உல்லன் டெடி பியர்

தேதி: June 29, 2009

5
Average: 5 (5 votes)

உல்லன் பொம்மையில் முதலில் தலைப்பகுதி செய்வதற்கு 4 செ.மீ டயாமீட்டர் எடுத்துக் கொண்டு காம்பஸை வைத்து அட்டையில் ஒரு வட்டம் வரையவும். அதன் நடுவில் 1.5 செ.மீ டயாமீட்டரில் உள்ளே ஒரு சிறிய வட்டம் வரைந்துக் கொள்ளவும். வரைந்த நடுப்பகுதியை கத்திரிக்கோலால் நறுக்கி எடுத்து விடவும். இதேப் போல் உடம்புப்பகுதிக்கு 5 செ.மீ நடுவில் 2 செ.மீ; மூக்குப்பகுதிக்கு ஒரு செ.மீ நடுவில் 0.5 செ.மீ; காதுப்பகுதிக்கு 2 செ.மீ நடுவில் ஒரு செ.மீ; கைப்பகுதிக்கு 2.5 செ.மீ நடுவில் ஒரு செ.மீ; கால்பகுதிக்கு 3 செ.மீ நடுவில் ஒரு செ.மீ என்ற அளவுகளில் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு அளவிற்கும் இரண்டிரண்டு அட்டைகள் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

 

உல்லன் நூல்(ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறங்கள்) - 2
பழைய நோட் அட்டை
ஊசி
கண் - 2 (அல்லது இரண்டு கருப்புநிற ஸ்டிக்கர் பொட்டு)
கத்திரிக்கோல்

 

மேலேக் கொடுக்கப்பட்டிருக்கும் அளவில் தலை, உடம்பு, கை, கால், காது, மூக்கு ஆகியவற்றை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஆரஞ்சு நிற உல்லன் நூலை 45 செ.மீ அளந்து கொண்டு அதே போல் 3 மடங்கு நூலை எடுத்து 3 முறை மடக்கி கொள்ளவும். உடம்பிற்கு வெட்டி வைத்திருக்கும் வட்டமான அட்டையை அடியில் வைத்து அதன் மேல் மூன்றாக மடக்கி வைத்திருக்கும் நூலை ஒரு முடிச்சு போட்டு படத்தில் காண்பித்திருப்பது போல் வைக்கவும்.
அதன் மேலே அதே அளவில் உடம்பிற்கு வெட்டி வைத்திருக்கும் மற்றொரு அட்டையை வைக்கவும். முதலில் 2 அட்டைக்கு நடுவில் முடிச்சு போட்ட நூலை சேர்த்து ஒரே இடத்தில் வைத்துக் கொள்ளவும். முன்பு சொன்னது போல் மீண்டும் மூன்று மடங்கு நூலை எடுத்துக் கொண்டு அட்டையின் நடுவில் இருக்கும் துளையின் வழியாக நூலை விட்டு சுற்றிலும் சுற்றவும்.
இதே போல் அடுத்தடுத்து மூன்று மடங்கு நூலை எடுத்துக் கொண்டு அட்டையின் நடுவில் இருக்கும் துளை தெரியாமல் இருக்கும் வரை நூலை சுற்றவும். ஓட்டை சிறியதாக ஆனதும் ஊசியில் நூலை இரட்டையாக கோர்த்துக் கொண்டு துளையின் வழியாக நூலை சுற்றவும். ஊசி துளையின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு சுற்றி விட்டு ஊசியில் இருக்கும் நூலை நறுக்கி எடுத்து விடவும்.
இதே போல் தலை மற்றும் உடம்பிற்கு ஆரஞ்சு நிற நூலிலும், காது, மூக்கு, கை மற்றும் கால் ஆகியவற்றிற்கு கருப்பு நிற நூலிலும் சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
உடல் பகுதிக்கு சுற்றி வைத்திருக்கும் நூலை எடுத்துக் கொண்டு முடிச்சுப் போட்ட நூலை கையில் பிடித்துக் கொள்ளவும். மற்றொரு கையால் ப்ளேடை வைத்து படத்தில் காண்பித்திருப்பது போல் சுற்றிலும் ஒரே சீராக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு முன்பு முடிச்சுப் போட்ட நூலை நன்கு இறுக்கமாக இழுத்து விட்டு, அதில் இருக்கும் அட்டையை பிய்த்து எடுத்து விடவும்.
மீண்டும் நன்கு இறுக்கமாக இழுத்து முடிச்சுப் போட்டு விடவும். நன்கு உருண்டையாக வரும்படி தேவையற்ற நூல்களை கத்திரிக்கோலை வைத்து சுற்றிலும் வெட்டி விடவும்.
இதே போல் சுற்றி வைத்திருக்கும் வெவ்வேறான அளவுகளில் உள்ள உருண்டைகளையும் அட்டையை நீக்கி விட்டு முடிச்சு போடவும். தேவையற்ற நூல்களை சுற்றிலும் நறுக்கி விட்டு உருண்டையான வடிவில் செய்துக் கொள்ளவும்.
தலை மற்றும் உடல்பகுதியை இணைப்பது: தலைப்பகுதியில் முடிச்சுப் போட்ட நூலை ஊசியில் கோர்த்து உடல் பகுதியில் இணைத்து நூலை எடுத்துக் கொள்ளவும். அதே போல் உடல் பகுதியிலுள்ள நூலை ஊசியில் கோர்த்து தலை பகுதியுடன் இணைத்து நூலை எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது இரண்டு நூலை சேர்த்து நடுவில் இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
ஊசியில் நூலை கோர்த்துக் கொண்டு அடியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். உடல் பகுதியின் அடியில் இரு புறங்களிலும் கால் பகுதியை வைத்து நூலால் தைத்து விடவும்.
இரண்டு கால்களையும் வைத்து தைத்தப் பிறகு அவற்றின் மேல் பகுதியில் இரண்டு கைகளையும் வைத்து தைத்து கொள்ளவும். இதே போல் தலைப்பகுதியில் காது மற்றும் மூக்குப்பகுதியை வைத்து நூலால் தைத்து விடவும்.
எல்லாவற்றையும் இணைத்த பிறகு முகத்தில் கண்ணை வைத்து ஒட்டவும். ஈஸியான உல்லன் டெடி பியர் ரெடி. ஃப்ர் வைத்து செய்யும் பொம்மையை விட இந்த உல்லன் பொம்மை செய்வதற்கு மிகவும் எளிதானது.
உங்கள் ஷோகேஸை அலங்கரிக்கும் இந்த அழகிய உல்லன் டெடி பியரை செய்து காட்டியவர் திருமதி. சரோஜினி பன்னீர்செல்வம் அவர்கள். நாகை நகரில் 20 வருடங்களுக்கு மேலாக கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகின்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனைத் தவிர தையல் வகுப்புகளும் நடத்தி வருகின்றார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டெடி அழகாக இருக்கிறார். :)

‍- இமா க்றிஸ்

Supera iruku. I hope you continue with lots more like this. Good Luck

Nisa

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta