விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் - அது போல் ரொம்ப சீக்கிரமே மாடிக்கொண்டீர்களா? ஊக்கத்திற்கு மிகவும் நன்றி

பி.கு: பிள்ளைகளுக்கு சொன்னால் மாட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

தங்களின் ஊக்கத்திற்கும், பாரட்டுகளுக்கும் மிகவும் நன்றி. முழுவதும் படித்ததும் சொல்லுங்கள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

என் அனுமானம், விமானம் தரையிறங்கும் முன் சுற்றி சுற்றி வந்தது என்றால்,

1. அந்த விமானத்திற்கு முன் தரையிறங்க வேறு விமானங்கள் வரிசை படுத்தப்பட்டு இருப்பதால் அவைகள் இறங்கும் வரை சுற்றி வந்து இருக்கலாம்.

2. ஏதாவது இடியுடன் கூடிய மேகமூட்டம் இறங்கு வழியில் இருந்திருகலாம் அதனால் அந்த மேகம் நகரும் அல்லது மழையாக் பொழியும் வரை சுற்றி இருக்கலாம்.

3. ஓடுதளத்தில் ஏதாவது பொருட்கள், பறவைகள் அல்லது விலங்குகள் நடந்து சென்று இருக்கலாம்-அதை விரட்டும் வரை சுற்றி இருக்கலாம்.

அதற்கும் காது வலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதேபோல் முன் பக்க இருக்கைகளுக்கும் பின் பக்க இருக்கைகளுகும் காது வலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (Business class உட்காருவதால் கேட்கிறீர்களா?)

காது வலிக்கும் விமானதிற்கு உள் மற்று வெளியே உள்ள காற்றழுத்த வித்தியாசத்தில் தான் காது வலி வரும்.(Differential Pressure between Atmospheric pressure and inside aircraft pressure)

நவீன விமானங்களில் காற்றழுத்த வித்தியாசத்தை கண்ணி மூலமாகதான் குறைப்பார்கள் அதில் விமானியால் தவறு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு.

• காது வலிக்கு ஒரே ஒரு காரணம் நம் உடலில் இருக்கும் யூஸ்டேஷியன் ட்யூப் அடைப்பு இருந்தால் மட்டுமே வரும். அதில் அடைப்பு இல்லை என்றால் கத்துகுட்டி விமானி விமானத்தை ஓட்டினாலும், கம்யூடர் சரியாக வேலை செய்யவிட்டாலும் காது வலிக்காது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அனைவரும் நலமே,அதேபோல் அங்கு அனைவரின் நலத்துக்காக தியானிக்கிறேன். மகனுக்கு அவன் விரும்பிய மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து வகுப்புகள் ஆரம்பித்து விட்டது.

அன்பு சகோத்ரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அனுமதிப்பத்திரம்
ஹைஷ் அண்ணன்!!!, ஏதோ கோ பைலட் தேவை என்றீங்கள். உடனே என் விபரமெல்லாம் அனுப்பிவிட்டேன்.:), எதையாவது காரணம் காட்டி எனக்கு லைஷென்ஸ்சைத் தராமல் விடவேண்டாம். எவ்வளவு பிழை இருக்கோ(ஷேட்டிபிகேற்றில்) அவ்வளவையும் கழித்துக்கொண்டு, மிகுதிக்கு பாதித்தூரம் ஓட்டலாம் என்றாவது லைஷென்ஸ்சைப் பெற்றுத்தாங்கோ.. கார் ஓடுவதுபோல மிகுதியை யாராவது ஓட்டட்டும்:).

இன்னொரு கேள்வி, இங்கே பார்க்கிறேன், விமானங்கள் எயார்போட்டில் ஏறும்போதும், இறங்கும்போதும் எல்லா லைட்டோடேதான் வருகின்றன. நல்ல கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சமுள்ள நேரத்திலும். இப்படித்தான் பயணம் முழுவதும் லைட் போட்டிருக்குமோ? அல்லது, எயார்போட்டுக்கு கிட்ட வரும்போது மட்டும்தான் போடுவதோ? நிறைய எரிபொருள் செலவாகுமே.

மகனுக்கு, மருத்துவக் கல்லூரி கிடைத்தது கேட்டு மிக்க மகிழ்ச்சி... ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்... தந்தை...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்களுடைய விபரம் சொன்னவுடனே உங்களுக்கு அனுமதி பத்திரம் அளித்து விட்டார்கள். நீங்கள் கேட்டு கொண்ட படி பாதி தூரம் ஓட்டலாம், அதன் பிறகு அங்கேயே இறங்கி கொள்ள வேண்டுமாம். உங்களுக்கு ஓகே தானே? (பயணிகள் விமானத்தில் பாராசூட் இருக்காது அல்லவா?)

ஏர்போர்டில் டிராபிக் டென்சிடி அதிகம் அதே போல் பறவைகளும் அதிகம் அதனால் விளக்கு எரிந்தால் பறவைகள் விலகி விடும், மற்ற விமானிகளுக்கும் அடையாளம் காண எளிதாக இருக்கும்.

