கூல்ட்ரிங்ஸ்,ஐஸ்கிரீம்‍ கடை பெஞ்சு-அரட்டை 80

ஹாய் தோழிகளே!

எல்லோரும் உங்க அரட்டையை இங்கே தொடருங்க...

சம்மர் வந்தாச்சு...எல்லோரும் இந்த சம்மரை எப்படி உபயோகமா,ஜாலியா,டென்ஷன் இல்லாமல் கழிக்கலாம் என்றும்,இந்த பார்ட்டிஸ்,வெளியிடங்களுக்கு செல்லுதல் எப்படி? இன்னும் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ வந்து சொல்லுங்க.......

அன்புட‌ன்
உமா.

ஹாய் உமா.. நீங்களும் குழந்தையும் நலமா.. ரொம்ப நாளாச்சு உங்க கூட பேசி... !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் சந்தனா...

நாங்க நலம்,நீங்க எப்படியிருக்கிறீங்க? நானும் இதையே உங்களுக்கு முன் கேட்கணும் என்று நினைத்தேன்.

கொஞ்சம் பிஸி...இங்கே அறுசுவையில் வந்து பதில்கள் மட்டும் கொடுத்து விட்டு சென்று விடுகிறேன்...

உங்க சம்மர் பிளான் பற்றி சொல்லுங்க...

உமா.

: ( : ( உமா எங்க சம்மர் ப்ளான் பத்தியா கேட்டீங்க... சரி தான் போங்க... இப்போதைக்கு இவரோட விடுமுறை எல்லாம் முடிஞ்சு போச்சு.. வீடு வேறு மாத்தனும்.. சோ... நேரம் இல்லை எங்கயும் போக..

அதனால வீட்டிலேயே ஐஸ்க்ரீம், ஜூஸ்... அவ்வளவு தான் எங்க சம்மர்...

நானும் ரெண்டு மூணு நாளா இங்கயும் அங்கயும் வெளிய போயிட்டு இருக்கேன்.. இப்போ பாக் பண்ண லிஸ்ட் போட்டுட்டு இருக்கேன்... இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதே நிலைமை தான்.. பார்ப்போம்.. உங்க கிட்ட கேட்கனும்னு கொஞ்சம் சந்தேகம் எல்லாம் வச்சிருக்கேன்.. அப்புறமா வந்து கேட்கறேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் தோழிஸ்

என்னுடைய சம்மர் பிளானையும் கேளுங்க...சந்தனா உங்க கதையே தான் எனக்கும்...இன்னும் கொஞ்சம் அதிகமிருக்கு(ரோஹித்...நல்லா ஹெல்ப் பண்ணறார்)...

நாங்களும் ஜூலை என்டில் வீடு ஷ்ப்ட் பண்ணணும்,ஆகஸ்ட் பாதியில் இந்திய பயணம்... அதனால நானும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிச்சுயிருக்கேன்...

அதனால எனக்கும் வேற ஏதுமில்லை பிளான்...இடையில அதற்குமுன் சில பார்ட்டிகள் மட்டும் தான்.

நானும் ரோஹித் கூட்டிட்டு வெளியில் புற‌ப்ப‌டுகிறேன்,மீண்டும் ச‌ந்திப்போம்
உமா.

அப்ப இந்தக் கடை இமாவுக்கு இல்லை.

‍- இமா க்றிஸ்

இமா அங்க காணாம போயி இங்க வந்துட்டீங்களா??? பரவாயில்லை.. உங்களுக்காக ஸ்பெஷல் டீ / காபி... சுடச்சுட கறி பன் எல்லாம் வச்சிருக்கோம்...

அப்போ அனாமிகாவும் இமாவும் ஒருவரா?? தலை சுற்றுகிறது எனக்கு.. :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

//அப்போ அனாமிகாவும் இமாவும் ஒருவரா??//
:)

‍- இமா க்றிஸ்

என்ன எல்லாரும் ஒரே அரட்டையா?

உமா வித விதமா கடையெல்லாம் போடறீங்க போலயிருக்கு,நீங்களே இப்படி ஐஸ்க்ரீம்,கூல்டிரிங்ஸ்'னு சொல்லி டயட் இருக்கற பிள்ளைகளை உசுப்பேத்திவிடலாமா???

சந்தனா எனக்கு ஐஸ்கிரீம் கொடுத்திட்டீங்கல்ல,இனிமே வாழ்நாளில் ஒரு நாள் கூட சளிப்பிடிக்காது பாருங்களேன்:)(ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதெல்லாம் என்னை நினைச்சுக்கோங்க அப்பதான் ஜல்ப்புப் பிடிக்காது:))

என்னை நல்லவ இல்லனு சொன்னவங்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடும்போது.....:)

இமா(மட்டும்):) எப்படி இருக்கீங்க,வின்டர் எப்படி இருக்கு?

ஜ‌லீல‌க்கா நாங்க‌ எல்லாரும் ந‌ல‌ம்.

சந்தனா,

நான் நலம் நீங்கள் நலமா? நீங்க பசங்க படம் பார்த்த அதே டைம் ல தான் நானும் அந்த படம் பார்த்து முடிச்சேன். படம் பார்த்துட்டு அறுசுவையை ஒரு லுக் விட்டுட்டு போலாம்னு வந்தா நீங்க அங்க பதிவு போட்டிருந்திங்க. இப்ப தான் படம் பார்த்து முடித்தேன் என்று

அனாமிகாவும் இமாவும் ஒருவரல்ல.

நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS

மேலும் சில பதிவுகள்