சுத்தமான குடிநீர் வடிகட்டி

அன்பு இந்தியா வாழ் தோழிகளே,

ஒரு சந்தேகம்: இப்ப ஒரு புது வகை வாட்டர் ஃபில்டர் கிடைக்குதில்லையா, "ப்யூர் இட்" போன்ற வகைகள்? அதாவது, கரண்ட் வேண்டாம், அடுப்பு வேண்டாம், எரிபொருள் வேண்டாம், என்றெல்லாம் சொல்லி விற்கிறார்களே, அது எந்த அளவு நம்பத்தகுந்தது?

யாராவது உபயோகிக்கிறீர்களா? எப்படி செயலாற்றுகிறது? அதில் ஊற்றும் தண்ணீர் சுத்த நீராக மாற எவ்வளவு நேரமாகும்? முன் காலத்தில் ஃபில்டர் கேன் வைத்திருப்பார்களே அது மாதிரியா?

கொஞ்சம் பதில் சொல்லுங்களேன், ப்ளீஸ். அல்லது வலைத்தள முகவரி தெரிந்தால் தாருங்கள்.

http://www.pureitwater.com/

நாங்க வைத்திருந்தோம், பல வாரங்கள் ஆகியும் முதலில் புதிதாக இருக்கும் போது வந்த ஒரு வகை வாசம் அதில் போகவே இல்லை (அதே வாசம் வடிகட்டிய தண்ணீரிலும் வந்தது)... அதனால் பயன்படுத்தாமல் வைத்திருந்து இப்போ உடைந்தும் போனது. அதனால் அது நான் வாங்கிய பீஸில் உள்ள பிரெச்சனையா இல்லை எல்லாம் அப்படி தானா என்பது எனக்கு தெரியல. குடுத்திருக்க தளத்தில் பாருங்க.... உதவலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஊரில் தண்ணீர் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் இல்லையா; அதுக்குன்னு தனியா ஒரு கேஸ் சிலிண்டரே தேவைப்படுவது மட்டுமில்லாம, கொதிநீரைக் கையாளுவது என்பது ரொம்பவே ரிஸ்க்கான வேலையாக இருக்கிறது.

அதனால்தான் கேட்கிறேன்; அனுபவமுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thank you Vanitha!!

ஓ..ஊருக்குப்போக ஆயத்தமா?பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள் திருமதி ஹுசைன்.
அக்வா கார்ட் உபயோகியுங்கள்.சாதாரண மாடலிலும்,பம்பிங் மாடலிலும் கிடைக்கிறது.ஊரில் கிடைக்கும் மினரல் வாட்டர் என்று சொல்லிக்கொண்டு புது புது பெயரில் கிடைக்கும் நீரை குடிப்பதை விட இதில் பில்டர் பண்ணி குடிப்பது பாதுகாப்பு.நல்ல சர்வீஸும் உண்டு.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எப்படி இருக்கீங்க? நான் இந்தியாவில் இருக்கும் போது 1வருசம் பியூரிட் யூஸ் பண்ணினேன்..நல்லா தான் இருந்தது..உங்களுக்கு இந்த தகவல் உபயோகமா இருக்குமானு தெரியல,இருந்தாலும் என் அனுபவத்த சொல்றேன்..

ஆமாம் அவங்க சொல்ற மாதிரி கரண்ட்,அடுப்பு வேண்டாம்..

சின்னதா இருக்கிறது வசதிதான்..எங்க வேணாலும் நம்ம இஷ்டத்துக்கு நகர்த்தலாம்,இதுக்குனு தனி இடம் தேவையில்ல..இதுவே பெரிய குடும்பமா இருந்தால் சின்னதா இருக்கிறது மைனஸ்தான்..சீக்கிரம் சீக்கிரம் தண்ணீர் காலிஆகிடும்..

அக்குவாகார்ட் மாதிரி பைப் எல்லாம் மாட்டி வைக்க முடியாது..நீங்க தான் மேல இருக்கிற பில்டர்ல தண்ணீர் ஊற்றீவைக்கனும்..அது உங்களுக்கு பில்டர் செய்து கொடுக்கும் அவ்வளவே...

