமல் பார்த்துக்கொள்ளுவன்... இப்ப எனக்கே கால் போச்சே... அதுதான்.. ஸ்டைலாக்கும் இப்ப என நினைத்து நானும் காலை எடுத்திட்டேன் இம....

இந்த அழகான எலியை வெளியிட்ட அட்மினுக்கும் மிக்க நன்றி. (இப்ப அட்மின் ஆரென்று தெரியாததால கதைக்கவும் பயமாக இருக்கு:))

அநாமிகா பார்த்தீங்களோ... இந்த அழகான எலியைக் காட்டி பூனையை மயக்கப்பார்க்கிறார் இமா.. இருந்தாலும் கைக்கெட்டியது.. இல்லையில்லை.. கண்ணுக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை...

மிக்க நன்றி இமா.. கறிபண்ணாகச் செய்து போட்டிருந்தாலும் இப்படிச் சந்தோஷம் வந்திருக்காது, எலியாகப் போட்டதனால் சரியான சந்தோஷமாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஈஸ்ட் இல்லாம செய்யலாமா???

Dreams Come True..

ஈஸ்ட் அவசியம். அல்லாவிட்டால் பன் பொங்கி வராது.

‍- இமா க்றிஸ்

இது all purpose flour?

shagila