பட்டிமன்ற தலைப்பு - பெண்களின் அதிக மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே/பின்பே - இளவரசி

அன்பு தோழிகளே, பெண்களாகிய நாம் நம் பிறந்த வீட்டில் இருந்தபோது அதிகம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருந்தோமல்லவா?புகுந்தவீடு வந்தபின் அந்த மகிழ்ச்சி கூடியிருக்கிறதா? இல்லை குறைந்திருக்கிறதா?

என்ன குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க பார்க்கறாங்கலேன்னு சொல்றீங்களா...?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை..அவரவர் அனுபவத்தில் எது உண்மையாக நினைக்கிறீர்களோ அதை அப்படியே எழுதலாம்..காத்திருக்கிறேன்...உங்களின் சுவாரஸ்யமான கருத்துக்களுக்காக

நிச்சயமாக மகிழ்ச்சி கூடியிருக்கிறது

வாழ்க வளமுடன்

இளவரசி நிச்சயம் மகிழ்ச்சி மிக அதிகமாக கூடி இருக்குப்பா........

என் பாட்டி, அம்மா சென்ன ரகசியம். இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

******** குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை *******

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என்னுட கருத்து இரண்டு வீட்டிலும் என்க்கு சந்தோசம் கிடெக்கிறது.என்னால் தான் பிறருக்கு இல்ல.நான் ஒரு முன் கோபி.hi prabathamu.i want to talk with u about my fertility problems if u dont mind just inform me.and i will give my email id.pls friend.

usakaveri!!
Send me mail if you want I will provide as much info about the process in US with regd to th treatment options.ilaveera at gmail

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

thanks ela.my id usakaveri@yahoo

ஹாய் யொகேஸ்வரி ( usakaveri ) பெயர் சரியா. நலமா இருக்கியாப்பா? நான் உங்கலுக்கு மெயில் பன்னிட்டேன் பாருப்பா.

இலா நலமா இருக்கிங்கலா? என்கிட போச மாட்டங்கரிங்க? ஏம்பா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரியா,பிரபாதாமு....உங்கள் இருவருக்கும் நன்றி.....நல்ல கருத்திற்கு...

என் வாழ்க்கை டைரியிலிருந்து நான் எழுதி
வைத்த ஒரு சில வரிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.பாருங்கள்...படியுங்கள்...

அன்றும்....இன்றும்....

முன் தூங்கி பின் எழுந்த
நாட்களும் உண்டு...அன்று..!
பின் தூங்கி முன் எழும்
நாட்கள் மட்டும் தான் உண்டு...இன்று!

அதிகாலையில் எழுப்பிய அம்மாவிடம்
"இன்னும் கொஞ்ச நேரம்மா..ப்ளீஸ்"
சிணுங்கி புரண்டு படுத்தேன் செல்ல மகளாய்..அன்று..!

அதிகாலையில் தூங்குகின்ற மகளிடம்
"சீக்கிரம் எழுந்திரும்மா,நேரமாச்சு"
கட்டளையிடுகிறேன்...கண்டிப்பான
அம்மாவாய் இன்று..!

சமையலறையில் சாப்பிடும் நேரமட்டும்
வாசம் பார்க்க நுழைவேன்...அன்று!
சமையலறையில் சர்வ நேரமும் (சு)வாசம் செய்கிறேன் இன்று!

அம்மாவின் சாப்பாட்டில் எவ்வளவு சுவை இருந்தாலும்..
ஏதாவது குறை கூறுவேன்...
விளையாட்டாக அன்று...
என் சாப்பாட்டில் எல்லாம் சுவைக்க
யாருமே குறைகூறக்கூடாதே என்று
கவனமாக சமைக்கிறேன் இன்று..

படித்த படிப்பிற்கு பிடித்த வேளையில்
கருத்து பரிமாறும் கல்லூரி
ஆசிரியையாய் அன்று..!
படிக்கும் பிள்ளைகளின் பிடிக்கும்
தேவைகளை...பூர்த்தி செய்யும்
இல்லத்து ஆசிரியையாய் இன்று..

மகளாய் அப்பாவின் மனம்
வருத்துவேன் சில நேரங்களில்
சிறுபிள்ளைத்தனமாய் ..அன்று..!
மனைவியாய்..கணவனின் மனம்
வருத்தாமலிருக்க முயற்சிக்கிறேன்..
பெருந்தன்மையாய்...இன்று..!

