விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

(படம்-1) ஒரு விமானத்தில் செயல் படும் நான்கு விசைகள். விமான பட தொகுப்பில்.

1. Lift (லிப்ட்) – விமானத்தை மேல் நோக்கி தூக்கும் விசை
2. Drag (ட்ராக்)– காற்றினால் தடை
3. Thrust (திரஸ்ட்)– எஞ்சினின் உந்து விசை
4. Weight (வெயிட்)–புவி ஈர்ப்பு விசை

இந்த நான்கு விசைகளையும் சமநிலையில் வைத்து இருப்பதுதான் விமானியின் வேலை!

(படம்-2) விமானத்தின் வெளிப்பகுதிகளின் பெயர்கள்: விமானத்தின் முகத்தில் இருந்து மேல் புறமாக

1. காக்பிட்: விமானிகள் உட்கார்ந்து இயக்கும் இடம்.
2. ஜெட் என்ஜின்: உந்து விசையளிக்கும் எந்திரம்( என்ஜினைப் பற்றி பிறகு விரிவாக பார்போம்)
3. விங்: இறக்கைகள் இதில் இருந்துதான் மேலெ தூக்கும் விசை உற்பத்தியாகிறது.
4. ஹரிசாண்டல் ஸ்டெபிலைசர்: இது விமானம் உருளாமல் இருக்க உதவுகிறது.
5. வெர்டிகல் ஸ்டெபிலைசர்: இதுவும் விமானம் உருளாமல் இருக்க உதவும் இவற்றை பின் விரிவாக பார்போம்.
6. ரடர்: இது விமானத்தை இடது அல்லது வலது பக்கம் திருப்ப உதவும்.
7. எலிவேட்டர்: இது விமானத்தை மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் பயன்படும்.
8. ஃப்ளாப்: இது குறைந்த தூரம் ஒடுதளத்தில் ஒடி டேக் ஆப் செய்ய உதவும்.
9. எய்லரான்: இதுவும் ரடரும் சேர்ந்துதான் விமானத்தை திருப்ப பயன்படும்.
10. ஸ்பாய்லர்: இது விமானத்தை தரையிறக்கும் போது விரைவாக வேகத்தை குறைக்க பயன்படும்.
11. ஸ்லாட்: இதுவும் ஃப்ளாப் இரண்டுமே குறை தூரம் ஓடி டேக் ஆப் செய்யபயன்படும்.
12. ஃப்யூஸ்லாஜ்: இதுதான் விமானத்தின் உடம்பு.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,
இங்கு பாடசாலையில் தற்போது விஞ்ஞான பாடத்தில் இந்தத் தலைப்புத்தான் (எனக்கு இல்லை) போகிறது. அதனால் படம்-1 பற்றித் தெரியும். மீதி விபரங்கள் தேடிப் பார்க்கவென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இனி இங்கு தொடர்ந்து படிக்கலாம். நன்றி. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் ஹைஷ் அண்ணா உண்மையில் நல்ல தகவல் தந்து இருக்கிரிர்கள்........

**** கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு*****
என்பது உண்மை.......

ஆனால் அதிகமாக தொரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாக இருக்கிரது.........

உங்கள் சேவை இனிமையாக தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி. உங்கள் பள்ளியின் பாட்திட்டம் என்ன என்று எழுதினால் அதற்கு தகுந்தாற் போல் பதிவு போடுகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஊக்கம் கொடுத்தமைக்கும் மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

1. இறக்கையை அடிப்படையில்:

1.1. பிக்ஸ்ட் விங் (Fixed Wing) சாதாரணமாக நாம் பார்க்கும் விமானம்
1.2. ரோட்டரி விங் (Helicopter) ஹெலிகாப்டர்

2. என்ஜினை அடிப்படையில்:

2.1. காற்றை விட லேசான பலூன்(Hot Air Baloon) –திரைப் பாட்டுக்களில் வருமே ஆட்கள் போவது அது.
2.2. என்ஜினே இல்லாம பறக்க கூடிய கிளைடர் விமானம் (Glider Aircraft)
2.3. ஒற்றை என்ஜின் உள்ள விமானம் (Single Engine)
2.4. இரண்டு என்ஜின் உள்ள விமானம் (Twin Engine)
2.5. பல என்ஜின் உள்ள விமானம் (Multi Engine)
2.6. இருசக்கர வண்டி அல்லது கார்களில் உபயோகப்படும் என்ஜின் உள்ள விமானம் (Reciprocal Engine) இதனுடன் முன்பக்கம் உள்ள காற்றாடி போல் உள்ள சுற்றும் இறக்கை (Propeller)
2.7. ஜெட் என்ஜின் உள்ள விமானம் (Jet Engine)
2.8. டர்போ ஜெட் விமானம் (Turbo Jet Engine)
2.9. டர்போ ப்ரோப்பெல்லர் விமானம் (Turbo Propeller)
2.10. ராக்கெட் என்ஜின் உள்ள விமானம் (Rocket Engine)

3. உடல் அமைப்பு அடிப்படையில்:

3.1. நீளமான உடல்(Long Body)
3.2. அகலமான உடல்(Wide body)

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,

தலைப்பு 'flight', 12 வயதினர் என்பதால் அடிப்படை மட்டும் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
விமானங்களின் ஆரம்ப கால வரலாறு, விசைகள், க்ளைடர், பலூன் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள். கடதாசி அட்டையில் மாடல்கள் செய்வார்கள்.
சில சமயங்களில் அந்த வகுப்பைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது. அந்த ஆசிரியர் வகுப்பு எடுக்கும் விதம் சுவாரசியமாக இருக்கும். மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவலை தூண்டும்.

எனக்கு எப்பொழுதும் விமானத்தில் இறக்கைப் பக்கத்து யன்னலோரம் இருக்கப் பிடிக்கும், விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் வெளியே இறக்கை இயங்கும் விதம் அழகாக இருக்கும். அதைனைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல்.

படங்கள் எல்லாம் பார்த்தேன். முதல் இரண்டு படங்களும் தெளிவாக இருக்கின்றன. இனி நீங்கள் சொல்லப் போவதை படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறேன்.
நன்றி

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஏரோ மாடல்கள் செய்வது தனிகலை அதற்கும் விமானிகளுக்கும் எதும் சம்பந்தம் இல்லை. ஆனால் அது எனக்கும் பிடிக்கும் எப்போதாவது ரிமோட் கன்ரோல் ஏரோமாடல் ஓட்டுவேன்.

உள்ளே இருந்து இறக்கையை பார்க்கும் போது பிளாப், எய்லெரான், ஸ்பாய்லர் மட்டும்தான் தெரியும். அதே போல் என்ஜினின் ரிவர்ஸ் திரஸ்ட் பக்கெட் செயல் படுவதும் தெரியும், பின்பு அதனை படத்துடன் விளக்குகிறேன்

அன்பு சகோதரன்

பி.கு: படம் 3 -16 பார்த்தீர்களா?

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இதில் இத்தனை விஷயங்கள் உண்டோ?தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா உங்கள் ஒவ்வொரு பதிவும் நிச்சயம் மற்றவருக்கு ஒரு தகவலை கொடுப்பதாக உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்...உங்கள் பிள்ளைகளின் பெயர் ரொம்ப அழகாக இருக்கு

ஹாய் ஹைஷ் அண்ணா & இமா அக்கா எனக்கு இந்த http://picasaweb.google.co.in/ haish12 வெப்சைட் ஓபன் ஆகலை ஏன்னு தொரிய வில்லை.

பிலீஸ் செல்லுங்கள்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்