விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

ஹைஷ் அண்ணன், ஹைஷ் அண்ணன் ஓடிவாங்கோ...:)
நீங்கள்தான், உங்கள் தலைப்புத்தவிர வேறெதையும் படிப்பவர்மாதிரித் தெரியவில்லையே, நான்கூட அந்நேரம் அறுசுவை பார்த்துக்கொண்டிருந்தமையால் கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேன்.

இத்தலைப்பை ஒருதடவை பாருங்கள்....
.....ஜாலியோ ஜாலியான அரட்டை 91.

பாவம் ஒருவர் நித்திரை இல்லாமல் இருக்கிறார்:), ஏதாவது வைத்திய முறை இருந்தால் சொல்லுங்கோ அவருக்கு..

மு.கு: இது அரட்டை இல்லை:),எனக்குத்தான் அரட்டை தெரியாதே:), எனக்குள்ள உதவி செய்யும் மனப்பாங்குதான் எல்லாத்துக்கும் காரணம்:) எங்கோ புகைக்குதே:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

எனும் திருவள்ளுவரின் வாக்கை காப்பாற்றி என்னையும் காப்பாற்றியதற்காக இன்னும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.(இதைவிட பெரிய எழத்து இதில் வரதால் இந்த சைஸ் எழுத்திலேயே நன்றி சொல்லி இருக்கிறேன்) (நல்ல வேளை அன்பு சகோதரி இமாவிற்கு நல்லிரவுதான்)

நல்ல வேளை அன்பு சகோதரி இமா >>>>>??? இது போல் தூரமா போட்ட கேள்வி குறியை கண்டு பிடிக்கவில்லை என்றதால் நான் தப்பித்தேன்.

இதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது, அருசுவையை நாட்டை காப்பது போல் இங்குள்ள அன்பு சகோதர, சகோதரிகள் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று. அமாம் அது எதற்கு....? (போட்டு கொடுக்க இல்லைதானே??)

அன்பு தங்கை அதிரா இது நீங்கள் கூறியது போல் அரட்டை அடித்துக் கொண்டு விமானபயணம் செய்யும் இழைதான், அன்பு சகோதரி இமா,திருமதி சேகர் மற்றும் அரட்டையில் இந்த பெஞ்ச் மேலே, விங் மேலே ஏற்றி விடும் உங்கள் பதிவுகளை படித்த பின் இந்த இழை ஆரம்பத்தில் அன்பு சகோதரி ஸாதிகா கேட்டது நினைவுக்கு வரவே என் முதல் அனுபவம்.

நான் படிக்கும் போது தமிழ் மட்டும் படித்தால் போதும் ஆங்கிலம், ஹிந்தி எல்லாம் தேவை இல்லை என்று தமிழில் நுண் அணுவியல், ஆற்றலியல் படித்ததால் ஆங்கிலம் படிக்க மட்டும் தெரியும் ஆனால் பேச தெரியாது, என் நண்பன் (தமிழ்) பிர்தானியாபுரத்தில் 5 வருடம், யூஎஸ் இல் 6 வருடம் படித்தவன் நுனி நாக்கின் நுனியில் ஆங்கிலம் பேசுபவன் சே சே அப்படி சொல்ல முடியாது நான் ஆங்கிலத்தில் ஹலோ சொல்லும் முன் அவன் ”சந்துல சிந்து பாடுவதற்கு பதில் ராமாயணம், மகாபாரதமே சொல்லிடுவான் அவ்வளவு வேகமாக ஆங்கிலம் பேசுவான்”

ஒரு நாள் இருவரும் பறக்க வேண்டி இருந்ததால் விமானத்தை தரையில் இறக்க கன்ரோல் டவரில் வயர்லஸ் முலம் அனுமதி பெற்ற பின் தான் தரையிறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் எனக்கோ “Control tower, permission to land” என்ற வார்த்தையை ஆங்கிலதில் பேச மிகவும் தயக்கம் ஆனால் என் நண்பனோ எனக்காவும் (அவன் வேறு விமானத்தில் இருந்தான்) அவனுக்காகவும் அனுமதி கேட்க நான் விமானத்தை அனுமதி இல்லாமல் தரையிறக்கி விட்டேன். பின் இருவருக்கும் பனிஷ்மெண்ட் கொடுத்துவிட்டார்கள்.

