மட்டன் கடாய் வறுவல்

தேதி: June 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (11 votes)

அறுசுவை நேயர்களுக்காக இந்த மட்டன் கடாய் வறுவலை செய்து காட்டியவர் <b> திருமதி. அப்சரா </b> அவர்கள். சுவையான இந்த வறுவலை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

மட்டன்(எலும்பில்லாதது) - அரைக் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பட்டை - ஒரு அங்குல அளவு
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 9 தேக்கரண்டி (50 ml)
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

மட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் சுத்தம் செய்த மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பொடியாக நறுக்கின கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கறி வேகும் அளவிற்கு (முக்கால் டம்ளர்) தண்ணீர் ஊற்றவும்.
குக்கரை மூடி அடுப்பில் வைத்து வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.
குக்கரின் மூடியை திறந்து அதில் தண்ணீர் விட்டிருந்தால் அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து பட்டை மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
அதில் இந்த மட்டன் கலவையை ஊற்றி 3 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.
மட்டன் கலவை நன்கு சுருண்டு வந்ததும் தீயை மிதமாக வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான மட்டன் கடாய் வறுவல் ரெடி. எவ்வளவு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கின்றோமோ அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்கும். சுவையும் அலாதியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அப்சரா, மட்டின் வறுவல் சூப்பர். நேற்றுப் பார்த்தேன், ஆனால் அறுசுவைக்குள் நுழைய கொஞ்சம் கஸ்டப்படுத்தியது அதனால் போய் விட்டேன். மிகவும் அழகாக செய்திருக்கிறீங்கள். ஈசியான முறை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா எப்படி இருக்கீங்க?தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி.நேற்று எனக்கும் அருசுவையில் நுழைய முடியவில்லை.மிட் நைட்டில்தான் பார்த்தேன்.வேலை பழுவினால் இப்பொழுதுதான் தங்களுடையதை பார்க்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

MS.Apsara ur recipe looks yummy...i have a doubt.when to add onion & tomato.

ஹாய் செந்தமிழ் நலமாக இருக்கின்றீர்களா?மட்டனுடன் வெங்காயம்,தக்காளி மற்றும் அனைத்தையும் சேர்த்துதான் குக்கரில் வைக்க வேண்டும்.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சாரா ரொம்ப நல்ல இருக்கு நாங்களுகல் சில சம‌யம் இப்படி தான் செய்வோம்.

Jaleelakamal

அப்ஸரா

உங்க மட்டன் கடாய் வருவல் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நெய்சோறு,தாளிச்சா உடன் அழகாக ஜோடி சேர்ந்தது.

குறிப்பு வழங்கியமைக்கு நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்சரா... சூப்பரா இருந்தது மட்டன் வறுவல். நல்ல வாசம், நல்ல சுவை. ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா..,
ஸாரிமா இப்பதான் உங்க பின்னூட்டத்தையே பார்க்கின்றேன்.
செய்து பார்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஆமினா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் வனி சமைத்து சுவைத்ததோடு இல்லாமல் வந்து கருத்தினை தெரிவிப்பதற்க்கு மிக்க நன்றி வனி...
நிஜமாகவே சாம்பார்,ரசத்திற்க்கு இரண்டு வாய் சாப்பாடு கூட இழுக்கும்.
என் கணவர் இம்முறையில் செய்தால் மட்டுமே ,மட்டனை சாப்பிடுவார்.
நன்றி வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இந்த மட்டன் கடாய் வறுவல் அஃப்ராக்கு .
ரொம்ப பிடித்துவிட்டது ..செய்வதும் ஈசிதான் வாழ்த்துக்கள் ..

வாழு, வாழவிடு..

சலாம் ருக்சானா..,தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நன்றி மா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய், இன்று மட்டன் கடாய் வறுவல் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது :)

மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)