முதல்ல யூஸ் பண்ணும்போது ரொம்பவே நல்லா இருக்கு, ஆனால் போக போக ஃபில்டர் பண்ணுவது கொஞ்சம் மெதுவா நடக்கும்..நீங்க எவ்வளவு தான் கிளீன் பண்ணினாலும் கொஞ்சம் மெதுவாதான் தண்ணி பில்டர் ஆகுது..

தண்ணீர் நல்லாவே கிளியரா இருக்கு பார்க்க..டேஸ்டும் மாறல,எனக்கு ஸ்மெல்லும் வரல..
(எனக்கு டெமோ கொடுக்க வந்த ஆள் இதுல கொக்ககோலா ஊற்றினால் கூட தெளிவான தண்ணியா கொடுக்கும்னு சொன்னார்,நாங்க ட்ரை பண்ணல)ஆனால் அவ்வளவு இல்லானாலும் நம்ம ஊரு தண்ணில இருக்கிற அழுக்குக்கு நல்லாவே பில்டர் செய்தது..

இது பேட்டரில தான் வேலை செய்கிறது, அதும் இன்பில்ட்..அதுல ஒரு இண்டிகேட்டர் இருக்கு,ஆரம்பத்துல கிரீன்(பச்சை) கலர்ல இருக்கு, பேட்டரி மாற்றும் நேரம் வந்தால் ரெட்கலர் ஆகுது..அப்புறம் நாம சரிவீஸ்க்கு கால் பன்ணினால் அவங்க வீட்டுக்கு வந்து மாற்றிகொடுத்து பணம் வாங்கிக்கிறாங்க..சென்னைல சர்வீஸ் நல்லா இருக்கு, லேட் பண்றதில்ல.

மொத்த ஃபில்டர் விலையும் 1500 ரூபாய்தான், மற்ற பில்டர் பற்றி அவ்ளோ தெரியாததால இது அதிகமா இல்ல கம்மியானு தெரியல..இருந்தாலும் ஒரு தரம் யூஸ் பண்ணிபார்க்கலாம்..Not bad...

இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க..

ஷாதிகா அக்கா,

நலமா? எப்பவாவதுதான் தலை காட்டுகிறீர்கள். மகன் கல்லூரி அனுபவங்கள் எப்படி?

அக்கா, நன்றி பதிவுக்கு. ஊரில் தொடர்ச்சியாக இருந்தவரை அக்வா கார்ட்தான் உபயோகித்தோம். ரொம்ப நாள் உபயோகிக்காததால், இப்போ அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீண்டும் வாங்குவதென்றால் அதன் விலை கொஞ்சம் அதிகம், "ப்யூர் இட்" உடன் ஒப்பிடும்போது.

தோழிகளின் அனுபவங்களைத் தெரிந்து கொண்டால் வாங்க வசதியாக‌ இருக்குமே!!

தாமரை,

நன்றி, நன்றி. நல்ல விரிவாக விளக்கம் தந்திருக்கிறிர்கள்.

அப்ப, இது கிட்டதட்ட நாம் முன்காலத்தில் உப்யோகப்படுத்திய "ஃபில்டர் டிரம்" போலத்தான் இல்லையா? ஆனா, லேட்டஸ்ட் வெர்ஷன் என்பதால் ஃபாஸ்ட்.

அதில் உள்ள ஃபில்டர் எவ்வளவு நாள் வரும்? அது ஒரு முறை மாற்ற 1500 ரூபாயா?

முதல் முறை உபயோகிக்கும் போது ஸ்மெல் வருமா? அது மாற எவ்வளவு நாளாகும்?

சாரிப்பா, எனக்கு சந்தேகங்கள் கொஞ்சம் அதிகமாவே வரும். நேரம் கிடைக்கும்போது பதில் போட்டு வையுங்கள். நான் இனி சனிக்கிழமைதான் அறுசுவைக்கு வருவேன்.