இருவரும் தலைவரின் அலுவலக அறையில் இருந்து 200 அடி தூரத்தில் இருக்கும் ஒரு அடர்த்தியாக வெட்டப்பட்ட போகன்வில்லா புதரின் உள் தலையை விட்டு சத்தமாக தலைவர் இருக்கும் அறையில் அவருக்கு கேட்கும் அளவுக்கு நான் ”இனிமேல் அனுமதி இல்லாமல் தரையிறக்க மாட்டேன்” என்றும் என் நண்பன் “இனிமேல் நான் வயர்லஸில் பேசவே மாட்டேன்” என்றும் கத்தி சொல்லவேண்டும் என்பதுதான், மாலை சூரியன் மறையும் வரை பனிஷ்மெண்ட். சுமார் 7 மணி நேரம் கத்தி கத்தி தொண்டை காய்ந்து ஒரு வராரம் இருவரும் பேசமுடியாமல் ஆகிவிட்டோம்.

மற்ற பதில் பதிவு அங்கு போட்டு விட்டேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலே நான் குறிப்பிட்ட அந்த நண்பன் 1987 வருடம் ஒரு கோர விமான விபத்தில் உயிர் இழந்து விட்டாலும் இன்று உங்கள் அனைவரின் மனதிலும் வாழ்கிறேன் என்று அவன் ஆன்மா சாந்தி அடையும் என்பதற்காக அவனுக்காக இந்த தனிப் பதிவு.

என்றும் மறக்காத உன் உயிர் நண்பன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,

மூக்கு நீளத்தைப் பார்த்த நான் இதை மட்டும் கவனிக்காமல் விட்டிருப்பேனா? 'அம்புச்' சகோதரி என்று வாசித்தேன். :)

சுவாரசியமாகக் கதை சொல்லிவிட்டு இப்படி ஒரு முடிவையும் சொல்கிறீர்கள். உங்கள் நண்பர் ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஆசிரியர்களில் பலவகை உண்டு தரையில் கௌதம புத்தர் போல் இருப்பார்கள் ஆனால் விமானத்தில் பின்லெடன் போல் ஆகி விடுவார்கள். அதனால் விமானம் ஓட்டும் போது தவறு செய்தால் தரையிறங்கியதும், ஓடுதளத்தின் ஒரு ஓரத்தில் இறக்கி விட்டு (23 கிலோ எடையுள்ள பாரசூட்டுடன்) விங்கை பிடித்து கொண்டு ஒடி வர செய்வார்கள், மூச்சு இறைக்காமல் ஓடினால் இன்னும் விமானத்தின் வேகத்தை அதிகரித்து ……இதற்கு மேல் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். எனக்கும் 3 பின்லேடன்களும், ஒரே ஒரு கௌதம புத்தரும் ஆசிரியராக கிடைத்தார்கள்.

இல்லை என்றால் அவரகள் வண்டியில் உட்கார்ந்து கொண்டு நம்மிடம் ஒரு அரை அடி ஸ்கேலை கொடுத்து ஓடுதளத்தினை அதனால் அளக்க சொல்வார்கள். (சாதாரணமாக 9000 – 12,000 அடி நிளம் இருக்கும்) அதை இரண்டால் பெருக்கி எல்லாம் சொல்ல முடியாது. அதான் கூடவே வண்டியில் வருகிறார்களே. உட்கார்ந்து எழுந்து ஒருபக்கம் அளந்து முடித்தால் 10 நாளைக்கு எழ முடியாத அளவுக்கு இடுப்பு வலி வந்து விடும்.

தமிழர்கள் எவ்வளவோ பரவாயில்லை (உடனே அன்பு தங்கை அதிரா தற்பெருமை வேண்டாம் என்று வந்து விட போகிறார்கள்) ஆனால் சந்தா சிங், பந்தா சிங் போன்றவர்கள் எவ்வளவு நாள் ஆனாலும் ஆங்கிலம் கற்க மாட்டார்கள். ஒரு தடவை நான் பறந்து கொண்டு இருக்கும் போது வயர்லஸில் நடக்கும் உரையாடல்களை கேட்டு இருக்கும் போது தரை இறங்க வேண்டிய ஒரு விமானம் மீண்டும் மேலே போய் விட்டது அப்போது நடந்த உரையாடல்:

ATC (Air Traffic Control): IC 448 request reason for over shoot. (நீங்கள் இறங்காமல் போனதற்க்கு என்ன காரணம்)
IC 448: ATC there is a COW BOY on the runway. (ஓடுதளத்தில் ஒரு ”கௌபாய்” இருக்கிறான்
ATC: say again (கன்ரோல் டவருக்கு புரியாததால் நீங்கள் சொன்னதை மீண்டும் சொல்லுங்கள்)
IC 448: There is a small boy cow on the runway. (ஒடுதளத்தில் ஒரு சின்ன ஆண் பசு நிற்கிறது)

அதன் பிறகு வயர்லஸில் இருந்த அனைவரும் ”சிரியா” சிரிச்சோம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

எனும் திருவள்ளுவரின் வாக்கை காப்பாற்றி என்னையும் காப்பாற்றியதற்காக இன்னும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்/// இங்கும் அதே கதைதான்... கண்போனபின்.....

///இதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது, அருசுவையை நாட்டை காப்பது போல் இங்குள்ள அன்பு சகோதர, சகோதரிகள் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று. அமாம் அது எதற்கு....? (போட்டு கொடுக்க இல்லைதானே??)/// நிட்சயமாக போட்டுக்கொடுக்க இல்லை..... காட்டிக்கொடுக்க:).

///அன்பு தங்கை அதிரா இது நீங்கள் கூறியது போல் அரட்டை அடித்துக் கொண்டு விமானபயணம் செய்யும் இழைதான்/// இது சூடுகண்ட பூனை:) உங்கள் (அரசியல்வாதிபோல்) வாக்குறுதிகளை நம்பி, சத்தியமாக(கடவுளே நான் சும்மா) நான் இனி அரட்டையடிக்கமாட்டேன்:).

///ஒரு அடர்த்தியாக வெட்டப்பட்ட போகன்வில்லா புதரின் உள் தலையை விட்டு சத்தமாக தலைவர் இருக்கும் அறையில் அவருக்கு கேட்கும் அளவுக்கு நான் ”இனிமேல் அனுமதி இல்லாமல் தரையிறக்க மாட்டேன்” என்றும் என் நண்பன் “இனிமேல் நான் வயர்லஸில் பேசவே மாட்டேன்” என்றும் கத்தி சொல்லவேண்டும் என்பதுதான்/// கற்பனை பண்ணிப்பார்த்தேன் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

இருப்பினும் உங்கள் நண்பனின் மரணம் மனதில் ஏதோ செய்கிறது.

ஆண் பசுக்கதை நன்றாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேகங்களை இருவகைகளாக பிரிக்கலாம் ஒன்று அதன் தன்மையை பொருத்து அடுத்தது அதன் உயரத்தை பொருத்து.

1. மேகத்தின் தன்மையை பொருத்து அதை இரு வகைகளாக பிரிக்கலாம்

a. ஒன்று நம் ஊரில் விற்கும் ”சோன்பப்டி” போல இழை இழையாக இருப்பது அதன் பெயர் “ஸ்டேட்ரஸ் - Stratus”.

b. இரண்டாவது வகை நாம் சமைக்கும் காலிப்ளவர் மாதிரி இருக்கும் அதன் பெயர் “க்யூமுலஸ் - (Cumulus)”

2. உயரமும் அதன் தன்மைமைகளும்:

a. தாழந்த உயரத்தில் உள்ள மேகங்கள் (தரையில் இருந்து 3000 அடிகள் வரை)

i. ஸ்ரெடஸ்
ii. க்யூமுலஸ்

b. மிதமான உயரத்தில் இருக்கும் மேகங்கள் (8,000 முதல் 10,000 அடிகள் வரை)

i. அல்டோ ஸ்ரெடஸ்
ii. அல்டோ க்யூமுலஸ்

c. அதிக உயரமாக உள்ள மேகங்கள் (20, 000 அடிகளுக்கு மேல்)

i. சிரோ ஸ்ரெடஸ்
ii. சிரோ க்யூமுலஸ்

3. அரிதாக காணப்படும் இன்னும் சில மேகங்களின் பெயர்கள் லெண்டிகுலர் மேகம்(Lenticular Cloud), மேமொடஸ் மேகம் (Mamatus Clouds), வேவ் மேகம் (Wave Clouds)

4. கடைசியாக “க்யூமுலோ நிம்பஸ்”. இவன் தான் மிகவும் மோசமான வில்லன் மேகம் அதிக அளவில் விமான விபத்துகளுக்கு காரணமான மேகம். இதன் சில குணாதிசயங்கள்:

a. இவர்தான் இடி, மின்னலை தன்னுள் வைத்து இருப்பவர்.

