அழகு பற்றிய சந்தேகமா தோழிகளே? - பகுதி 3.

அன்பான தோழிகளே வெற்றிகரமாக நீங்கள் நடத்தி சென்ற பகுதிகள் 1ம் 2ம் சிறப்பாய் தொடர்வதால் தொடர்ச்சி பகுதி 3க்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

அழகு குறித்த உங்களின் சந்தேகங்கள் முன் பகுதிகளில் கேட்கப்பட்டதா என அப்பகுதிகளை சிறிது பொறுமையுடன் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதில் மேலும் சந்தேகமிருந்தால் மீண்டும் கேட்கலாம்.

தோழிகளுக்கு எனது வணக்கமும் நன்றிகளும்...

அனைவரையும் இப்பகுதிக்கு அன்புடன் அழைப்பதுடன் உங்களின் சந்தேகங்கள் மற்றும் அனைத்து கருத்துகளையும் இப்பகுதி பகிர்ந்துகொள்ளுமாறும் அழைக்கிறேன்.

புதியதாய் பார்வையிடுவோருக்கும் மற்றும் முன் பகுதிகளில் சந்தேகமிருக்கும் மற்ற தோழிகளுக்கும் சிரமம் ஏற்படாமலிருக்க பகுதிகளின் லின்க்கும் மேலே கொடுத்துள்ளேன்.100 பதிவுகளுக்கு மேலிருந்தால் தொடர்ந்து பார்வையிட சிரமம் இருக்கும் என்பதாலே புதிய பகுதிகள்,தொடர்ச்சிகள்.....

மீண்டும் சந்திப்போம்
நன்றி
உமா.

how'z ur weekend.thanx for ur reply.I already asked abt how to cure the black colour skin in my hand knees. I hav a gud beleif in ur tips 'coz many tried& getting gud results.pls lemme know this wen u r free.take care bye........

Kalai

unkal manam thirantha sevaiku paaradukal,thodaradum ilavasa sevai.

ஹாய் க‌லா நீங்க‌ எந்த‌ ஊரில் இருக்கிறீங்க‌? உங்க‌ளை ப‌ற்றி விருப்ப‌மிருந்தால் சொல்லுங்க‌ள்.

கை ம‌ற்றும் கால் முட்டிப்ப‌குதிக‌ள் மிக‌வும் ட்ரையானால் அப்படி க‌ருமையாக‌ வாய்ப்புக‌ள் அதிக‌ம்,அத‌னால் எப்பொழுதும் ஹைட்ரேட்ட‌ட் ஆக‌ வைத்திருக்க‌ வேண்டும்.நிறைய தண்ணீர் குடியுங்கள்,பழங்கள்,
நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கள் சாப்பிடுங்கள்.

தின‌மும் குளிக்கும் முன் தேன் எடுத்து க‌ருத்த‌ முட்டிப‌குதிக‌ளில் நன்றாக‌ ம‌ஸாஜ் செய்து 20 மினிட்ஸ் க‌ழித்து குளியுங்க‌ள்.

மாற்ற‌மேதுமிருந்தால் க‌ண்டிப்பாக‌ வ‌ந்து ப‌திவு போடுங்க‌ள்.நன்றி.

ந‌ன்றி பூஜா.

மீண்டும் ச‌ந்திப்போம்
உமா.

hello uma.I am in Atlanta.Iam here for more than 1yr.I'll try this&let u know abt the changes.

Kalai

தோழிகள் அனைவருக்கும் உமாவின் ஹாய்,

சம்மர் கொளுத்தி தள்ளிக்கொண்டிருக்கு,இத எப்படி சமாளிக்கிறது? ஜூஸ் குடிக்கலாமா? அத செய்யலாமா? இத செய்யலாமா? வெளியில் போனா கருத்து போயி வீடு திரும்புறோம்...ஸ்கின் பயங்கர ஆயிலி/ட்ரையாயிருக்கு...என்ன செய்யலாம்...

இப்படி இன்னும் பல கேள்விகள் உங்களுக்குள் ஓடுகிறதா? கண்டிப்பாக இருக்கும் அதனால் கொஞ்சம் நாம் வீட்டிலேயே என்னவெல்லாம் செய்து இதை தவிர்க்கலான்னு இன்று சொல்லபோகிறேன்...

1)நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.கண்டிப்பாக காய்கள் சம்மரில் கிடைக்கும் நீர்ச்சத்து நிறைந்த காய்கள்(ஸ்குவாஷ் வெரைட்டீஸ்),பழங்கள்(மெலன் வெரைட்டீஸ்) சாப்பிடுதல் அனைவருக்கும் நல்லது.

2)வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது காரிலோ அல்லது வேறு தலையே வெளியில் தெரியாத மாதிரி சென்றாலும் கூட கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷன் அப்ளை(Minimum SPF 15) செய்து கொள்ளல் அவசியம்.

3)மேக்கப் போட வேண்டிய அவசியம்(பார்ட்டி)இருந்தால் மிகவும் கவனமாக ஆயில் ஃப்ரீ மற்றும் வாட்டர் ஃபுரூஃப் பிராடக்ட்ஸ் பயன் படுத்துதல் நல்லது.இது மேலும் சருமம் ஆயிலியா இல்லாமலும் வியர்வையில் அழியாமலும் பாதுகாக்க உதவும்.தேவையானால் கொஞ்ச‌ம் ப‌வுட‌ர் ப‌யன்ப‌டுத்த‌லாம்.

4)நடந்து செல்லக்கூடிய இடங்களுக்கு குடையோ,தொப்பியோ அணிந்து கொண்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் பாதுக்காக்க உதவும்.வெளியிலிருந்து வீடு திரும்பிய‌தும் அழுக்கு அதிக‌மாக‌ சேர்ந்திருக்கும் நம‌து உட‌லில் இத‌னால் முக‌த்தை கொஞ்சம் பால் வைத்து பஞ்சு கொண்டு துடைத்து விட்டு குளிர்ந்த‌ நீரில் க‌ழுவுங்க‌ள்.தேவையானால் ஒரு குளிய‌லே போட‌லாம்.

5)குளிக்கும் பொழுது எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் மசாஜ் நன்றாக பாடி முழுவதும் கொடுத்து பிறகு 20 நிமிடம் கழித்து குளிக்கலாம்.இது ஸ்கின்னை ஹைட்ரேட்ட‌ட்டாக‌ வைத்திருக்க‌ உத‌வும்.

6)ட்ரை ஃபேஸ் ஸ்கின் உள்ளவர்கள் தேனும் பாலும் சம அளவு கலந்து கிரீம் போலாக்கி தினமும் அல்லது ஒன்று விட்டு ஒரு நாள்(தேவையை பொருத்து)மாலையில் முகம் முழுவதும் பூசி 20 நிமிடம் கழித்து கவுவலாம்.

7)ஆயிலி ஸ்கின்னாக இருந்தால் ரொம்ப அதிகமாக ஆயில் வெளியேறி மிகவும் நிலையை மோசமாக்கிவிடும்.இதனால் ஐஸ் கட்டிகளை 2 துண்டு எடுத்து மிகவும் சுத்தமான காட்டன் துணியில் கட்டி முகத்தில் காலை மாலை ஒத்தடம் 10 நிமிடம் கொடுத்தால் ஆயிலியாக இருப்பதை குறைக்க முடியும்.

8)வெய்யில் பட்டு சன்பர்ன் ஆகிவிட்டால் கவலைப்படாதீங்க,கொஞ்சம் குளிர்ந்த நீரில் முகத்தை வெறுமனே கழுவி விட்டு வெள்ளரி சாறும் தயிறும் சம அளவு கலந்து சன்பர்ன் ஆன இடத்திலும் முகம் மற்றும் உடல் முழுவதும் கூட பூசி குளிக்கலாம்.

9)ஆலோவெரா ஜெல்(Aloe vera gel)கொண்டு உடல் மற்றும் முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு குளித்தாலும் ஸ்கின் மிகவும் மிருதுவாகவும் சன்பர்ன்னுக்கும் நல்லது.

10)சூட்டினால் கட்டிகள் ஏற்பட்டால் அதன் மேல்,கொஞ்சம் கார்ன் ஃப்ளோர்(சோள மாவு)நீரில் கலந்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் உண்டு.இது அவரவர் தேவையை பொருத்து அதிகமாகவோ சிவியராகவோ இருந்தால் மாலையில் தினமும் செய்யவும்,ஓரளவு குறைவாக இருப்போருக்கு ஒன்று விட்டு ஒரு நாளோ இரண்டு நாட்களுக்கொரு முறையோ செய்யலாம்.

பொதுவாக ஹெர்பல் ட்ரீட்மென்ட் அதுவும் வீட்டிலேயே நாமாக செய்யும் பொழுது பாதிப்புகள் எளிதில் குறையவும் மென்மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் தடுக்கமுடியும்.

மேற்கூறிய குறிப்புகள் அனைத்தும் அனைத்து வகையான சருமம் உடையோரும் செய்யலாம்.

அடுத்ததாக தலைக்கு செய்ய வேண்டியது:

1)அதிக ஆயிலி ஹேர் உடையவர்கள் வாரம் இரு முறை தலைக்கு குளிக்கலாம்.தேவையானால் வெந்தயம் தேய்த்து குளிக்கலாம்.

