மைக்ரோவேவ் தக்காளி க்ரீன் சட்னி

தேதி: June 26, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 2
வெங்காயம் - 1
பூண்டு - 1
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா இலைகள் - ஒரு கீற்று,
கறிவேப்பிலை - ஒரு கீற்று
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - வதக்குவதற்கு
புளி - சிறுதுண்டு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம்பருப்பு, சீரகம் இரண்டையும் போட்டு கலக்கி மைக்ரோ-ஹையில் ஒன்றரை நிமிடம் வைக்கவும். அது சிவந்து வறுபட்டிருக்கும்.
பின் அதை எடுத்து தனியே வைத்துவிட்டு, அதே பாத்திரத்தில், பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை மற்றும் தேங்காயை போட்டு கலக்கி ஒரு நிமிடம் மைக்ரோ ஹையில் வைக்கவும்.
பின் அதை எடுத்து விட்டு அதில் வெங்காயம் போட்டு 2 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைக்கவும். (பொன்னிறமாகும் வரை)
பின் அதை எடுத்து விட்டு அதே பாத்திரத்தில் தக்காளியை போட்டு மைக்ரோ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கவும்.
பின் வதக்கிய எல்லாவற்றுடன் புளி சேர்த்து அரைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.(தாளிப்பதற்கு ஒரு நிமிடம் மைக்ரோஹையில் வைக்கவும்)
சட்னி வகைகள் செய்ய மைக்ரோவேவ் சுலபமான முறை. அதிக நேரம் வதக்க தேவையில்லை. இந்த சட்னி இட்லி, தோசை மற்றும் தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தோழி உங்கள் தக்காளி கிரீன் சட்னி நன்றாக இருந்தது கடாயில் செய்து இருக்கிறேன் ஒவன் செய்வது ஈஸீ

இங்கு மைக்ரோவேவ் இல்லாததால், வாணலியை வைத்து எண்ணை ஊற்றி அதில் நீங்கள் சொல்லிய பொருட்களை எல்லாம் முறையாய் வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி சட்னி ரெடி பண்ணீட்டேன்.

காலை இட்லிக்கு மிகவும் சுவையாய் இருந்தது மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு அண்ணா திரு.ஹைஷ்,

நலமாய் இருக்கிறீர்களா?உங்கள் மகனுக்கு எங்கு ,என்ன துறையில் சேர்த்துள்ளீர்கள்.?

என் குறிப்பை செய்து பார்த்து,பின்னூட்டம் கொடுத்ததற்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்.

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அனைவரும் நலமே. தங்களை அடிக்கடி காணமுடிவதில்லையே ! மகன் புதுசேரி பல்கலைகழகதில் MBBS முதலாம் ஆண்டு படிக்கிறான்.

மிகவும் நன்றி

அன்பு சகோதரன்.
நினைவை அடக்க நினைத்தால் நிலையா. நினைவையறிய நினைத்தால் நிலைக்கும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126