தேதி: July 2, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் மெல்லிய சுடுநீர் எடுத்து, அதில் உப்பு போட்டு கலக்கி காலிஃப்ளவரை ஒவ்வொரு பூவாக எடுத்துப் போடவும்.
அரை மணி நேரத்திற்கு பின்பு தண்ணீரில் இருந்து எடுக்கவும்.
காரட்டை துருவியில் துருவிக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாயையும், கறிவேப்பிலையும் கிள்ளிப் போடவும்.
துருவி வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேக விடவும்.
3 நிமிடத்தின் பின்பு மூடியை திறந்து மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து கிளறி திரும்பவும் மூடிவிடவும்.
காலிஃப்ளவர் வெந்து தண்ணீர் வற்றியதும் ஒருமுறை கிளறி இறக்கவும்.
இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த வறையை உதிரியாக வடித்து சாதத்தின் மேல் போட்டு கிளறி காலிஃப்ளவர் சாதமாகவும் சாப்பிடலாம்.
Comments
நான் அறுசுவைக்கு புதுசு..
நான் அறுசுவைக்கு புதுசு.. புதிதாக திருமணமானவள்.. என் கணவருக்கு காலிஃபிளவர் மிகவும் பிடிக்கும்.. இதேபோல வேறு dish send பண்ணுறீங்களா? Please...
KEEP SMILING ALWAYS :-)