சமைத்து அசத்தலாம் - 17, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -16, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -17 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , vijitvm(125), mahalakshmi pragatheeswaran(119) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம்.(இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (30/06) முடிவடையும். புதன்கிழமை(01/07), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".
----------------------------------------------------------------------------------------------------
மு.கு:- நான் இத் தொடரை ஆரம்பித்ததன் நோக்கமே, எல்லோரது குறிப்புக்களும் செய்துபார்க்கப்பட்டு, அக்குறிப்புக்களுக்கு பின்னூட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே. எனவே தயவுசெய்து, குறிப்புக்கள் செய்த எல்லோரும், இதுவரை எதற்காவது பின்னூட்டம் கொடுக்கத் தவறியிருந்தால், வரப்போகும் விடுமுறைக்குள் அனைத்தையும் கொடுத்துவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... நானும் கொடுக்காதவற்றைக் கொடுத்து முடிக்கவுள்ளேன். -----நன்றி-----.

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

அம்மு ,சுஸ்ரீ ,சுவர்ணா, அம்முலு , திருமதிஹூசைன், துஷ்யந்தி, வனிதா, வின்னி, உஷா, தனிஷா, ரேணுகா, சுகா, மேனகா, விஜி, ஆசியா, யோகராணி, சவூதிசெல்வி, ஸாதிகாஅக்கா, ஜாஸ்மின், கவிசிவா, வத்சலா ,மனோஅக்கா, இமா, இளவரசி, இலா, ஹைஷ்அண்ணன், மாலி, அனாமிகா மற்றும் சவூதிசெல்வி, கவிசிவா அனைவருக்கும் மிக்க நன்றி.

கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(22/06) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... இத் தலைப்போடு விடுமுறை விடவுள்ளோம், எனவே எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அருசுவையில் நாம் பார்த்திராத எவ்வளவோ குறிப்புகளை இந்த சமைத்து அசத்தலாம் பகுதி வழியாக பார்க்க முடிகிறது. எல்லாருக்கும் செய்து பார்க்க ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது இதற்க்கு எல்லாம் நாம் அருசுவைக்கும், அதிரா,ரேனுக்காவுக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.
அடுத்தாக நம் தோழிகள்+தோழர்கள் எல்லாரும் சேர்ந்த்து இந்த தொடரை நல்ல நகைசுவையோடும் அதே சமயம் நல்லபடியாகவும் எடுத்து செல்கிற பயனிகளும், ட்ரைவர், டிக்கெட் கலெக்டர் எல்லாருமாக ஒரு காமெடி+குக்கிங் என்று கலகலப்பாக தொடர்ந்து செய்து இந்த பகுதியை அசத்த வேண்டும் என்று கூறி நான் எல்லாருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அருசுவை அட்மினுகும் நன்றி.
என் குறிப்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து கேளுங்க நான் பதிலளிக்கிறேன்.
நன்றி நன்றி....................

இத்தனை வாரம் வெற்றியாய் நடத்தி அசத்திய அதிரா ரேணுவிற்கு எத்தனை முறை பாராட்டு தெரிவித்தாலும் தகும்.வழக்கம் போல் அதிரா ரேணு நான் வந்துவிட்டேன்.என் கணக்கு விஜி- பப்பாளி ஜூஸ்,சைனா மஹா- பப்பாளி கடலை சாலட்.வீட்டில் பப்பாளி இருந்ததால் இதனை தேர்வு செய்திருக்கிறேன்.பின்னூட்டம் தெரிவிக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று சகோதரி விஜியின் பப்பாளி ஜூஸ் மட்டுமே, திரும்பி வந்தபின் தொடரும். ஒரு வாரம் காணாமல் போய் திரும்பிவருகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அதிரா நலமா? இதோ நான் செய்தது மஹா - பிரெட் மசால்,விஜி - கேரட் மசாலா சாதம் இரண்டுமே சூப்பர்,

விஜி நான் ஊருக்கு போகும் முன்னர் இந்த பகுதியில் வழக்கம் போல் கலந்து கொண்டு தான் போவேன் என்ன இறுதி 4 நாட்கள் தான் இருக்கமாட்டேன்.27 ஆம் தேதி ஊருக்கு போகிறேன்,

ஆசியா அக்கா இந்த முறை டிரைவர் சீட் பிடிச்சாச்சு,பார்த்து பத்திரமா போய் வாருங்க,

ஹைஷ் அண்ணா நீங்களும் முன்னமே வந்ததை நினைக்க சந்தோஷமா உள்ளது நீங்க இந்த வார கடைசியில் அபுதாபி பக்கம் எல்லாம் வரலையா?நான் ஏறும் பிளைட்டில் வருவீங்களான்னு ஒரு ஆசை:))))

அதிரா நானும் பின்னுட்டம் பற்றி நினைத்தேன்,சொல்ல நின்னைத்தேன்,ஏனெனில் நானும் நிறையா கொடுக்கனும்,ஊருக்கு போய் வந்து நிச்சய்ம்முடிப்பேன் என நினைகிறேன்,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

விஜி சமையல்
பாலகாடு சாம்பார்
கறிவேப்பிலை தோசை
மஹா லக்ஷ்மி சமையல்
கறி மிளகு பிரட்டல்
இறால் மசால்
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்றைக்கு விஜியோட வெந்தையக்கீரை சாம்பார்,மஹாவோட கத்தரிக்காய் பொரியல்.

