கொத்தமல்லி இலை ரசம்

தேதி: June 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கொத்தமல்லி இலை - ஒரு கட்டு
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைக்கவும். புளியை ஒரு டம்ளர் நீரில் கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, 2 காய்ந்தமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.
அதே மிக்ஸியில் தக்காளியை துண்டுகளாக நறுக்கி போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். அதில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு கறிவேப்பிலையையும் போடவும்.
பின்னர் கொத்தமல்லி இலையை போட்டு வதக்கவும். இலை வதங்கி வரும்பொழுது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் புளிக்கரைச்சலை ஊற்றி கொதிக்க விடவும்.
புளிக்கரைச்சல் கொதித்து வரும் பொழுது அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரக விழுதினை சேர்க்கவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதினை அதில் ஊற்றவும்.
ரசம் ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான கொத்தமல்லி ரசம் தயார். இதனை சாதம், புட்டு, இடியப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். அறுசுவை நேயர்களுக்காக இந்த கொத்தமல்லி இலை ரசத்தினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வத்சலா அழகாக கொத்தமல்லி ரசம் செய்துகாட்டியிருக்கிறீங்கள். படம் பார்க்கவே, நல்ல வாசனை, மூக்கில் வருவதுபோல ஒரு உணர்வாக இருக்கு.. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இதோ செய்யப்போகிறேன். தக்காழி சேர்க்காமல். செல்வியின் பீற்றூட் பிறியாணிக்காக வாங்கிய கொத்தமல்லியில் மிகுதி இருக்கு, அதில் செய்யப்போகிறேன்.

நான் வழமையாக கொத்தமல்லி வாங்குவதுமில்லை, சேர்ப்பதுமில்லை. இன்று வனிதாவின் கீரைப் பொரியலும் இந்த ரசமும் செய்யப்போகிறேன்... முடித்துக்கொண்டுவருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அறுசுவைக்குள் வரும்போதே கொத்தமல்லி வாசம் மூக்கை துளைக்கிறதே என்று பார்த்தால் இன்றைய ஸ்பெஷல் வத்சலாவின் ரசம் தான்.ஏற்கனவே சமைத்து அசத்தலாமில் செய்து இருப்பதால் இதன் ருசி எனக்கு தெரியும்.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வத்சலா, கொத்தமல்லி ரசம் உடனே செய்து உடனேயே முடிந்துவிட்டது, வீட்டில் அனைவருக்கும் ரசம் என்றால் பிடிக்கும், இது கொத்தமல்லி இன்னும் நன்றாகவே இருந்தது. படம் வரும் பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்ல அருமையான ரசம். பார்க்கும் சுவையில் நாக்கு ஊறி விட்டது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அதிரா,ஆசியா,த‌னிஷா உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அதிரா உடனே செய்து கூறியமைக்கு மிக்க நன்றி.ரசம் உடனே முடிந்து விட்டது என கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.இனி அடிக்கடி செய்து அசத்திவிட வேண்டியது தானே! படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஆசியா, உங்கள் கருத்தைப் பார்க்கும் போதே இன்னமும் நிறைய செய்து அனுப்ப வேண்டும் போல் இருக்கிறது.நீங்கள் முன்னமே செய்து அதன் சுவையை தெரிந்து கொண்டீர்கள் தானே, உங்களுக்கும் மிக்க நன்றி.

த‌னிஷா, நாக்கு ஊறிவிட்டதா அருகில் இருந்தால் உடனே தந்திருப்பேன்.ஏன்னென்றால் இன்றும் இந்த ரசம் செய்தேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

கலோ வத்சலா! இன்று உங்கள் கொத்தமல்லி இலை ரசம் செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.முன்பு நான் இதேமாதிரித்தான் கொத்தமல்லி இலைக்கு பதிலாக கொத்தமல்லி விதையை பவுடராக்கி போடுவேன்.ஆனால் உங்கள் முறை மிகவும் சிறந்தது.இனிமேல் நான் ரசம் வைப்பதென்றால் இம்முறையைய்தான் கையாளுவேன்.ஒரு நல்ல குறிப்பு ததுள்ளிர்கள் நன்றி.இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வத்சலா இந்த ரசத்தை உங்க வாரம் சமைத்து அசத்தலாம் அப்பவே செய்துட்டேன். பின்னூட்டம் தான் கொடுக்கலை. நான் செய்த மாதிரியே இருக்கு:-)). இந்த ரசம் வைத்த உடனே காலியாகி விட்டது.அவ்வள்வு வாசம், அருமை. நன்றி!

ராணி, மாலி உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ராணி, உங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பிசாப்பிட்டார்கள் என கேட்டும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

மாலி, உங்கள் வீட்டில் உடனே காலியாகிவிட்டதா? மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த கொத்தமல்லி ரசத்தின் படம்

<img src="files/pictures/aa294.jpg" alt="picture" />

அதிரா, உடனே செய்து படமும் அனுப்பியமைக்கு மிக்க நன்றி. அட்மினுக்கும் மிக்க நன்றி. படம் சூப்பர்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் வத்சலா,
நேற்று உங்க கொத்தமல்லி ரசம் செய்தேன். கொத்தமல்லி வாசனையோட சூப்பரா சாப்பிட சுவையா இருந்தது. எப்பவுமே என் கணவருக்கு ரசம் என்றாலே ரொம்ப இஷ்டம், அதிலும் இந்த ரசம் எனக்கும் பிடித்திருந்தது. பிரெஷ்ஷா எல்லாம் அரைச்சி சேர்த்தாலே ஒரு அலாதி ருசிதான்! குறிப்புக்கு நன்றி வத்சலா.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கொத்தமல்லி ரசம் அருமையோ அருமை, தொட்டுக்கா கவிதாவோட பாகற்காய் பொறியல், சான்ஸே இல்ல, ரசத்தை அப்படியே குடிச்சிட்டேன் போங்க. மிக்க நன்றி.

யம்மி! யம்மி!

அன்புடன்
பவித்ரா

கொத்தமல்லி ரசம் ரியலி சூப்பர் டேஸ்ட். எனக்கு எப்பவுமே ரசம்தான் ரொம்ப பிடிக்கும்
அதுவும் இப்போ இருக்கும் மழைகாலத்தில் இந்தரசம் சூப்பரோ சூப்பர்தான்