2)ட்ரை ஹேர் மற்றும் ஸ்கால்ப் உடையோர் நல்லெண்ணெயை கொஞ்சம் சூடு செய்து நல்லா மசாஜ் செய்து 15 கழித்து ஷாம்பு மற்றும் கன்டிஷனருடன் குளிக்கலாம்.தேவைகேற்ப வாரம் 2 முறையோ அல்லது 1 முறை பயன்படுத்தலாம்.

3)பொடுகு அதிகமானால் தலைக்கு ஷாம்பு போட்டு அலசி விட்டு பிறகு ஆப்பிள்சைடர் வினிகரோ அல்லது ஆர்கானிக் வினிகரோ கொண்டு மாசாஜ் செய்து பிறகு குளித்தால் போதும்.வினிகர் ஒரு நல்ல கன்டிஷனர்.

இது பொதுவான‌ விஷ‌ய‌ங்க‌ளும் அனைவ‌ரும் க‌டைபிடிக்க‌கூடிய‌வையும் ஆகும்.இது குறித்து மேலும் ச‌ந்தேக‌ம் இருந்தால் தாராள‌மாக‌ த‌ய‌ங்காம‌ல் கேளுங்க‌ள் தோழிக‌ளே...

மீண்டும் ச‌ந்திப்போம்
உமா.

ஹாய் உமா
பகுதி 3 துவங்கிர்றிர்களா நான் இன்று தான் பாத்தேன் உங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள்.வெய்யிலுக்கு நல்லா பயன் உள்ள குறிப்பு குடுத்திருக்கிரிங்கள் நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

எப்படி இருக்கீங்க உமா?மூன்றாம் பகுதியும் வந்து விட்டது.வாழ்த்துக்கள் பல.இந்த பக்கம் இன்றுதான் வர முடிந்தது.சம்மர் டிப்ஸ் எல்லாம் கொடுத்து இருக்கீங்க.கேட்காமலே இதுப் போல் டிப்ஸ்களை கொடுத்து அசத்துறீங்க.
என் முகத்தில் மாற்றங்கள் நிகழவில்லை உமா.அந்த எலுமிச்சை ட்ரீட்மென்டுடன் க்ரீம் ஏதும் அப்ளை செய்யட்டுமா?இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வேறு போக போகின்றேன்.நான் இதுவரை யாரிடமும் கேட்டதில்லை.என்னவோ உங்களிடம்தான் கேட்க தோணுது.தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் தோழிஸ்,

மிகவும் நன்றி சுகா.

அப்சரா:

உங்களுடைய கட்டிகள் பருக்களாகயிருந்தால் கண்டிப்பாக எலுமிச்சைக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும்.அதனால் எனக்கு சூட்டுகட்டிகளாக இருக்கலாமோ என சந்தேகம்.

அதனால் கொஞ்சம் தயிருடன் சில சொட்டு வெள்ளரி சாறு,பூண்டு பேஸ்ட் கால் ஸ்பூன்,கடலை,பாசிபருப்பு மாவுகளை கால் டீஸ்பூன் வீதம் கலந்து முகத்தில் போடும் பூசு மஞ்சள் தூள் மிகவும் சிறிதளவு கலந்து அனைத்தும் பேஸ்ட்டாக கலந்து கட்டிகள் மற்றும் முகம் முழுவதும் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
ஒரு நாளுக்கொருமுறை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வாருங்கள்.

எனக்கு சரியாக இன்னும் உங்களின் பிரச்சனை என்ன? என்று விளங்காததால் என்ன க்ரீம் பயன் படுத்தலாம் என்று கூற முடியவில்லை.இந்த ட்ரீட்மென்ட் செய்துவிட்டு உங்களின் பிரச்சனை சரியாகவில்லையென்றால் எனக்கு நன்றாக தெளிவுபடுத்துங்கள்.நானும் மென்மேலும் உதவ முயற்சிக்கிறேன்.

முதல் நாளே வந்து எப்படியிருக்கிறது என்று கூறுங்கள்.உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

மீண்டும் சந்திப்போம்
உமா.

ஹாய் உமா,பகுதி 3ல் சந்திக்கிறேன்.
வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.வெய்யிலுக்கு நல்லா பயன் உள்ள குறிப்பு குடுத்திருக்கிரிங்கள்.
வெயிலில் செல்லும் போது spf 15+,30+,20+பல வகையுள்ளது.அதை எப்படி தேற்ந்தெடுப்பது,உபயோகிக்கும் முறையும் சொல்லவும்.நன்றி.

from,veena.

மேலும் சில பதிவுகள்