தக்காளிப்பழ ஜாம்

தேதி: July 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

தக்காளி - 750 கிராம்
சீனி - 100 கிராம்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி (விருப்பமென்றால்)
எலும்பிச்சம்பழப்புளி - 4 துளி


 

தக்காளி பழங்களை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தக்காளிப்பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் கொதித்த நீரை ஊற்றவும்.
கொதித்த நீரை ஊற்றிய பின்னர் ஒரு தட்டை வைத்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
5 நிமிடத்திற்கு பிறகு எடுத்து தோலை நீக்கி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு அடிகனமான பாத்திரத்தில் போடவும்.
பின்னர் தக்காளியுடன் சீனியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பிறகு அடுப்பில் வைத்து அடிப்பிடிக்க விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
கரண்டியால் கலவையை எடுத்து பார்க்கும் பொழுது கெட்டியாக விழ வேண்டும். அதுவே ஜாமின் பதம். இந்த பதம் வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால் இறக்கும் முன்பு வெனிலா எசன்ஸை சேர்த்து கிளறவும்.
நன்றாக ஆறிய பின்பு 4 துளி எலும்பிச்சம்பழப்புளி சேர்க்கவும். பின்பு ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவையான போது பயன்படுத்தவும். இந்த தக்காளிப்பழ ஜாம் குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜாமினைப் பயன்படுத்தும் போது உலர்ந்த கரண்டி அல்லது உலர்ந்த கத்தியினைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் கெடாமால் இருக்கும். சில நாடுகளில் ஜாம் செய்வதற்குரிய சீனி கிடைக்கிறது அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வத்சலா
தக்காளி ஜாம் சூப்பர், ஒருதடவை செய்ய ஆவலாக இருக்கு செய்ததும் சொல்வேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் குறிப்புகள் எல்லாமே நன்றாக இருக்கு.
உங்கள் சேவை தொடரட்டும்.
வாழ்த்துக்களுடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் வத்சலா! உங்கள் தக்காளிபழஜாம் நன்று:) ஓர் நல்லகுறிப்பு. எங்கள் வீட்டில் சில சமையம் நிறைய தக்காளிப்பழம் இருக்கும், அவற்றை என்னசெய்வதென்று தெரியாமல் D.விரிசரில் போட்டு வைப்பேன். நீங்கள் கொடுத்த குறிப்பு எனக்கு மிகவும் பிரயோசனமாக அமைந்துள்ளது. நன்றி, செய்து பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் வத்சலா
தக்காளிப்பழ ஜாம் நல்லாI குறிப்பு குடுத்திருக்கிரிங்கள் குறிப்புக்கு நன்றி.
செய்து பாத்திற்று சொல்கிறேன்.
அன்பு தோழி
சுகா

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

வத்சலா. நான் அவசியம் செய்துவிட்டு சொல்கிறேன்.

அதிரா, இப்பொழுது தக்காளிப் பழம் நிறைய கிடைக்குமே.நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.

இளவரசி, உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

ராணி, நிறைய பழங்கள் கிடைக்கும் போது செய்து பாருங்கள். எனது அண்ணியின் பெயரும் யோகராணி.நாங்கள் ராணி அண்ணி என்றுதான் கூப்பிடுவோம்.உங்களையும் ராணி என்றுதான் கூப்பிடுவார்களா?

சுகா, நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.

விஜி, நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வத்சலா... வத்சலா... ஓடியாங்கோ... நாங்க செய்துட்டோமில்ல.. ரொம்ப அருமையா இருக்கு. இனி ஜாம் வெளிய வாங்க வேண்டாம். :) நல்ல குறிப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா
உடனே செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.இனி மேல் அடிக்கடி செய்து அசத்துங்கோ.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் வத்சலா! இன்று தக்காளிபழ ஜாம் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. நன்றி. உங்கள் அண்ணியின் பெயரும் யோகராணியோ? என்னையும் ராணி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி, தக்காளிபழ ஜாம் செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"