விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

மிகவும் நன்றி, நீங்கள் சகோதரி பிரபாதாமுவிற்கு செய்த உதவிக்கும் சேர்த்து.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி ஸாதிகா,

கருப்பு பெட்டி என்றால் அது கருப்பாக இருக்காது. விபத்திற்கு பின் எளிதாக தேட அது ஆரஞ்சு நிறமாக இருக்கும். பல உயிரிழந்தவர்களின் குரல் அதில் இருப்பதால் அதற்கு (துயரம்)கருப்பு பெட்டி என பெயர் வந்த்து.

ஒரு விமானத்தில் இரு பெட்டிகள் இருக்கும்.

1. விமானிகளின் குரலும், கன்ரோட் டவரில் இருந்து வயர்லெஸ் மூலம் பேசுபவரின் குரலும், பதிவாகும் பெட்டி, காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் எனப்படும். (CVR- Cockpit Voice Recorder)இதை டேப் ரெக்கார்டரில் போட்டால் விபத்துக்கு முன் நடந்த பேச்சுவார்தைகள் இருக்கும் (கடைசி அரை மணி நேரம் மட்டும்)

2. இரண்டாவது பெட்டி ப்ளைட் டேடா ரெகார்டர் எனப்படும். அதில் முக்கியமான விமான இயக்க பதிவுகளும், விமானியின் செயல்களும் பதிவாகி இருக்கும். FDR - Flight Data Recorder. இதை கணணியில் போட்டால் கிராப் வரும், இன்னும் நல்ல கணணியில் போட்டால் விமானம் போவது படமாக (கிராபிஸ்) வரும்.

தலைப்பில் கொடுத்துள்ள லிங்கில் விமானம் பட தொகுதியில் 21-25 படங்கள்

இந்த தொடர்பில் எப் டி ஆர் மூலம் எப்படி விபத்து நடந்தது எ்ன்று கண்ணியால் உருவாக்கப்பட்ட வீடீயோ படம்.

http://www.youtube.com/watch?v=ecQFt5eNSbc&feature=related

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,

நன்றி, நன்றி, நன்றி. :)
உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும், எனக்காக தேடி எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
உண்மையிலேயே சப்தம் கேட்க விமானத்தினுள் இருக்கிற மாதிரியே இருக்கிறது. :) மெதுவே தான் (நெட்) பார்க்க முடிகிறது. பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் சொல்லும் விதம் விளங்கிக் கொள்ளச் சுலபமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
படங்கள் 3-16 & அது தொடர்பான விபரங்களும் பார்த்தேன். நன்றி.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வேகம் காட்டும் கருவி என்பது மனிதனின் இதயம் போன்றது. விமானம் பறக்கும் போது அதில் இருக்கும் முள்தான் விமானத்தின் இதய துடிப்பை காட்டும். படம் 18 இல் இருக்கும் கருவியில் 40 நாட் இல் இருந்து 260 நாட் வரை குறிக்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள நிறங்கள்:

1. வெள்ளை :62 நாட் என்ப (Vso -Velocity Basic Stall Speed) கீழே வேகம் வந்தால் (பிளாப், ஸ்லாட் கீழே இருக்கும் போது) விமானம் கிழே விழுந்து விடும். “குறைந்த இதய துடிப்பு” எனலாம். அதே போல் 130 நாட் (VFE – Velocity Flaps Extended Speed) வரை இருக்கும். அதன் அர்தம் 130 நாட் வரைதான் பிளாப்ஸ் கீழே அல்லது வெளியில் இருக்கலாம். இது போல் ஒவ்வொரு நிறத்திற்கும் பல அர்த்தங்களும், பெயர்களும், சில வேகத்தை குறிக்கும் எண்களும் உண்டு. அதை முழுவதுமாக் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பச்சை நிறம்: 70-185 நாட், இது விமானம் ஓட்ட பாதுகாப்பான வேகம்.

3. மஞ்சள் நிறம்: 185-235 நாட் இது எச்சரிக்கையாக விமானம் ஓட்ட வேண்டிய வேகம்.

4. சிவப்பு கோடு 235: இதற்கு மேல் விமான பறந்தால் அதன் இறக்கைகள் பிய்த்து கொண்டு போய் விடும். (VNE – Velocity Never Exceed)

இந்த குறியீடுகள் ஒவ்வொரு விமானத்திற்கும் வேறுபடும். ஆனால் பெயர்கள் மாறுபடாது. எ.க.
VMCG, VST, V1, VR, VSO, VSO1, V3, V4, VLE, VFE, VRA, VNO, VNE …etc.. இதில் V என்பது Velocity அல்லது வேகம்.