மகனை வாழ்த்தியதற்க்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

1. காற்றழுத்தம் (Pressure)
2. காற்றின் அடர்த்தி (Air density)
3. காற்றி வெப்பம்( Air Temperature)
4. காற்றின் வேகம்(Wind Speed)
5. காற்றின் ஆற்றல்(Entropy)

இதில் விமான பயணத்தில் காற்றி அழுத்தம் மட்டுமே நம்மை நேரடியாகவும், மற்றவை விமானத்தின் இயக்கத்தையும் பாதிக்கும். அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில் காற்று அழுத்தம் பற்றி பார்போம், கடல் மட்டத்தில் காற்றி அழுத்தம்

101.3 Kilo Newton Force
1013.25 mili Bar pressure (mb)
14.7 Inches of Hg (Mercury)
760 Millimeters of Mercury (mm Hg) அதில் ஆக்சிஜனின் அழுத்தம் மட்டும் 160 mm Hg
33.9 feet water pressure
29.92 Pounds per squire Inches of mercury

இருக்கும் ஆனால் நாம் உயர போக போக அது குறைந்து கொண்டே வரும் உ.ம்

10,000 அடி உயரத்தில் 523 mm Hg , ஆக்சிஜனின் அழுத்தம் மட்டும் 105 mm Hg
20,000 அடி உயரத்தில் 349 mm Hg , ஆக்சிஜனின் அழுத்தம் மட்டும் 70 mm Hg
30,000 அடி உயரத்தில் 225 mm Hg , ஆக்சிஜனின் அழுத்தம் மட்டும் 45 mm Hg
40,000 அடி உயரத்தில் 141 mm Hg , ஆக்சிஜனின் அழுத்தம் மட்டும் 29 mm Hg

இதில் காற்றழுத்தம் நம்மை இரண்டு விதமாக பாதிக்கும், ஒன்று நம் உடலில் உள்ள திரவ பொருள் குக்கரில் அதிக அழுத்ததில் உள்ளது போல் இருப்பதால் உடலுக்கு வெளியே அழுத்தம் குறையும் போது நம் உடலில் உள்ள திரவத்தில் இருக்கும் காற்று வெளிவர ஆரம்பிக்கும் ( அதாவது குறைந்த அழுத்ததினால் நம் ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும்) இது 25, 000 அடிக்கு மேல்தான் ஆரம்பிக்கும் அதன் பெயர் எபுலிஸம் லெவல். (Ebulisam Level)

இரண்டாவதாக காற்றில் உள்ள ஆக்ஸிசன் குறைவதால் மயக்கம் ஏற்படும், மனிதனால் 10,000 அடிக்கு மேல்தான் இது ஆரம்பிக்கும் 25,000 அடிக்கு மேல் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அழுத்தம் மிக குறைவு அதனால் மனிதன் மயக்கம் அடைந்து விடுவான்.

அதனால் விமானத்தின் உள் இருக்கும் அழுத்த்தை செயற்கை முறையில் 8,000 அடியில் இருக்குமாறு கண்ணி மூலம் கட்டுபடுத்துவார்கள்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன்,
உங்கள் பதில் பார்த்துச் சிரித்ததில் கையும் வாயும் சுழுக்கிப்போச்சு:) அதுதான் உடனே பதில் போடமுடியவில்லை.

நான் நினைத்திருந்தேன் பிளேன் மட்டுமேதான் ஆபத்தானதென்று, இப்போதான் தெரியுது, அதனை வழிநடத்துபவர்கள், அதைவிட ஆபத்தானவர்கள் என்று:).எனக்கு விமான அனுமதிபத்திரம் வேண்டாம், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாப்போச்சு என்கதை:).

காற்றுப் பற்றிய விளக்கம் அருமை. அதுசரி எப்படித்தான் இவ்வளவு பொறுமையாக எல்லாம் எழுதுறீங்களோ. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பின் ஹைஷ்,
நானும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழிஸ் & சகோதரகள் அனைவருக்கும் காலை வணக்கம்.... இன்றைய நாள் இனிய நாள் ஆக வாழ்த்துக்கள்ப்பா.................

ஹைஸ் அண்ணா ஏனா அடிக்கடி விமான விபத்து ஏர்ப்படுது....? இதனை தடுக்க முடியாதாண்ணா.......?

தீவர வாதிகள் கையில் விமானம், பயணிகல் எப்படி அண்ணா மாட்டுது......? எல்லமே செக் பன்ணீ அப்புராங்கலாண்ணா..... அப்பரம் எப்படி? அந்த நேரம் பயிலாட்க்கு எப்படி இருக்கும்?

அந்த கருப்பு பொட்டி பத்தி நிரைய கேள்வி படரேம்...? அது அவ்வளவு முக்கியமானா?

விமானம் தரையி இரங்கும் போது விபத்து , கலம்பும்போது விடித்து சிதருது இது எல்லம் ஏன்னா? ஏன் அப்படி நடக்குது?

சொல்லுங்கனா பீலீஸ்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்