ஹாய் Mrs.Hussain அக்கா,
நான் Aquasure 25 lts தான் வைச்சிருக்கேன். ஆனால் எனக்கு அதோட catridge சரியா கிடைக்கவில்லை. 18 lts catridge தான் கிடைக்குது. ஆனா தண்ணி நல்லா இருக்கு. நீங்க pure it வாங்கலாம்.அம்மா வீடுல அதான் இருக்கு.நல்ல இருக்கு.

pls see this link n try:
http://www.mouthshut.com/comparison/compareproducts.php?msid=6537,2912&mid=36&cid=925067670

நானும் எப்போ வருவேனோ தெரியல,அதான் இப்போவே பதில் கொடுத்து விடுகிறேன்..

ஆமாம்பா நீங்க சொன்ன ஃபில்டர் டிரம் மாதிரி தான்..ஆனால் அத பத்தி எனக்கு தெரியாததால அதவிட ஃபாஸ்ட்டானு தெரியாது..

ஃபில்டர் மாற்ற வேண்டியதில்ல, பேட்டரி தான் ஒரு 3மாதத்திற்கு ஒரு தரம் மாற்ற வேண்டி இருக்கும்..(இதும் கூட பில்டர் செய்யும் வாட்டர் அளவ பொருத்து அதிக நாட்கள் கூட வரலாம்) பேட்டரி விலை 1500 இருக்காது..கம்மிதான் 500வரை இருக்கலாம்..ஆனால் சரியான விலை தெரியல,மறந்து போச்சு..

ஸ்மெல் வரல, ஆனால் முதல் தடவ யூஸ் பண்ணும் போதும் ஒவ்வொரு தரம் பேட்டரி மாற்றும் போதும் முதல் தடவ ஃபில்டர் பண்ணிய தண்ணிய யூஸ் பண்ண கூடாதாம்....உங்களுக்கு டெமோ கொடுக்கும் போது தெளிவா சொல்லுவாங்க..

பில்டர் பற்றி சொல்லனும்னா பியூரிட்ல 2பில்டர் இருக்கு, மேல இருக்கிறது சாதாரண துணி,நெட் மாதிரி அதுல பெரிய அழுக்கு எல்லாம் பில்டர் ஆனதும் கீழ போய் திரும்ப பாக்டீரியா எல்லாம் கிளீன் ஆகுதாம்..மேல துணி மாதிரி இருக்கும் பில்டர் ரொம்ப சின்னதா இருக்கு,அதுல நம்ம ஊரு தண்ணீல இருக்கிற அழுக்கு சேர்ந்து கொஞ்ச நாள் ஆனதும் தண்ணி கட கடனு ஊற்ற முடியல,மெதுவா பில்டர் ஆனதும் ஆனதும் கொஞ்ச கொஞ்சமா ஊற்ற வேண்டி இருக்கு..கீழ இருக்கும் பில்டர் பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல...எந்த ஸ்மெல்லும் வரல..பொதுவா சென்னை கார்ப்பரேசன் வாட்டார்ல வரும் மெடிசின் மாதிரி ஸ்மெல்கூட பில்டர் பண்ணியதும் சிலசமயம் வரல(அது நல்லதா கெட்டதானு தெரியல)

சுபா & தாமரை,

ரொம்ப ரொம்ப நன்றிப்பா ரெண்டு பேருக்கும்; நல்ல விரிவான விளக்கம் மற்றும் லிங்க் கொடுத்தது உபயோகமா இருக்கு.

ப்யூர் இட் அல்லது அக்வா ஷ்யூர் வாங்கலாம் என்று இருக்கிறேன்.

மீண்டும் நன்றி.

நலமா?நான் ஊரில் பியூரிட் வாங்கினேன் ரொம்ப வருஷம் உழைத்தது நொடியில் வாட்டர் கிடைத்து விடும் நல்லதும் கூட இது என் அனுபவம்..ஆனால் கிளீனிங் செய்யுரப்ப கவனம் தேவை என்னோடது லேசா கை நலுகி போச்சு அதோட ஓட்டைதான் இப்ப வேச்ட் ரூமில் இருக்கு இன்னொன்று வாங்க இருக்கேன்..மினரல் வாட்டர்தான் சமைக்குறதில் இருந்து எல்லாத்துக்குமே யூஸ் பன்னுகிறேன் அதில் எவ்வித சத்தும் இல்லை அதனால் அக்வா பியூரிட்டை போல வந்திருக்கு வாங்கலாம்னு யோசித்துட்டு இருக்கேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்