வேகம் காட்டும் கருவி முடிந்தது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

விமானம் பற்றிய தகவல்கள் நல்ல பயனுள்ளவை. ஸாதிகா அவர்கள் கேட்டதையே
நானும் கேட்க நினைத்தேன்(கருப்பு பெட்டி) நன்றி பதிலுக்கு.

இன்னும் உங்களுடைய பதிவையும், படங்களையும் link செய்து படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன்.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன்,
இந்த இனிய தொடரை எப்போ ஆரம்பித்தீங்கள்? ஒருநாள் அறுசுவைக்குள் வராவிட்டாலே என்னவோவெலாம் நடக்கிறதே.. நான் இன்னும் முழுவதும் படிக்கவில்லை, படங்களும் பார்க்கவில்லை, நேரம் ஒதுக்கி வருகிறேன். நன்றாக இருக்கு தொடருங்கோ. நான் இதைப் பார்ப்பேனா:)? அதைப் பார்ப்பேனா:)?.

ஆனால் ஒன்று, விமானம் பற்றித் தெரியாமல் விமானத்தில் தைரியமாக ஏறலாம்:) தெரிந்தால் கொஞ்சம் கை கால் நடுக்கம் ஏற்படத்தான் போகுது:)... ஏறும்போது "நிம்மதி"யாக ஏற வேண்டாமோ:)?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வார விடுமுறை நன்றாக கழிந்ததா?

இது ஜாலியா அரட்டை அடித்துக் கொண்டே பயணம் செய்யும் இழை.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இதுவரை இறக்கை, என்ஜின், மற்றும் உடல் அமைப்பின் அடிப்படையில் எப்படி விமானங்களை வகை பிரித்தார்கள் என்று பார்தோம். இன்னும் இரு வகைகள் உள்ளன.

1. விமானத்தின் எடையை (Weight) பொருத்து:

1.1. காற்றைவிட லேசானது. (Hot Air Baloons - பலூன்கள்)

1.2. மிக குறைந்த எடை உடையது.

1.2.1. பாரா கிளைடர் (Para Glider): பாரசூட் மூலம் பறப்பது.
1.2.2. ஹேங் கிளைடர் (Hang Glider): கம்பிகளில் துணி கட்டி என்ஜின் வைத்து இருக்கும்.
1.2.3. மைக்ரோ லைட் விமானம் (Microlite aircraft).
1.2.4. கிளைடர் விமானம் Glider

1.3. 7000 Kgs கும் குறைந்த எடை உள்ள விமானம்.

1.4. 7001 - 1,36,000 kgs மிதமான எடை உள்ள விமானம்

1.5. 1,36,001 kgs மேல் அதிக எடை உடைய விமானம்

2. வேகத்தை பொருத்து விமானத்தின் வகைகள்

2.1. ஒலியின் வேகத்தை (1236 கி.மீ) விட குறைவான வேகத்தில் செல்லும் விமானம் (Subsonic aircraft).

2.2. ஓலியின் வேகத்தை (1236 கி.மீ மேல் 5625 கீ.மீ க்கு கீழாக) விட அதிக வேகத்தில் செல்லும் விமானம் (Supersonic aircraft).

2.3. ஐந்து மடங்கு (5625 கி.மீ) ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் விமானம்(Hypersonic aircraft).

இதை எல்லாம் சொல்லி புரியவைப்பதற்கு பதிலாக தினம் ஒரு லிங் கொடுக்கிறேன். முதல் விமான பயணம் பண்ணி பார்த்து மகிழுங்கள்.

இன்று சூடான காற்றடைத்த பலூன் (Hot air balloon):
http://www.youtube.com/watch?v=r-dijHS5svE

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

என் வேண்டுகோளுக்கினங்க கருப்புபெட்டியை பற்றி விவரித்தமைக்கு மிகவும் நன்றி.நீங்கள் பதிவு செய்த லின்க் கணினியால் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் திரில் ஆக இருந்தது.மிகவும் நன்றி.
மேலும் நீங்கள் முதன் முடலில் விமானம் ஓட்டிய அனுபவம்,நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இயன்றால் தொடராக எழுதுங்களேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்