நான் கவிஞனுமில்லை... நல்ல ரசிகனுமில்லை...

வாழ்வில் எல்லாருக்கும் எதாச்சும் ஒரு பாட்டு மனசுக்கு ரொம்ப பிடிச்சதா இருக்கும்... வரிகளாக இருக்கலாம், இல்லை இசையாக இருக்கலாம்... பாடல் படமான விதமாக கூட இருக்கலாம். இப்படி எதாச்சும் காரணத்தால் ஒரு பாடல் பிடித்து அதை நீங்க அடிக்கடி முனு முனுத்து வந்த அதை இங்க சொல்லுங்களேன்.... நாங்களும் ரசிக்கிறோம்.

தலைப்பை பார்த்து ரசிக்க தெரியாது ஜந்துன்னு நினைச்சுடாதிங்க... ;) நல்லாவே ரசிப்பேன்.

நான் நிறைய பாட்டை முனு முனுப்பேன்... முக்கியமா பழைய பாடல்.

இப்போ கொஞ்ச நாளா பிடிச்ச வரிகள்:

காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்....
மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை....

ஏன் பிடிக்கும்??!!! இசை, வரிகள் இரண்டுமே ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு பிடிச்சதையும் சொல்லுங்கோ... அந்த வரிகளை படிக்க நானும் ஆசையா இருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நோட் பண்ணுங்கோ கொப்பியில்:)

///முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக
அன்பாலே இணைந்துவந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக....

/// நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ...
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ...
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ...

/// நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.....

/// வெண்ணிலா வானத்திலே நீயும் நானும்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்...

/// செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா...
பொன் வாசம் மேடை போடுதம்மா...(வரிகள் தப்பென நினைக்கிறேன்...)

/// வசந்தப் பூங்காற்றே... கொஞ்சம்... உறங்கத் தாலாட்டு.... கனவு மலரும் காலை நேரம் ...

// வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்...

இந்த வரிகளை திரும்பத் திரும்பக் கேட்கப் பிடிக்கும்....

/// நிறைய வரிகள் என் கொப்பியில் எழுதி வைத்திருக்கிறேன்... அர்த்தமுள்ள வரிகள், சோகமான பாடல்கள், நல்ல ரியூன்... இவை அத்தனையும் எனக்குப் பிடிக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

//செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா!!//

//மூங்கில் இலை காடுகளே முத்துமழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்//

//ராகவனே ரமணா ரகுநாதா!
பார்க்கடல் வாசா,ஜானகிராமா!//இது என் மொபைலில் வைத்திருக்கிறேன்.

மீண்டும் நேரம் இருக்கும்பொழுது வந்து பாடுகிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

டியர் வனிதா மிக நல்ல பொழுதுபோக்கான இழையை தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்,தலைப்பை பார்த்தவுடன் உள்ள ஏதோ விசயம் இருக்கின்றது என்று நினைத்தேன்!ஆனால் இதுவும் நல்ல விசயம் தான், எனக்கும் பாட்டு பாடுவது ரொம்ப பிடிக்கும் ஏகப்பட்ட பாட்டு இருக்கின்றது அதில் ஒன்னு கேளுங்களேன்:

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறிந்தாலும் அதுகூட நீ...சொல்லித் தான்,
உனக்கேத்த துணையாக எனை மாற்றவா
குளவிளக்காக நான் வாழ வழி காட்ட வா....,

காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன்,
விழியோடு தான் விளையாடுவேன் உன் மடிமீது தான் கண் மூடுவேன்.

ஏன் பிடிக்கும் என்று சொல்லனும்னா, என் கணவர் மீதிருக்கும் காதலை இவை மேலும் மெருக்கூற்றும் மற்றும் பாடகி எல் ஆர் ஈஸ்வரியின் காந்தக் குரல்.

ஹாய் வனிதா! எப்படி இருக்கிறீர்கள்?.நீங்கள் கொடுத்த தலைப்பு நன்றாக இருக்கின்றது.
எனது அந்தகால நினைவுகள்
\\\ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், கண் தேடுதே சொர்க்கம் மாலை மயக்கம் \\\\
இந்தக்காலம்
\\\வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மாநிலத்தில் யாவரும் மறக்கவொண்ணா பாடம் \\\ இப்படி பல பாடல்கள் என் நினைவில் உண்டு. முடிந்தால் மீண்டும் வருவேன் இது என்றென்றும் உங்கள் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஸ்னேகிதி மனோகரி,அழகான பாடலை பாடி அதற்கான காரணத்தையும் கூறி இருப்பது என்னை முறுவல் கொள்ள வைத்தது.இப்போதுள்ள புதிய பாடல்கள் நம் மனதில் எதுவுமே பதிவதில்லை.பழைய பாடல்கள்தான் காலத்தால் அழிய முடியாதது.என் பழைய பாடல் ஞானோதயத்தைக்கண்டு என் மகன் ஆச்சர்யப்படுவான்.எங்கள் வீட்டுக்குப்பக்கத்திலேயே
பி.பி ஸ்ரீனிவாஸ் சார் இல்லம் உள்ளது.அவர் வீட்டினை கடந்து செல்லும் பொழுது வராண்டாவில் ஈசி சேரில் அமர்ந்து இருப்பார்.ஒரு முறை நேரிலேயே அவர் பாட கேட்க வேண்டும் போல் இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நிறைய பாடல்கள் பிடித்தாலும் இவை மிகவும் பிடித்த சில பாடல்கள் :
//வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா
வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்
படம்: நான் பெற்ற் செல்வம்//

//எனக்கு பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை//

Patience is the most beautiful prayer!!

ஹாய் ஸாதிகா இங்கத்தான் இருக்கீங்களா?பாடகர் பி.பி ஸ்ரீனிவாஸின் பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்,அவரைப் போன்ற ஜாம்பவான்களை நேரில் பார்ப்பதற்கே கொடுப்பனை வேண்டும். அவர் நேரில் பாட கேட்க்கும் வாய்ப்பு உங்களுக்கு விரைவில் கிட்டட்டும். என் பிள்ளைகளும் நான் பாடுவதை ரசிப்பார்கள் ஆனா என்ன பாடுகின்றேன் என்று தான் புரியாது. ஆமா உங்களுக்கு பிடித்த வரிகளை கூறவில்லையே! எனக்கு புதிய பாடல்களும் அதில் லேட்டஸ்ட்டான "முன் தினம் பார்த்தேனே" பாடலின் அனைத்து வரிகளும் பிடித்திருக்கின்றது படமும் தான்.

http://www.youtube.com/watch?v=g_Fb7qmcKdA

பாடிகாட்டி பகிர்ந்து கொள்ள விரும்பி இன்றுதான் அப் லோட் பண்ணினேன். பார்தமைக்கும் கேட்டமைக்கும் என் நன்றிகள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரன் ஹைஷ் அவர்களே நலமா? நீங்க பாடாம பாடி காட்டிய "உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துகெது தான் சொந்தமடா" என்ற தத்துவ பாடலை நானும் பார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்