அதிரா, ரேணுகா நலமாக இருக்கிறிர்களா? நன்றாக ஓடுகிறது உங்கள் ரெயின்.விஜி, மஹா சமையல் சமைத்து பார்த்தது கொஞ்சம் கைவசம் உள்ளது, இன்றும் நாளையும் சமைத்துவிட்டு, மிண்டும் உங்கள் ரெயினை பிடிக்க வருவேன். அதிரா மேடம் வாழைத்தண்டு யூஸ் ரெடி பண்ணுங்கோ.எனது எடை அப்படி. இம்முறை ரேணுகா இல்லாத படியால் நிங்கள் தனியவோ.நிங்கள் சமாளிப்பிர்கள் நான் பல இடங்களில் உங்கள் ஆக்கம், எண்ணம், வடிவங்கள் பார்த்துள்ளேன் எல்லாம் மிகவும் சுப்பர்.மற்றது கறிபன் பகுதியை பாருங்கள் நான் மட்டன் கறிபன் செய்யவில்லை.உங்கள் குறிப்பின் படிதான் செய்தேன்.இது பெரிய பிரச்சனையில்லை சும்மா சொன்னேன் தவறிருந்தால் மனிக்கவும்.இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்கள் குறிப்பில் பாகற்காய் தீயல் செய்து பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.வேறு சில விசயங்களும் சொல்லியிருந்தனே...பார்த்திங்களா?
நல்ல குறிப்பிற்கு நன்றி.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மின்னலே வந்திட்டுப்போம்மா:)!!!
விஜி வந்திருக்கிறாக!!, ஆசியா வந்திருக்கிறாக!!, பெரியண்ணன் ஹைஷ் வந்திருக்கிறாக!!, கணக்காளர் ரேணுகா வந்திருக்கிறாக!!, அக்கா ஸாதிகா வந்திருக்கிறாக!!, கவிஎஸ் வந்திருக்கிறாக!!, ராணி வந்திருக்கிறாக!!,இளவரசி ஏழு வந்திருக்கிறாக!!, ..... மின்னலே வாம்மா!!!... சமைக்க....:).

விஜி ஆரம்பமே ரெடியாகிவந்திட்டீங்க. மிக்க நன்றி. கதிரையில் இருங்கோ.. கூப்பிட்டால் ஓடி ஓடிப் பதில் சொல்லவேணும்.

ஆசியா மிக்க நன்றி. நானும் அப்படித்தான் என்னிடம் என்ன உள்ளதெனப் பார்த்திட்டு வந்து, குறிப்பில் அப்பெயரில் ஏதாவது செய்முறை இருக்கோ எனத் தேடி எடுப்பேன்.

ஹைஷ் அண்ணன், மிக்க நன்றி. எனக்கு உங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கு ஏன் தெரியுமோ?, நீங்கள் லீவில் போவதாக உங்கள் தலைப்பில் கூறியதும்தான்... நான் அத் தலைப்பிற்கு பதில் போடுவதை தாமதமாக்கிட்டேன், இங்கு பார்த்தால் நீங்களின்னும் போகவில்லை. ஆரம்பமே வந்திருப்பதைப் பார்க்க நிறையச் சமைப்பீங்களென்று தெரிகிறது. அல்லது குழல்புட்டு இளவரசருக்குப் போட்டிபோடப்போறீங்களோ:)?.

ரேணுகா.. ரேணுகா... இம்முறை நானோ கணக்கெடுப்பது:), அதை மறந்து குஷியாக இருந்திட்டேன், இதோ ஆரம்பிக்கிறேன்... நல்லவேளை வார இறுதியில்தான் போகப்போறீங்கள்... அப்போ நான் பயப்படத்தேவையில்லை:).

ஸாதிகா அக்கா மிக்க நன்றி. இம்முறை அதிரடியாகக் களமிறங்கியிருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்... ரகசியமாகச் சொல்லுங்கோ:) அசத்தல் ராணிக்குப்போட்டிபோடப்போறீங்களோ:)?. நானும் இந்த கறிவேப்பிலை தோசை செய்யவேணும். நேற்று எல்லாம் எங்கட கடையில(ஏசியன்) வாங்கி வந்திட்டேன்.

கவிஎஸ் மிக்க நன்றி.

ராணி மிக்க நன்றி. அடடா நாங்கள் மறந்ததுபோல் இருந்தாலும் விடமாட்டீங்களே:).

இளவரசி மிக்க நன்றி.

ரேணுகா... ரேணுகா... வாழைத்தண்டு ஜூஸ் ரெடிபண்ணமுடியுமோ:)?.. அண்டைக்கு நான் கொஞ்சம் டயறியாக் குளிசையும் தந்தனானெல்லோ:) அதிலையும் ஒவ்வொன்று மிக்ஸ் பண்ணுங்கோ:) அப்பத்தான் உடம்பும் மெலியும் பசியும் எடுக்கும்.. நிறையவும் சமைப்பார்கள்:).. சத்தியமாக எனக்கு மட்டும், அக் கப்பிலும் தந்திட வேண்டாம்:). என்ன யாரோ ஓடுற சத்தம் கேட்குது... ராணி... ராணி... வாழைத்தண்டு ஜூஸ் .... குடிச்சிட்டுப் போங்கோ:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்