அன்பான தோழிகளே! இந்த இணையத்தில் நாள் தோறும் புதிதாய் பலர் இணைந்து கொண்டிருக்கையில் இங்கே இருக்கும் பலரை பற்றியும் மற்ற பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அனைவரும் தங்களை பற்றி சுருக்கமான அல்லது விரிவான விளக்கம் கொடுத்து அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே!
அன்பான தோழிகளே! இந்த இணையத்தில் நாள் தோறும் புதிதாய் பலர் இணைந்து கொண்டிருக்கையில் இங்கே இருக்கும் பலரை பற்றியும் மற்ற பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அனைவரும் தங்களை பற்றி சுருக்கமான அல்லது விரிவான விளக்கம் கொடுத்து அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே!
பதிவு செய்யுங்கள் உங்கள் பயோடேட்டாவை...
அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்...
இங்கு பலரும் பலரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளோம்.இதனால் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த ஊர்,தற்போது இருக்குமிடம்,படித்த இடம்,என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? போன்ற பயோடேட்டாவை(ஏற்கெனவே ஒன்று முடிந்து பல நாட்களாகிவிட்டதால்)மற்றும் உங்கள் விருப்பு,வெறுப்பு,பொழுது போக்குகள் பற்றி பதிவு செய்தால் தெரிந்து கொள்ள விருப்பமுடையோர் மட்டுமில்லாமல் தங்களின் பழைய தோழிகள்,உறவினர்களை கூட அறிந்து கொள்ளலாமே!
வெவ்வேறு இடங்களில்(இழைகளில்)தனித்தனியாக ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொள்வதை விட எல்லாம் ஓரிடத்தில் இருந்தால் அனைவருக்கும் பயன்படும் என்றே இந்த இழை தொடங்கியுள்ளேன்.
விருப்பமுள்ளவர்கள் தாராளமாக வந்து பதிவு செய்யுங்கள்.
இது புதிதாய் வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறேன்.
(என்னை பற்றி ஏதாவது யாருக்காவது தெரியணுமா!!! நானும் பல இழைகளில் தான் என்னை பற்றி கூறியுள்ளேன்...)
அன்புடன்
உமா.
அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்!!!
தோழிகளே இந்த இழையை யாரும் இன்னும் பார்க்கவில்லையா!!!
அறுசுவையின் பழைய உறுப்பினராக இருந்தாலும் கூட தங்களை பற்றி தெரியாதோருக்கு கொஞ்சம் அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே!!!
வாங்க...வாங்க...வாங்க...
அழைப்பது...உமா.
என்னுடை ய பயோடேட்டா....
ஹாய் உமா நலமாப்பா? நான் நலம்.
நான் பிறந்தாது == சென்னை
பிரந்தா தேதி = 11-11-19?
என் குடும்பம் தி.கு முன் = அம்மா, அப்பா, அக்கா, தம்பி.
படிப்பு == கிரைஸ்கிங், பாரதி பள்ளி படிப்பு
கல்லுரி = எத்திராஜி மகளிர் கல்லுரி
அக்கா == திருமணம் ஆகி 2 பிள்ளைகள்
தம்பி = வேலைக்கு செர்ந்து 2 மாதம் ஆகிரது
திருமணம் = 2-6-2005
என் கணவர் = தாமோதரன்
பாணி = இலக்ரிக் இஞ்சினியரிங்கு
நான் = வீட்டையும், கணவனைனுயும் கவனித்து கொள்கிரேன்.
தர்ப்போது இருப்பது = சிங்கப்பூர்.
வருடம் = 4 வருடம்
என் பொழுதுபோக்க்கு = அறுசுவை, நிரைய புத்தகம் படிக்க பிடிக்கும், சமையல், tv.
எனக்கு பிடித்தது சமையால் = லமன் ரைஸ், சிக்கன் பிரியாணி, தயிர் சாதம்......
என்னுடைய பலம் = என் கணவர்
பலகீனம் = அனைவரயும் நல்லவ்ர் என்று நம்புவது.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
:-),
பிறந்தது :கடலூர் G.H
படித்த இடங்கள்: இராஜஸ்தான் (மௌண்ட் அபூ), சென்னை, பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், தில்லி.
பணி அனுபவங்கள் (30 வருடங்கள்): விமானம் இயக்குதல், செயற்கை மழை பெய்வித்தல் (வானிலை ஆய்வு துறை), அணு தனிம துறை, மற்றும் பொது இடங்களில் வெளியிட முடியாத இரு துறைகள்.
குடும்பம்: அப்பா, அம்மா தற்போது இல்லை. ஒரு தங்கை திருமணமாகி தஞ்சாவூரில் இரு மகன்களுடன் அரசாங்க வேலையில் இருக்கிறார்.
அன்பு மனைவி லதா இல்லத்தரசியாக, ஒரு மகன் மகேஷ்(+2 முடித்து இருக்கிறார்), ஒரு மகள் ரங்கநாயகி என்னும் ரம்யா (8 ஆம் வகுப்பு)
இருப்பிடம்: குடும்பம் புதுச்சேரியில் நான் தனியாக ஒரிசாவில் இருக்கிறேன்.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
hi uma
பெயர்: தேன்மொழி
ஊர்:அழகப்பபுரம்(நாகர்கோயில்)
தற்போது: சிங்கப்பூர்
குழந்தைகள்: 2
நல்லா பேசுவேன், பொண்ணுக்கு பிடிச்சதை சமைப்பேன்
ஹாய் தோழிகளே...