மகளாய் . விருப்பங்கள் கூறினேன்...அன்று!
மருமகளாய்..விருப்பங்கள் கேட்கிறேன்..இன்று..!
மொத்தத்தில்

அம்மா..அம்மா..என முந்தானை பிடித்து
நான் சுற்றிய சுதந்திர நாட்கள்...ஆனந்தமா?
அம்மா..அம்மா என என் துப்பட்டா பிடித்து
என் பிள்ளைகள் சுற்றும் இந்த நாட்கள் ஆனந்தமா?
இதுவும் ஆனந்தம்...அதுவும் ஆனந்தம்...!
எது பேரானந்தம்....?....நீங்களும் சொல்லுங்களேன்..நான் கேட்கிறேன்...

புரியாத பிரியம் பிரியும் போது
புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என்ன இளவரசி... அங்க எல்லாரும் பட்டிமன்றத்து தலைவர் வருகைக்காக காத்து இருந்தா நீங ஒரு சின்ன மன்றத்தை ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. ;)

இங்க இருக்க மக்கள் எல்லாம் கல்யாணம் ஆகி பலரும் குழந்தையோட இருக்கவங்க.... கண்டிப்பா திருமணத்துக்கு பின் தான் சந்தோஷம்'னு தான் பதில் வரும். :D ஹிஹிஹீ... ஆனா நம்ம கதை வேறு... வாழ்வில் கல்யாணம் பண்ணி சில சந்தோஷங்கள் கிடைத்தாலும் பலதை மிஸ் பண்ணிட்டதா நம்பறேன். :) அன்பான கணவர், அழகான குழந்தை மட்டுமே வாழ்க்கை இல்லையே... அதான் காரணம். இந்த விஷயத்தை பொருத்தவரை இது தான் சந்தோஷம்'னு யாரும் முடிவா சொல்ல முடியாது, அது அது அவங்க அவங்க வாழும் வாழக்கையை பொருத்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிக்கு ,நன்றி நல்ல கருத்திற்கு.
மகிழ்ச்சி இரண்டு வீட்டிலும் இருக்கிறது. அந்த மகிழ்ச்சியின் விகிதம் அவரவர் மனம் மற்றும் சூழ்நிலையை பொருத்து மாறுபடுகிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமோ,குழப்பமோ இல்லை.எங்கே அதிக அளவு மகிழ்ச்சி என்பதில் ஒவ்வொருவரின் கருத்தும் நிச்சயம் வேறுபடுகிறது…அல்லவா? அவரவர் மனநிலைகேற்ப ….அதனால்தான் இந்த பட்டிமன்றம்.
இந்த தலைப்பின் நோக்கம் ,நம் பிறந்த / புகுந்த வீட்டின் குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக இல்லை .இரு வீட்டிலும் நாம் அனுபவித்த அனுபவிக்கிற அழகான சின்ன சின்ன சந்தோசங்களை..பகிர்ந்து கொள்ளத்தான்.மேலும் இதன் மூலம் அறுசுவை தோழிகளின் வாத/விவாத
திறமைகளை வளர்த்துக்கொள்ளத்தான்….இங்கே கருத்து மோதல்கள் மட்டுமே..
யாரையும் காயப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.எனவே இதில் வாத/விவாதம் செய்ய விருப்பமுள்ள தோழிகள் இரு அணியாக பிரிக்கப்படுவார்கள்.
யார் யார் எந்த எந்த அணியில் வாதிட போகிறீர்கள் என நீங்களே முடிவு செய்யுங்கள்..உங்கள் விருப்பங்கள் எனக்கு தெரிந்தபின் எந்த அணியின்
தலைவர் யார் என முடிவு செய்யலாம்…
முதலிலேயே அவரவர் பங்குக்கு ஒரே வரியில் தயவு செய்து தீர்ப்பை
சொல்ல வேண்டாம்..அதை கடைசியில் வைத்து கொள்வோமே…..
அணியின் பெயர்: ஆஹா அணி, ஓஹோ அணி
அதிக மகிழ்ச்சி பிறந்த வீட்டில்தான் என வாதிடுபவர்கள் – ஆஹா அணி
அதிக மகிழ்ச்சி புகுந்த வீட்டில்தான் என வாதிடுபவர்கள் –ஓஹோ அணி
மற்றவை உங்கள் பதில் கண்டு..
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆஹா அணி!!!!!!!!!!!!!
ஓஹோ அணி???????????????

மேலும் சில பதிவுகள்