சிக்கன் ராப்ஸ்

தேதி: June 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 500 கிராம் (எலும்பு இல்லாத கோழியின் நெஞ்சுப் பகுதி தான் நல்லது)
ஐஸ்பெர்க் சலாட் - 200 கிராம்
மயோனிஸ் அல்லது விருப்பமான சாஸ் - தேவையான அளவு
குடைமிளகாய் - ஒன்று
வெள்ளரிக் காய் - ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)
தக்காளி - 2 (வட்டமாக நறுக்கியது)
ராப்ஸ் ரொட்டி - 8
சீஸ் தூள் - கால் கப் (விரும்பினால்)
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி


 

சிக்கனை மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சலாட்டையும் குடைமிளகாயையும் நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ராப்ஸ் ரொட்டியை ஒரு நிமிடம் மைக்ரோ ஓவனில் சூடாக்கவும். பின்பு ரொட்டியின் நடுவில் மயோனிசை நீளமாக விடவும்.
அதன் மேல் சலாட்டை வைக்கவும் விரும்பினால் சீஸ்தூளை தூவவும்.
பின்னர் 2 துண்டு வெள்ளரியும், குடைமிளகாயையும் வைக்கவும்.
அதற்கு மேல் 2 துண்டு தக்காளியை வைக்கவும்.
எல்லாவற்றிற்கும் மேலே பொரித்த ஒரு சிக்கனை துண்டை நடுவில் வைக்கவும்.
முதலில் படத்தில் காட்டியுள்ளது போல் ராப்ஸ் ரொட்டியை கீழே மடக்கவும்.
பின்பு இரு பக்கமும் மடிக்கவும். அதே போல் முழுவதையும் செய்து பரிமாறவும். சுவையான சிக்கன் ராப்ஸ் ரெடி. இந்த சிக்கன் ராப்ஸ் குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ராப்ஸ் ரொட்டி கடைகளில் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் மைதாவுடன் உப்பு, பட்டர், தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் வைக்கவும். பின்பு மாவை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தோசைக் கல்லில் போட்டு ஒவ்வொரு பக்கமும் 2-3 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் ராப்ஸ் குறிப்பு நன்றாக இருக்கு.
விரைவில் செய்யக்கூடியதாக இருக்கு.
எனக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை.

ஐஸ்பெர்க் சலாட் இது என்னது...?
எங்கே கிடைக்கும்..?

அன்புடன்
ஷாஹுலா

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

சகோதரி,
(Eisberg Salat) ஐஸ்பேர்க் சலாட் என்றால் Lettuce. ஜேர்மன் மொழியில் (deutsch) ஐஸ்பேர்க் சலாட் என்று சொல்வார்கள்.

ஹாய் ஷாஹுலா, உங்கள் கேள்விக்கு ஓசென் பதில் அளித்துள்ளார். ஓசென், நீங்கள் பதில் உடன் அளித்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"