பெயர்: அப்சரா சலீமா
சொந்த ஊர்:மயிலாடுதுறை பக்கம் ஒரு கிராமம்.
படிப்பு:பத்தாம் வகுப்புதாங்க..
இருப்பது:துபாய்
கணவர் பெயர்:ஃபரீஜ்
அவரது தொழில்:ப்ராஜெக்ட் மேனேஜர்
குழந்தைகள்: மூன்று பேர்(ஆண்_7,பெண்_5,ஆண்_2 1/2)
பொழுதுபோக்கு:டீ.வீ,கம்ப்யூட்டர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பது.
பிடித்தவிஷயம்:வீட்டை நீட்டாக வைத்துக் கொள்வது,புதிதாக சமைத்து பார்ப்பது,இந்த அருசுவை மூலம் நிறைய விஷயங்களையும்,தோழிகளையும் பெற்றிருப்பது.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
பெயர் :
பெயர் : ப்யாரி [சுகி]
ஊர் : மதுரை
படிப்பு: தேனீ நாடார் ஸ்கூல் [பள்ளி]
மதுரை மீனாட்சி கல்லூரி
பி.எட.ஆக்ரா உனிவேர்சிட்டி
தற்போது வசிப்பது : யு.கே.
குடும்பம் : ஹஸ் டாக்டர் [மனநல மருத்துவர்], ஒரு பெண் குழந்தை
பெயர் சூக்ஷ்மா
பொழுதுபோக்கு: புதுசா சமையலில் எதாவது செய்யுது பார்ப்பது
புத்தகம் படிப்பது.அறுசுவை ல
அரட்டை அடிக்க ஆசை ஆனா பாப்பாவ
பாத்துக்க வே நேரம் சரியாய் இருக்கு
என் பெயர்
பெயர்:இளவரசி
கணவர்:ஆனந்த ராஜா(கெமிக்கல் இஞ்சினியர்)
பிறந்தது:துறையூர்ப்பக்கம் ஒரு கிராமம்.
புகுந்த வீடு:கன்னியாகுமரி பக்கம்(கொட்டாரம்)
படித்தது:MCA.,B.ED.,
படிக்க நினைப்பது:Ph.D
படித்தபள்ளி:திருச்சி சாவித்திரி வித்யாலயா
படித்த கல்லூரி:திருச்சி இந்திராகாந்தி கல்லூரி,
வேலைப்பார்த்தது:
ஓசூர் அதியமான்கல்லூரி(ஆசிரியை மற்றும் கணிணித்துறை தலைமைப்பொறுப்பு- 5 வருடங்கள்)
மலேசியா பல்கலைகழகம்(ஆசிரியை-2 வருடங்கள்
பிள்ளைகள்:
இரண்டு(மகள்-சுஷாந்தி(5 வயது),மகன்-சுபாஷ்(2 வயது)
இருப்பது:கத்தார்
தற்போது:இல்லத்தரசி
அருசுவையில் படித்ததில் பிடித்தது:
திரு.ஹைஷ் சகோதரரின் கருத்துக்கள்
வனிதாவின் நகைச்சுவையோடு கூடிய எழுத்துதிறமை,
அதிராவின் நகைச்சுவை(மிகவும் சிரிக்கிறேன்..நன்றி)
சகோதரி மனோகரியின் அனுபவம் சார்ந்த
யதார்த்த கருத்துக்கள்,(மணமகளே..)
எல்லா தோழிகளின் குறிப்புக்கள்
உமாவின் ஆலோசனைகள்,
தற்போதைக்கு விறுவிறுப்பாய் போகும் பட்டிமன்றம்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
அருமையான அறிமுக படலம் தொடங்கியாயிற்று...
ஆஹா...ஆஹா...என்ன அழகாய் அனைவரும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்...இந்த இழையில் தொடக்கத்திலேயே இதற்கு பெருமை சேர்த்துள்ள பிரபா,ஹைஷ் அண்ணா,தேன்மொழி,அப்சரா,சுகி,
இளவரசி அனைவருக்கும் எனது நன்றிகள்.
இளவரசி உங்க பிடித்தமானவைகளில் "உமாவின் ஆலோசனைகள்" என்று சொல்லியிருக்கீங்களே,மிகவும் நன்றி...என்னை வச்சி காமடி கீமடி பண்ணலியே!!!...
வாங்க...வாங்க...வாங்க...
புதிய மற்றும் பழைய அறுசுவை உறுப்பினர்கள் அனைவரும் விருப்பமிருந்தால் வந்து உங்களை பற்றிய விபரங்களை இங்கே பதி செய்யுங்கள்.
அன்புடன்
உமா.
உமா.... நல்ல
உமா.... நல்ல இழை, நிறைய பேர் இதன் மூலம் தான் அவங்க ஊரில் இருக்க தோழிகளை கண்டு பிடிக்கறாங்க. :) எனக்கு இன்று எல்லாருடையதையும் படிக்க நேரம் இல்லை (னல்ல தலை வலியோடு உட்கார்ந்திருக்கேன்), நாளை வந்து பொருமையா பார்க்கிறேன். இன்னும் புதிதாக வந்தவங்க எல்லாம் பதிவு போடட்டும். ஏற்கனவே நிறைய பேர் சொல்லி இருக்காங்க அதையும் நேரம் கிடைக்கும்போது பாருங்கோ.
http://www.arusuvai.com/tamil/forum/no/9062
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா