விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

காற்றழுத்தம் பற்றி படித்தேன், நிறைய தெரியாத விஷயங்கள் சொல்வதற்கு மிகவும் நன்றி. உண்மையிலேயே உங்களுக்கு பொறுமை அதிகம்.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

தேடாமல் தேடினேன் உள்ளத்தால், எங்கே காணோமே என்று. ஊக்கத்திற்கு மிகவும் நன்றி. ஒரு மாத காலம் விடுமுறையில் சென்றதால் வீட்டு வேலையும் கொஞ்சம் அதிகம், அலுவலக வேலையும் அதிகமாக இருப்பதால் உடனுக்குடன் பதில் அளிக்க முடியவில்லையே என வருந்துகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா, அதெப்படி நான் அறுசுவை திறந்ததும் சரியாகப் பார்த்துப் பதிவு போட்டீர்கள்? :) நலமா? லதா, பிள்ளைகள் நலம்தானே?
இன்று என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எழுதுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அனைவரும் நலமே, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

//ஹைஸ் அண்ணா ஏனா அடிக்கடி விமான விபத்து ஏர்ப்படுது....?//எல்லா தொழிலிலும் விபத்துகள் ஏற்படுகிறதே, சாலை விபத்து தினமும் எத்தனை உயிர்களை குடிக்கிறது நேற்று கூட நெல்லிக்குப்பம் அருகே பள்ளிகுழந்தைகளை (LKG to 7 ஆம் வகுப்பு) ஏற்றி சென்ற பஸ்சும், மணல் லாரியும் மோதிக் கொண்டது டிவியில் காட்டினார்கள் மிகவும் வருந்ததக்க விளைவுகள்தான் விபத்துகள். //இதனை தடுக்க முடியாதாண்ணா.......?//மனிதன் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறான் ஆனால் முடியவில்லையே- எப்படி பிறப்பும் இறப்பும் நமக்கு தெரிந்தாலும் தடுக்க முடியுமா?

//தீவர வாதிகள் கையில் விமானம், பயணிகல் எப்படி அண்ணா மாட்டுது......? எல்லமே செக் பன்ணீ அப்புராங்கலாண்ணா..... அப்பரம் எப்படி?// அவர்களும் அறிவாளிகள்தான் இதுவும் விபத்து போன்றதே //அந்த நேரம் பயிலாட்க்கு எப்படி இருக்கும்?// திக் திக் என்றுதான் இருக்கும்.

//அந்த கருப்பு பொட்டி பத்தி நிரைய கேள்வி படரேம்...? அது அவ்வளவு முக்கியமானா?// ஆமாம் அதில் இருந்துதான் விபத்துக்கு முன் என்ன நடந்த்து எப்படி நடந்த்து என்று ஆராய்ந்து தடுக்க என்ன முயற்சிகள் தேவையோ அதை எடுப்பார்கள்.

//விமானம் தரையி இரங்கும் போது விபத்து , கலம்பும்போது விடித்து சிதருது இது எல்லம் ஏன்னா? ஏன் அப்படி நடக்குது?// ஏதாவது குறிப்பிட்ட விபத்து என்றால்தான் காரணம் என்ன என்று சொல்லமுடியும், எந்த ஒரு விபத்தும் ஒரே ஒரு காரணத்தினால் ஏற்படுவது இல்லை, அதற்கு பல காரணங்கள் உண்டு.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஊக்கத்திற்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

காற்றின் அடர்த்தி (Air Density) விமான இயக்கத்தை இருவிதமாக பாதிக்கும். ஒன்று அடர்த்தி குறைந்தால் என்ஜினில் உருவாகும் பவர் குறையும், அதனால் தேவையான பவர் கிடைக்காது, டேக் ஆஃப் சமயத்தில் விபத்து ஏற்படலாம். இரண்டாவது விமானத்தின் உயரம் காட்டும் கருவி உண்மையான உயரத்தை விட அதிகமாக காட்டும், அதனாலும் விபத்து ஏற்படலாம். உ.ம்.

ஒரு மலையின் உயரம் 8,000 அடிகள். அதை கடக்க விமானம் குறைந்த பட்சம் 10,000 (2,000 அதிகமாக) கடக்க வேண்டும் என் வைத்துக் கொள்வோம். காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்து இருக்கும் போது விமானம் 7,000 அடிகள் இருக்கும் போதே உயரம் காட்டும் கருவி 10,000 அடி என்று காட்டும். அப்படி என்றால் அந்த விமானம் மலையை கடக்கும் போது மலையில் மோதி விபத்துக்குள்ளாகும்.

அதற்கு விமான பயிற்சியின் போது சரியான பயிற்சி முறைகள் சொல்லி தருவார்கள், அப்படி இருந்தும் சில விபத்துகள் நடந்து இருக்கிறது.

காற்றின் வெப்பம்: அதிகரித்தால் காற்றின் அடர்த்தி குறையும், மேலே கூறிய அனைத்தும் விளைய வாய்ப்புகள் உண்டு.

காற்றின் வேகம்: டேக் ஆஃப், லேண்டிங் எப்போதுமே எதிர்காற்றில்தான் செய்ய வேண்டும், அப்போதுதான் விமான தரையில் ஓடும் தூரம் குறையும். அதே போல் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் காற்று இருந்தாலும் விமானம் பறக்க அனுமதி இல்லை.

பி.கு: அன்பு சகோதரி இமா, அனைவரும் நலமே அதே போல் தாங்கள் குடும்பத்தாருடன் அனைவரும் நலமாய் இருக்க தியானம் செய்கிறேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன், உங்கள் காற்றின் அடர்த்தி பற்றிய சங்கதியைப் பார்க்கப் பயமாக இருக்கு.

1)அப்போ அடர்த்தி குறைந்திருக்கு என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்.
2)சரியான உயரத்தைக், கருவி காட்டவில்லை என எப்படிக் கண்டுபிடிப்பீங்கள்?.
3)காற்றின் அடர்த்தியைக் காட்டவும் இன்னொரு கருவி இருக்குமோ?

///அந்த நேரம் பயிலாட்க்கு எப்படி இருக்கும்?// திக் திக் என்றுதான் இருக்கும்///
நல்ல கேள்வி, நல்ல பதில், நல்ல பைலட்:), பாவம் அப்பாவிப் பொதுமக்கள்:)(விமானப்பயணிகள்).

பி.கு::::
///அதெப்படி நான் அறுசுவை திறந்ததும் சரியாகப் பார்த்துப் பதிவு போட்டீர்கள்? :) நலமா? லதா, பிள்ளைகள் நலம்தானே?.///

ஹைஷ் அண்ணன், இங்கே சிலபேருக்கு நினைப்பு:), தமக்காகத்தான் எல்லாம் நடக்குதென்று:), நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாம்:), ஏற்கனவே சொன்னார்கள், அந்த நினைப்புத்தான் என் பிழைப்பையும் கெடுத்திருக்கு:),, ஏன் என மேலே படியுங்கோ..

///இன்று என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எழுதுங்கள்///

இப்படித்தான் நாங்களும் அங்கே காத்திருந்தோம்... சும்மா இல்லை, கையில் சங்கிலியோடு:), ஏமாற்றிப்போட்டார்கள்:)... தலைக்கு மேலே வெள்ளம் சாண் ஏறினால் என்ன? முழம் ஏறினால் என்ன? என்ற நிலைமையாகிவிட்டது என் நிலைமை:). சரி போகட்டும் என விடவும் முடியவில்லை. நான், உங்களிடம் ஞாயம் கேட்டு வந்திருக்கிறேன்:)... அதாவது, இன்னொருவர் தனக்காகக் காத்திருக்க, அங்கு போகாமல்:), தான் இன்னொருவரின் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன் எழுதுங்கோ:) எனச் சொல்வது எந்த வகையில் ஞாயம்? எந்த வகையில் நீதி? இது எங்காவது மறைபொருளில் ஞாயப்படுத்தியிருக்கோ?:). இதுக்கொரு முடிவு எனக்குத் தெரிஞ்சாகோணும்?:):).
(குறை நினைக்கப்படாது:)).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

உங்களின் முதல் கேள்விக்கான பதில் காற்றின் அடர்த்தியை நேரடியாக கண்டு பிடிக்க முடியாது இதில் இருப்பது போல் சின்ன கணக்கு ஒன்று போட்டு கண்டு பிடிக்கலாம். (ஏற குறைய காற்றின் அடர்த்தி பெண்களின் மனம் போன்றது).

http://en.wikipedia.org/wiki/Density_of_air

அடுத்த இரு கேள்விகளின் பதில்: EGPWS (Enhanced Ground Proximity Warning System) எனும் கருவியின் மூலம் மோதலை தவிர்கலாம்.

எப்படி என்று இதில் பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=TUZbOoQrlXQ

http://www.youtube.com/watch?v=8NH6aNzcix4&feature=related

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

”பூஸ் செய்வது கொட்டம் ஆனால் அடித்தால் பாவம்” என்பார்கள்.

நான் ரொம்ப நல்ல பிள்ளை எனக்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லவே இந்த பதிவு.

///ஹைஷ் அண்ணன், இங்கே சிலபேருக்கு நினைப்பு:), தமக்காகத்தான் எல்லாம் நடக்குதென்று:), நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாம்:), ஏற்கனவே சொன்னார்கள், அந்த நினைப்புத்தான் என் பிழைப்பையும் கெடுத்திருக்கு:),, ஏன் என மேலே படியுங்கோ..

///இன்று என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எழுதுங்கள்///

இப்படித்தான் நாங்களும் அங்கே காத்திருந்தோம்... சும்மா இல்லை, கையில் சங்கிலியோடு:), ஏமாற்றிப்போட்டார்கள்:)... தலைக்கு மேலே வெள்ளம் சாண் ஏறினால் என்ன? முழம் ஏறினால் என்ன? என்ற நிலைமையாகிவிட்டது என் நிலைமை:). சரி போகட்டும் என விடவும் முடியவில்லை. நான், உங்களிடம் ஞாயம் கேட்டு வந்திருக்கிறேன்:)... அதாவது, இன்னொருவர் தனக்காகக் காத்திருக்க, அங்கு போகாமல்:), தான் இன்னொருவரின் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன் எழுதுங்கோ:) எனச் சொல்வது எந்த வகையில் ஞாயம்? எந்த வகையில் நீதி? இது எங்காவது மறைபொருளில் ஞாயப்படுத்தியிருக்கோ?:). இதுக்கொரு முடிவு எனக்குத் தெரிஞ்சாகோணும்?:):).
(குறை நினைக்கப்படாது:)). ///

அப்பா நிம்மதியா தூக்கம் வரும் அனைவருக்கும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன் விளக்கத்துக்கு மிக்க நன்றி. காற்றின் அடர்த்தியைக் கணக்குப் போட்டுப் பார்ப்பதென்றால், (நீங்கள் தந்த லிங் பார்த்தேன்), பைலட் விமானத்தை ஓட்டுவாரோ, கொப்பியும் பென்னுமெடுத்துக் கணக்குப் பார்ப்பாரோ..... சிந்திக்கக் கஸ்டமாக இருக்கு.

யூ ரியூப்பில் முதலாவது மிகவும் நன்றாக இருக்கு, பார்க்கத் தெளிவாக இருக்கு.

இரண்டாவதில், ஒலிக்கும் குரல், எயார்போட்டிலிருந்து பைலட்டுக்கு தகவல் வருகிறதோ?

பி.கு:
குறை நினைக்கப்படாது, பொல்லுக்கொடுத்து அடிவாங்குவதற்கு அடுத்தவர்கள் பொறுப்பாளிகள் அல்ல:)....

///(ஏற குறைய காற்றின் அடர்த்தி பெண்களின் மனம் போன்றது)./// அந்தக்காலத்தில் சொன்னதையே, இன்னும் எத்தனை யுகங்களுக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப்போறீங்கள்?:),
உண்மை அதுவல்ல "பெண்களின் மனதைப் புரிந்துகொள்ளக்கூடியளவு, "புத்திக்கூர்மையுள்ள ஆண்கள்" இன்னும் பிறக்கவில்லை".... இதுதான் உண்மை:).
/////////////// //////////////////// /////////////////////////// /////////////

இமா... இமா.... நான் உங்கட கட்சிதான், இங்கேயும் வராமல் விட்டுவிடாதீங்கோ:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்