குழந்தை வளர்ப்பு சந்தேகங்கள்

பெண் குழந்தைக்கு எத்தனை வயது முதல் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கலாம்? சீயக்காய் இங்கு கிடைக்காது அதனால் என்ன உபயோகிக்கலாம்?

நல்லெண்ணெய் பத்தி தெரியல,ஆனால் பாதாம் எண்ணெய்,தே.எண்ணெய் யூஸ் பண்ணலாம் தலை,உடம்புக்கு.சீயக்காய்க்கு பதில் முழு தோல் பாசிப்பருப்பு ஊற வைத்து அரைத்து தேய்க்காலாம்.உங்கள் குழந்தைக்கு வயது என்ன?நீங்க எங்க இருக்கிங்க இப்ப?குழந்தையின் வயதை பொருத்து தான் சொல்ல முடியும்.

மேனகா,
தங்களுடய பதிலுக்கு மிக்க நன்றி . என்னுடய குழந்தைக்கு 11 வது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது உடலுக்கு தேங்காய் எண்ணெய்,கடலை மாவு தலைக்கு J&J ஷாம்பூ உபயோகிக்கிறேன்.நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் தோழிகளே,

தெரிந்தவர்கள் எனக்கு உதவினால் மிக்க உதவியாக இருக்கும்.பெண் குழந்தைக்கு 1 வயது முதல் நல்லெண்ணையை தேய்த்து செவ்வாய் வெள்ளி குளிக்க வைக்கலாமா? அவ்வாறு குளிக்க வைக்கலாம் என்றால் நல்லெண்ணெய் போவதற்கு சீயக்காய் பதில் என்ன உபயோகிக்கலாம்? அல்லது எந்த வயது முதல் ஆரம்பிக்கலாம்?

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

குழந்தைக்கு இரண்டு வயது ஆனதும் நல்லெண்ணெய் வைத்து சீயக்காய் தேய்த்து குளிக்க வைங்க.... சீயக்காய் இந்தியன் ஸ்டோரில் கிடைக்கிறது.

இப்பொழுது எப்பவும் போல் தேங்காய் எண்ணெய் தேய்த்து உடம்புக்கு கடலை மாவு மற்றும் பயத்தம்மாவு, தலைக்கு பயத்தம்மாவு அல்லது முட்டை வெள்ளை கரு தேய்த்து ஊத்தலாம். குழந்தைக்கு J & J சாம்பு தவிர்க்கவும். அவீநோவில் வாஷ் சாம்பு கிடைக்கிறது அதை உபோயோகிக்கலாம்.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இதோ வந்துட்டேன். குறிப்பு சொல்ல அல்ல.கேட்க. என் குழந்தைகளுக்கும் 1 வருடம் 1 மாதம் தான் ஆகிறது. முதலில் என் கேள்வி சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்வது?
குளிர்காலம் ஆரம்பித்து 2 மாதம் ஆகிறது 3 முறை சளி பிடித்து விட்டது.எனவே தான் இந்த கேள்வி
உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

லாவண்யா ,

தங்களுடைய விளக்கமான பதிலுக்கு மிகவும் நன்றி.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் ரூபா,

வாங்க நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை வேறு யாராவது தங்களுக்கு உதவுவார்கள் ஏன் என்றால் நான் குழந்தை வளர்ப்பில் LKG :) உங்களுக்கு twins ஆ?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

triplet இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை.
உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

வாவ்

congrats 3 பேரையும் எப்படி சமாளிக்கிறீங்க ?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

8 மாதம் வரை அம்மா இருந்தாங்க 3 மாதம் மாமனார் இருந்தார் இந்த 2 மாதமாக நானும் என் கணவரும் தான் சமாளிக்கிரோம் கொஞ்சம் கஷ்டம் தான் but we can manage
உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

மேலும் சில பதிவுகள்