கடாய் சிக்கன்

தேதி: June 18, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

எலும்பில்லா சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - ஒன்று
தயிர் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு அரவை - 1 1/2ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது


 

சிக்கனை நன்கு கழுவி விட்டு சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
அதில் தயிர், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சோம்புத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி குறைந்தது 10 நிமிடமாவது ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அகன்ற வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் ஊறவைத்திருக்கும் சிக்கன் கலவையை அதில் சேர்த்து கிளறவும்.
அதில் உள்ள தயிர் தண்ணீர் விட்டுவிடும். எனவே தண்ணீர் சேர்க்காமல் அதிலேயே வேகவிடவும்.
அடுப்பு மிதமான தனலில் இருக்கவேண்டும். அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.
வெந்து நன்கு மசாலா எல்லாம் ஒட்டி மொறுவலானதும்,
மல்லித்தழை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

today i cooked this recipe.is look very good

karunai niraintha idhayam kadayulin aalayam

அப்சரா, இந்த குறிப்பை நான் பலமுறை செய்துள்ளேன். எப்பொழுதும் செய்வதற்கு சுலபமாகவும், மிகவும் நன்றாகவும் இருக்கும். லேட்டா பின்னூட்டம் குடுப்பதற்கு என்னைய திட்ட மாட்டிங்கல்ல:) மிக்க நன்றி.

அப்சாரா உங்கள் கடாய் சிக்கன் இன்று நல்ல செய்தேன் நல்ல இருந்தது.செய்வது ரொம்ப சுலபமாக இருந்தது.

Jaleelakamal

ஜலீலா..மேடம்,எப்படி இருக்கீங்க?நீங்கள் என் குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த கடாய் சிக்கனின் படம்

<img src="files/pictures/aa365.jpg" alt="picture" />