புஸ் புஸ் பூரி வேணும்

அனைவருக்கும் வணக்கம்.

பூரி புசு புசு வர என்ன செய்யனும்? சப்பாதிக்கும், பூரிக்கும் மாவு பிசைய மாறுதல்கள் ஏதாவது இருக்கா? ஒரே மாவுல செய்தால் நல்ல வராதா?

http://www.arusuvai.com/tamil/node/5751

idho

சப்பாத்தி/ பூரி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. மாவு (தேய்க்கும்) பரத்தும்போது, ரொம்ப மெல்லிதாக, அப்பளம் போல‌ப் பரத்தக் கூடாது.

2. பரத்திய பிறகு, ரொம்ப நேரம் வைத்திருக்கக் கூடாது. உடனே சுட்டு விட வேன்டும்.

3. அடுப்பில் போட்ட பிறகு, லேசாகக் க‌ரண்டியால் அழுத்தி விட வேண்டும்.

4. இவைகளைச் சரியாகச் செய்தாலே, பொங்கி வரும். நாளாக, நாளாகப் பழகி விடும். முடிந்தவரை சோடா உப்பு சேர்க்காமல் செய்வது நல்லது.

5. சப்பாத்திக்கு மாவு தளரப் பிசைய வேண்டும்.(இழுத்தால் ரப்பர் போல வரவேண்டும்.) ஆனால், பூரிக்கு தண்ணீர் குறைவாகச் சேர்க்க வேண்டும். (இழுபடாமல், பிய்ந்து வர வேண்டும்)

நான் பூரிக்கு மைதாவும் சப்பாத்திக்கு கோதுமை மாவும் உபயோகிப்பேன் நல்லா வரும்
நானும் பேகிங் பவுடர் எல்லாம் போடுவதில்லை ஆனால் நல்ல க்ரிஸ்பியாக வரும்..நல்ல மாவை குழைக்கவும்..சில சமயம் நான் வேக வைத்த உருளை கிழங்கை மசித்து சேர்த்து பூரி போடுவதுண்டு க்ரிஸ்பியாக இருக்கும் .நல்ல மொருமொருன்னு இருக்க வேண்டுமென்றால் 3 ஸ்பூன் ரவை +1/4 ஸ்பூன் சக்கரை கலந்து செய்தால் நல்ல இருக்கும்

நன்றி திருமதி.ஹுசைன் அக்கா. சப்பாத்தி அருமையா வருது அக்கா. பூரியில தான் சில தப்பு நடக்குது. 1) மெல்லிதாக தேய்கிறேன், 2) தண்ணீர் கொஞ்சம் அதிகமாயிடுது. ஆனால் நீங்கள் சொல்வது போல நான் சோடா உப்பு சேர்ப்பதே கிடையாது அக்கா.

மிக்க நன்றி அக்கா.

சுபா

நன்றி திருமதி.தளிகா அக்கா. சப்பாத்தி அருமையா வருது அக்கா. பூரியில தான் சில தப்பு நடக்குது. மைதா சேர்த்தா என் கணவருக்கு பிடிக்கவில்லை.மிக்க நன்றி அக்கா. அதனால் நான் மைதா சேர்பதில்லை.

மிக்க நன்றி அக்கா.

நான் பூரியும் கோதுமையில்தான் செய்கிறேன். தளிகா சொன்னதுபோல் ரவை, சீனி, பட்டர் ஆகியவை சேர்த்துப் பிசையுங்கள். செய்யச் செய்ய நல்லா வரும்.

பாதி மைதாவும் பாதி கோதுமையிம் சேர்த்து செய்யும் பூரியும் நல்லா வரும்..மொத்ததில் பூரி ஆசை கிளம்பிடுச்சு இங்க இங்க எண்ணை தவிர்க்க பூரி செய்வதே இல்லை
இன்று பூரியும் கிழங்கு குருமாவும் செய்து விட வேண்டியது தான்

சரி அக்கா. செய்து பார்க்கிறேன்.

மிக்க நன்றி.

ஆசைய கிளப்பிடேனா? திட்டாதீங்க அக்கா. நீங்க சொன்னபடி செய்து பார்த்திட்டு அப்பறமா சொல்றேன்.

மிக்க நன்றி.

கோதுமை மாவு ,மைதா மாவு, கொஞ்சம் அரிசி மாவு , ரவா ஊர வச்சது சேத்து பூரி சுட்டுட்டு சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்