b. ஒரு நாளைக்கு சுமார் 44,000 இது போன்ற மேகங்கள் உலகம் முழுவது உற்பத்தியாகிறது.

c. இது சுமார் 1500 அடி உயரத்தில இருந்து 66,000 அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது.(பயணிகள் விமானம் 25,000 முதல் 45,000 அடிகள் வரை பொதுவாக பறக்கும்)

d. இதில் நீரில் உள்ள சுழல் போல் காற்று ஒரு வினாடிக்கு 260 அடிகள் வரை விமானத்தை தூக்கி போடும் அளவிற்கு ஆற்றல் உள்ளது.

e. இதில் உள்ள குளிர்ந்த நீர் துளிகள் என்ஜின் உள் சென்றால் அதன் நெருப்பு அணைந்து ஐஸ் ஆக மாறிவிடும்.

f. மேலும் இதன் உள் இருக்கும் ஐஸ் உருண்டைகள் (ஆலங்கட்டி மழையில் வருமே) அது விமானத்தின் மீது பட்டால் விமானத்தின் கன்ரோல்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

g. இதில் பல லட்சம் ஓல்ட் மின்சாரம் இருக்கும் அதுதான் பூமியை நோக்கி மின்னலாக மாறி தாக்கும்.

5. அகில உலக விதிகளின் படி விமானத்தில் ரேடார் கருவியின் மூலம் இந்த மேகத்தை 20 மைல் அல்லது 40 கி.மி தூரம் வைத்துதான் விமானத்தை ஓட்ட வேண்டும்.

6. எல்லா விமானத்திலும் (Static Wick) ”ஸ்டேடிக் விக்” என்ற திரி போன்ற அமைப்பும், மின்சாரத்தை கடத்து டயர்களும் பொருத்தப் பட்டு இருக்கும்.

படம் 41,42,43, 44 பார்க்கவும்

மேலும் இந்த லிங்கில் பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=velxZEWhrDo

இதன் பிறகு வானத்தை பார்த்தால் கதை புத்தகம் படிப்பது போல் படித்துக் கொண்டே இருக்கலாம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,

வழக்கமாக எனக்கு தும்பு மிட்டாய்தான் நினைவு வரும். சோன்பப்டி :), இதுவும் என் 'ஃபேவரிட்' தான்.

மேலே உயரப் பறக்கையில், வெவ்வேறு உயரங்களில் சூரியன், சந்திரன் எப்படித் தெரியும்? அறிந்து கொள்ள ஆவல்.

இமா

‍- இமா க்றிஸ்

தங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சாதாரண பயணிகள் விமானம் 25,000 முதல் 45,000 அடிகள் உயரம் வரைதான் பறக்கும். நம் பூமியின் உருண்டை வடிவமான வளைவை பார்க்க வேண்டும் என்றால் 37,000 அடிகளுக்கு மேலாகதான் அந்த வளைவே லேசாக தெரியும். அதனால் சாதாரண விமானத்தில் பறக்கும் போது பூமியை பார்த்தால் எந்த வித மாற்றமும் தெரியாது. அதே போல் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் வெகு தொலைவில் உள்ளதால் அதிலும் எந்த மாற்றமும் தெரியாது. ஆனால் காற்றில் உள்ள மாசு குறைவாக இருப்பதால் பூமியில் இருந்து பார்பதை விட மிக தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும்.

நமது கடல் எல்லை தூரம் 12 நாட்டிக்கல் மைல் (Nautical Miles) எனபது சாதரண மனிதனின் சராசரி உயரம் 6 அடி என்றால் நாம் கடலில் 12 மைல் தூரம் வரைதான் கப்பலை பார்க்கமுடியும் அதன் பின் பூமியின் உருண்டை தன்மையினால் தொடுவானத்திற்கு கீழ் கப்பல் போய் விடும். நம் உயரம் அதிகரிக்க அதிகரிக்க நாம் பார்க்கும் எல்லையும் அதிகரிக்கும் அதன் கணக்கு தூரம் (நாட்டிகல் மைல்கள்)=1.05x√நம் உயரம் (அடிகள்). விரிவாக என அலுவலக ஆய்வு முடிந்ததும் பகுதி 2 எழுதுகிறேன்.

அன்பு சகோதரன்

பி.கு:இந்த இழை முற்றும். இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும், அருசுவை அட்மின் அன்பு சகோதரர் பாபு & குழுவினருக்கும் என் நன்றிகள் பல.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்