அன்பு தோழியரே டோக்ளா பற்றி சந்தேகம்

எனக்கு டோக்ளா செய்ய ஆசையாக இருக்கிறது ஆனால் அதை வேக வைக்க தகுந்த தட்டு என்னிடம் இல்லை இட்லி தட்டில் உட்ற்றினால் எனக்கு பிடிக்கலை ப்ளீஸ் தோழியரே மாவை இல உட்ட்ரிவைதல் நன்றாக வருமா ப்ளீஸ் தெரிந்தால் சொல்லுங்களேன்

sorry i forget type OVEN.can v make doklas in oven

sorry i forget type OVEN.can v make doklas in oven

சுகி... தாராளமா மைக்ரோவேவில் செய்யலாம்.

1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1/2 கப் தண்ணீர், உப்பு, ஈனோ 1 தேக்கரண்டி

தாளிக்க: எண்ணெய், கடுகு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் நறுக்கி வைங்க.

1. ரவை, தண்ணீர், தயிர் கலந்து 1/2 மணி நேரம் ஊர வைங்க.
2. மைக்ரோவேவ் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தடவி விட்டு, ரவை கலவையில் ஈனோ கலந்து உடனே ஊற்றி, மூடி போட்டு 10 நிமிடம் ஹய்'ல் வைங்க.
3. எடுத்து தாளிச்சு அதன் மேல் கொட்டுங்க, கொஞ்சம் மிதமான சூடா இருக்கும் போது கட் பண்ணிடுங்க.
4. உங்க அவன் பொருத்து நேரம் மாறும்.... எதுக்கும் 5 நிமிஷம் வெச்சு பார்த்து அப்பறம் அடிக்கடி பார்த்துட்டே இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி இன்னைக்கே செய்ய போரேன் எப்படி உங்கலால எல்லா பக்கமும் பதிவு போட முடியுது.

கண்ணு வைக்க கூடாது... ;) ஒரு 2 வாரத்துக்கு பின் இப்ப தான் அறுசுவை எனக்கு ஒழுங்கா வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன சுகி.... தோக்ளா எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்ல... அவ்வளவு கொடுமையாக வந்ததா??!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி பா நேத்து பண்ணலை என் ஹஸ் சாப்பாத்தி பண்ண சொல்லிடாங்க அதுனால உங்க குறிப்பு ஸ்பினாச் உருளை கரவி பண்ணேன் இன்னைக்கு தான் டோக்ளா பண்ணனும் பண்ணீட்டு கட்டாயம் பின்னுட்டம் பதிவேன்

ஹிஹி... செய்துட்டு சொல்லுங்கோ... எனக்கு இங்கு ஒருவர் செய்து காட்டியது இது, இன்னும் நான் செய்து பார்க்கல (ஈனோ இல்லாததால்). அவர் செய்தது நல்லா இருந்தது, அதான் உங்களுக்கு சொன்னேன். :) இன்னும் அந்த குறிப்பை நான் அறுசுவையில் சேர்க்கல, அதனால் தான் ஆர்வமா என்னாச்சுன்னு கேட்டேன்.... சாரி எல்லாம் எதுக்கு நமகுள்ள???!! மெதுவா செய்து சொல்லுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனித்தா டோக்ளா என்பது என்ன?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா.... நல்ல கேள்வி. :) தோக்லா'ன்றது நம்ம ஊர் ரவாஇட்லி மாதிரி தான். கொஞ்சம் வித்தியாசம். குஜராத்தை சேர்ந்தவர். நிறைய வகை இருக்கு... கடலை மாவில் செய்வது, ரவையில் செய்வது, சீஸில் செய்வது, வெள்ளை கொண்டைகடலையில் செய்வது.... ஆவியில் வேக வைத்து பின் தாளிச்சு சேர்ப்பாங்க. நானும் இங்க வந்து மற்ற தோழிகள் செய்வதை பார்த்தே கத்துக்கிட்டேன். :D இதில் சில வகை கொஞ்சம் புளிப்பு சேர்த்தது போல் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்